சென்னெத்ஜெம்
சென்னெத்ஜெம் (Sennedjem) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் பார்வோன்களான (கிமு 1290 – 1279) முதலாம் சேத்தி மற்றும் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 – 1213) ஆகியோர்களின்ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அரசவைக் கலைஞர் ஆவார். இவர் தீபை நகரத்தில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த தேர் அல்-மதினா எனும் நகரத்தில் வாழ்ந்தவர். இவருக்கு வாய்மையின் காவலர் என்ற அரசவைப் பட்டம் உள்ளது.[2]
| ||||
சென்னெத்ஜெம் படவெழுத்து முறையில் |
---|
இவரது மம்மியுடன், இவரது குடும்பத்த்னரின் மம்மிகளும் 31 சனவரி 1886 அன்று தீபை நகரத்திற்கு அருகில் உள்ள தேர் அல்-மதினாவின் ஒரு கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] இவரது கல்லறையில், இவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய நாற்காலி, மேஜை, கட்டில் போன்ற தளவாடங்கள் இருந்தது.[4]
மன்னர்களின் சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய அரசவைப் பணியாளரான சென்னெத்ஜெம்மின் நினைவு உசாப்தி தற்போது சான் பிரான்ஸ்சிஸ்கோ கலைகள் அருகாட்சியகத்தில் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sousa, Rogerio (19 December 2019). Gilded Flesh: Coffins and Afterlife in Ancient Egypt. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781789252651.
- ↑ "Archived copy". Archived from the original on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-06-05.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Ushabti of Sennedjem from The Fine Arts Museums of San Francisco - ↑ Ta.wikipedia TT1
- ↑ BENDERITTER, Thierry. "Tombs of Ancient Egypt". www.osirisnet.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.