சுவாமி பூமானந்த தீர்த்தர்

சுவாமி பூமானந்த தீர்த்தர் (Swami Bhoomananda Tirtha) (தேவநாகரி: स्वामी भूमानन्द तीर्थ; மலையாளம்: സ്വാമി ഭൂമാനന്ദ തീര്ത്ഥ), இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த சந்நியாசியும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆற்றிய வேதாந்தம், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் பாகவதம் தொடர்பான சொற்பொழிவுகளால் புகழ் பெற்றவர். மேலும் கேரளாவில், இந்து இந்து சமய மரபிற்கும், சட்டத்திற்குப் புறம்பான சடங்குகளை, இந்து சமயக் கோயில்களில் நடைபெறுவதை இயக்கங்கள் அமைத்து தடுத்தவர்.[2] வேதாந்தம், பாகவதம், மனித ஆற்றல் வளர்ச்சி தொடர்பாக பல நூல்களை ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட்டுள்ளார்.[2][3][4][5][6][7][8][9] திருச்சூர் அருகே வெங்கினிசேரி எனும் கிராமத்தில் நாராயண ஆஸ்ரம தபோவனம் நடத்தி வருகிறார். இவ்வாசிரமத்தில் மாணவர்களுக்கு வேதாந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. [10][11]

சுவாமி பூமானந்த தீர்த்தர்
சுவாமி பூமானந்த தீர்த்தர்
பிறப்புமே 13, 1933
பர்லிக்காடு, திருச்சூர், கேரளா, இந்தியா
நிறுவனர்நாராயண ஆஷ்ரம தபோவனம் [1]
தத்துவம்அத்வைதம்
குருபாபா கங்காதர பரமஹம்சர்
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)சுவாமி நிர்விஷேசானந்த தீர்த்தர், மாதா குருப்பிரியா,
மேற்கோள்"வேதாந்தம் துறவிகள் மற்றும் அறிஞர்களுக்கும் மட்டும் ஒதுக்கப்பட்டதல்ல. இது முன்னோர்களின் ஒரு பொழுது போக்கும் அல்ல. உண்மையில், சரியான முறையில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மனிதனை செயல்படுத்தி, முழு மனிதாக்கி, முழு மனநிறைவை அடைய உதவுகிறது. ஒருவர் எந்த துறையில் பணிபுரிந்தாலும், வேதாந்தம், அவர்களை அத்துறையில் கவர்ந்து பலப்படுத்துகிறது"

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு