சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்)
சூர்யவம்சம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடர் 21 செப்டம்பர் 2020 1முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி 21 ஆகத்து 2021 ஆம் ஆண்டு அன்று 292 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடர் ஜீ தெலுங்கு தொடரான 'அமெரிக்கா அம்மாயி' என்ற தெலுங்கு மொழி தொடரை மையமாக வைத்து கே. கார்த்திகேயன் என்பவர் இயக்க, பூர்ணிமா பாக்யராஜ், நிகிதா ராஜேஷ் மற்றும் ஆஷிஷ் சக்ரவர்த்தி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[3][4]
சூர்யவம்சம் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் காதல் |
இயக்கம் | துர்கா சரவணன் |
நடிப்பு |
|
இசை | சேகர் சாயி பரத் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 292 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | எஸ்.சபிரேஷ் குமார் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | மாங்க் ஸ்டுடியோஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 21 செப்டம்பர் 2020 21 ஆகத்து 2021 | –
Chronology | |
முன்னர் | நாச்சியார்புரம் (19:00) |
பின்னர் | கோகுலத்தில் சீதை (19:00) இரட்டை ரோஜா (13:00) |
தொடர்புடைய தொடர்கள் | அமெரிக்கா அம்மாயி (தெலுங்கு) தேரே தில் விச் றேன் தே ([[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]) |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
கதை
தொகுதனது மகள் கல்யாணி, ஒப்புதலுக்கு எதிராக திருமணம் செய்ததற்காக குடும்பத்திலிருந்து அவளை ஒதுக்கிவைக்கும் அன்னபூரணி பற்றிய கதை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்யாணியின் மகள் சமந்தா தனது தாயை மீண்டும் குடும்பத்தில் இணைக்க முயற்சிக்கிறாள்.[5]
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- நிகிதா ராஜேஷ் - சமந்தா
- ஒரு அமெரிக்கப்பெண், க்ரிஷ் மற்றும் கல்யாணியின் மகள்.
- ஆஷிஷ் சக்ரவர்த்தி - சூர்யா
- நேர்மையான ஆண்மகன், ஜெயந்தி மற்றும் சங்கரனின் மகன்.
- பூர்ணிமா பாக்யராஜ் - அன்னபூரணி (அன்னம்மாள்)
- சூரியவம்சம்" குடும்பத்தின் தலைவி; செல்வ கணபதியின் மனைவி; சண்முகம், சங்கரன் மற்றும் கல்யாணியின் தாய்; ராஜி மற்றும் ஜெயந்தியின் மாமியார்; சூர்யா, சமந்தா, பத்மாவதி, சந்துரு மற்றும் லீலாவதி ஆகியோரின் பாட்டி.
துணை கதாபாத்திரம்
தொகு- அனிதா வெங்கட் - ராஜி
- பத்மாவதி மற்றும் சந்துருவின் தாய்; சண்முகத்தின் மனைவி.
- பிர்லா போஸ் - சண்முகம்
- ராஜியின் கணவர்; பத்மாவதி மற்றும் சந்துருவின் தந்தை.
- சிந்து - பத்மாவதி
- ராஜி மற்றும் சண்முகத்தின் மகள்; சந்திருவின் மூத்த சகோதரி.
- ஜெயராமன் மோகன் - சீனிவாசன்
- பத்மாவதியின் கணவன்
- மதன் - சந்துரு
- ராஜி மற்றும் சண்முகத்தின் மகன்; பத்மாவதியின் தம்பி.
- கரோலின் ஹில்ட்ரட் - ஜெயந்தி
- சூர்யா மற்றும் லீலவதியின் தாய்; சங்கரனின் மனைவி.
- கஜேஷ் - சங்கரன்
- ஜெயந்தியின் கணவர்; சூர்யா மற்றும் லீலாவதியின் தந்தை.
- தாச்சாயனி - லீலாவதி
- ஜெயந்தி மற்றும் சங்கரனின் மகள்; சூர்யாவின் தங்கை.
