சூர்யா கிரண் (இயக்குநர்)

சூர்யா கிரண் ( Surya Kiran, 6 செப்டம்பர் 1974 – 11 மார்ச் 2024) தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய இயக்குநரும் மற்றும் நடிகரும் ஆவார். அக்கினேனி நாகார்ஜுனா நடிப்பில் 2033இல் வெளியான சத்யம் படத்தை இயக்கி பிரபலமானவர்.[1] இவர் தெலுங்குத் தொலைக்காட்சி உண்மைநிலை நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு 4 இல் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் 7 ஆம் நாளிலேயே வெளியேற்றப்பட்டார்.[2][3]

சூர்யா கிரண்
பிறப்புசுரேஷ்
(1974-09-06)6 செப்டம்பர் 1974
இறப்பு11 மார்ச்சு 2024(2024-03-11) (அகவை 49)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்

தொழில் வாழ்க்கை

தொகு

இவர் மாஸ்டர் சுரேஷ் என்ற தனது மேடைப் பெயரில் இருநூறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றினார்.[4] வெற்றிகரமான சத்யம் (2003) மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.[5][6] தொடர்ந்து பிரம்மாஸ்திரம் , ராஜுபாய் போன்ற தெலுங்கு படங்களையும் இயக்கினார்.[7]

சொந்த வாழ்க்கை

தொகு

சூர்யா கிரண், டி. எஸ். மணி மற்றும் ராதாவுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது குடும்பம் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தது. இவரது தங்கை சுஜிதா தனுஷ் ஒரு நடிகை ஆவார். சமுத்திரம் , காசி போன்ற படங்களில் நடித்த நடிகை காவேரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேற்பாட்டால் விவாகரத்து செய்தர். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிரண் தனது 48வது வயதில், 2024 மார்ச் 11 அன்று சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.[8][9]

நடிகராக

மேற்கோள்கள்

தொகு
  1. "Satyam". சிஃபி. Archived from the original on 19 May 2015.
  2. "Bigg Boss Telugu 4's first evicted contestant Surya Kiran: I couldn't survive because the rest were doing anything to grab footage". The Times of India. 14 September 2020. Archived from the original on 26 September 2022. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  3. "Bigg Boss Telugu 4 teaser: Surya Kiran and Amma Rajasekhar pull Karate Kalyani's leg; say 'she shooed away rats in the house with her catwalk'". The Times of India. 7 September 2020. Archived from the original on 1 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  4. "Bigg Boss Telugu 4 contestant Surya Kiran: From 'Master Suresh' to 'Satyam' Surya Kiran, everything you need to know about the director". The Times of India. 6 Sep 2020. Archived from the original on 22 August 2023. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  5. "Satyam". Sify. Archived from the original on 19 May 2015. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  6. "Movie review - Sathyam". Idlebrain.com. Archived from the original on 2019-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  7. Jonnalagedda, Pranita (3 April 2017). "Satyam director set for comeback". Deccan Chronicle. Archived from the original on 23 August 2023. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  8. India Today (11 March 2024). "Telugu film director Surya Kiran dies at 48 due to ill-health" இம் மூலத்தில் இருந்து 11 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240311164914/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/telugu-film-director-surya-kiran-dies-due-to-jaundice-2513357-2024-03-11. 
  9. "Surya Kiran: 'సత్యం' దర్శకుడు సూర్యకిరణ్‌ కన్నుమూత". EENADU. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யா_கிரண்_(இயக்குநர்)&oldid=3917753" இலிருந்து மீள்விக்கப்பட்டது