- ராமச்சந்திரன் - நாராயணன்
- செல்வ கணபதியின் தம்பி; சூர்யவம்சத்தின் எதிரி.
- சந்தனா - கல்யாணி
- க்ரிஷின் மனைவி மற்றும் சமந்தாவின் தாய்.
- ரஃபி உல்லா - க்ரிஷ்
- சமந்தாவின் தந்தை மற்றும் கல்யாணியின் கணவர்.
- ராஜேஷ் - செல்வ கணபதி (தொடரில் இறந்துவிட்டார்)
- அன்னம்மாளின் கணவன்; சண்முகம், சங்கரன் மற்றும் கல்யாணியின் தந்தை; ராஜி மற்றும் ஜெயந்தியின் மாமனார்; நாராயணனின் மூத்த சகோதரர்; சூர்யா, சமந்தா, பத்மாவதி, சந்துரு மற்றும் லீலாவதியின் தாத்தா.
- கவிதாலயா கிருஷ்ணன் - சீனிவாசனின் தந்தை
நடிகர்களின் தேர்வு
தொகுநடிகை பூர்ணிமா பாக்யராஜ், குடும்பத் தலைவராக நடிக்க தேர்வு செய்யப்பட்டார், அருந்ததி தொடர் புகழ் நிகிதா ராஜேஷ் பெண் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார், MR. சென்னை இன்டர்நேஷனல் 2019 வெற்றியாளரான ஆஷிஷ் சக்ரவர்த்தி ஆண் கதாபாத்திரத்தில் தேர்வு செய்யப்பட்டார். நடிகர் ராஜேஷ், அனிதா வெங்கட், கரோலின், ராமச்சந்திரன் மற்றும் பிற நடிகர்கள் துணை வேடங்களில் நடிக்கின்றன.[6]
தயாரிப்பு
தொகுஇந்த தொடர் மார்ச் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்படுவதற்காக திட்டமிடப்பட்டது, கொரோனாவைரசு காரணத்தால் 21 செப்டம்பர் 2020 முதல் ஒளிபரப்படுகின்றது.
மதிப்பீடுகள்
தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2020 | 3.6% | 4.2% |
2.6% | 3.3% | |
2021 | 1.7% | 2.5% |
1.2% | 2.6% |
நேர அட்டவணை
தொகுஇந்த தொடர் செப்டம்பர் 21, 2020 முதல் 14 மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 15 மார்ச் 2021 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான தேதி | நாட்கள் | நேரம் | அத்தியாங்கள் |
---|---|---|---|
15 மார்ச் 2021-ஒளிபரப்பில் | 13:00 | 162 - 292 | |
21 செப்டம்பர் 2020 - 14 மார்ச் 2021 | 19:00 | 1 - 161 |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Suryavamsam To Premiere On September 21, 2020". ZEE5.
- ↑ "சூர்யவம்சம் - புதிய மெகா தொடர்". Cimema.dimalar.com.
- ↑ "Daily soap 'Suryavamsam' to launch today". The Times of India.
- ↑ "Suryavamsam | Poornima Bhagyaraj | Coming Soon". Youtube. Zee Tamil.
- ↑ "Television has strong roles for women, says Poornima Bhagyaraj". The Times of India.
- ↑ "சூர்யவம்சமாக வரும் அமெரிக்கா அம்மாயி.. தமிழ் ரசிகர்களை கவருமா?". Tamil.samayam.com.
வெளி இணைப்புகள்
தொகுஜீ தமிழ் : திங்கள் - சனி பகல் 1 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சூர்யவம்சம் | அடுத்த நிகழ்ச்சி |
- | இரட்டை ரோஜா |
ஜீ தமிழ் : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சூர்யவம்சம் | அடுத்த நிகழ்ச்சி |
நாச்சியார்புரம் | கோகுலத்தில் சீதை |