சென்னைக் கலாச்சாரம்

சென்னைக் கலாச்சாரம் (Chennai culture) "தென் இந்தியாவின் நுழைவாயில்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.[1] இது இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். ஒரு காஸ்மோபாலிட்டன் நகரமான சென்னை பலதரப்பட்ட மக்களின் நாகரீகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்த கலவையாகும். சென்னை ஒரு நவீன நகரம் என்றாலும், வழக்கமான கலாச்சாரங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் எல்லா கலை வடிவங்களும் நகரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. பண்டைய கோவில் கட்டிடக்கலை, நவீன உயர் மற்றும் பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவற்றிலிருந்து பாரம்பரிய உணவுகள் வரை தனித்துவமான கலவையை இங்கு காணலாம்.

வாழை இலையில் சட்னி மற்றும் சாம்பருடன் பரிமாரப்படும் தோசை

கலைகள் தொகு

இசை தொகு

 
பரத நாட்டிய இசை நிகழ்ச்சி
 
ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் கர்நாடக இசை நிகழ்ச்சி

இந்த நகரம் அதன் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளினால் அனைவராலும் நன்கு அறியப்படுகிறது.[2] ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், ஐந்து வாரகால சென்னை இசை விழா உலகின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று என விவரிக்கப்பட்டுள்ளது.[3] இந்த பருவங்களில் நகரத்தின் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கலைஞர்களால் பாரம்பரிய கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழ் மாதமான மார்கழியில் நடக்கிறது. இந்தக் காலகட்டம் சென்னை நகருக்கு ஒரு பண்டிகை மற்றும் மகிழ்ச்சியான காலமாகும். பல்வேறு வயதுகளில் உள்ள சிறந்த இசைக்கலைஞர்களால் வழங்கப்படும் இசையானது ஆன்மாவைத் தொட்டுச் செல்லும் வகையில் உள்ளது. டிசம்பர் பருவ கர்நாடக இசை சென்னை பார்வையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை அளிக்கிறது.

நாட்டியம் தொகு

சென்னை இந்திய பாரம்பரிய நடனத்திற்கும் பெயர் பெற்றது. பரதநாட்டியம் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ நடனம் ஆகும். நகரத்தின் தெற்கே கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் கலாசேத்திரா (சமஸ்கிருத மொழியில் கலைகளுக்கான இடம் எனப் பொருள்) பரதநாட்டியத்திற்கான முக்கியமான கலாச்சார மையம் ஆகும். மயிலாப்பூர் வலைப்பூவானது சென்னையின் கலை, கலாச்சாரம், இசை, நாடகம், விருதுகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும் [4]

திரைப்படம் தொகு

சென்னையில் பெரும்பாலான திரைப்படப் படப்பிடிப்பு அரங்குகள் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கே வருடம் ஒன்றுக்கு 100 தமிழ் திரைப்படங்களுக்கு மேல் தயாரிக்கப்படுகிறது, மேலும் அதன் திரைப்பட இசை நகரின் இசைத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்துறை இந்தியாவில் பாலிவுட்டுக்குப் பிறகு தமிழ் திரைப்படங்கள் தயாரிக்கும் இரண்டாவது பெரிய துறையாகும். தமிழ் திரைப்படங்களின் பிரபலங்கள் உலகளவில் பின்தொடரப்படுகின்றனர். இந்தியாவின் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட திரைப்பட அரங்குகளில் சில சென்னையில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் திரைப்படங்களை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் சென்னையில் திரைப்பட விழா நடக்கிறது. 1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா என்ற படம் முதல் முறையாக இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்ட படமாகும். தமிழ்த் திரைப்படங்கள் புலம் பெயர்ந்தோரிடமிருந்து பெருமளவிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. ஆசியா, ஆபிரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தமிழ்த் திரைப்படங்கள் விநியோகிக்கப்படுகின்றன. என மனோரமா இயர்புக் 2000 மதிப்பிட்டுள்ளது, இங்கு 20 ஆம் நூற்றாண்டில் 5,000 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரிக்கப்பட்டுள்ளது.

கலை தொகு

 
சென்னையில் கடற்கரையில் உழைப்பாளர் நினைவுச்சின்னம்
 
அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை

இந்தியாவில் பாரம்பரிய மற்றும் சமகால கலை வளர்ச்சியில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களின் படைப்புகளை கண்காட்சிகளில் வைத்து வருகிறது.

மக்கள் தொகு

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியேறிய தமிழர்கள் மற்றும் அவர்களது சந்ததியினர் ஆவர். நகரத்தில் தெலுங்கு , மலையாளி , இலங்கை தமிழ் சமூகங்கள் கூட கணிசமான அளவில் குடியேறியுள்ளன. பிரித்தானிய காலங்கள் முதற்கொண்டு பிராந்திய மையமாக விளங்கும் ஆங்கிலோ இந்திய, பெங்காலி, பஞ்சாபி , குஜராத்தி மற்றும் மார்வாரி சமூகங்கள், உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மக்கள் உட்பட பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர். சென்னை, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா ஆகியவற்றில் இருந்து தொழில்துறையிலும், தகவல் தொழில்நுட்ப மையங்களிலும் பணிபுரியும் வெளிநாட்டவர்களால் வளர்ந்து வருகிறது.

தமிழ் சென்னையின் முதல் மொழி ஆகும். தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஆங்கிலம் பரவலாகப் பேசப்படுகிறது, மேலும் வணிக, கல்வி மற்றும் பிற தொழில்களில் ஆங்கிலம் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் பேசும் தமிழ் ஆங்கில வார்த்தைகளை தாராளமாக பயன்படுத்துகிறது, இது சென்னைத்தமிழ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் பேசப்படும் பிற மொழிகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் உருது மொழிகளாகும், மேலும் அவை சென்னைத் தமிழின் சொற்களிலும் பங்களிப்பு செய்கின்றன.

சென்னை பல திருவிழாக்களை கொண்டாடுகிறது. ஜனவரி மாதம் கொண்டாடப்படும் பொங்கல், மிகவும் முக்கியமான திருவிழாவாகும், இது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தமிழ்நாட்டின் "மாநில விழாவாக" கொண்டாட்டப் படுகிறது. இது ஒரு அறுவடை பண்டிகை என்றாலும், பரவலாக நகரத்திலும் கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினம் தமிழ் நாள்காட்டி மாதமான ஏப்ரல் 14 அன்று பரவலாக கொண்டாடப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நகரமாக இருப்பதால், தீபாவளி, ஈத் மற்றும் கிறிஸ்மஸ் போன்ற அனைத்து முக்கிய மத திருவிழாக்கள் இங்கே கொண்டாடப்படுகின்றன.

குறிப்புகள் தொகு

  1. http://citypatriots.com/asia/india/tamil-nadu/chennai
  2. "Chennai". lifeinchennai.com. Archived from the original on 2009-08-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-27.
  3. "Opinion : Music Musings". https://www.thehindu.com/2005/02/03/stories/2005020301281000.htm. பார்த்த நாள்: 26 July 2018. 
  4. "Mylapore | Margazhi Isai Festival - Local , News, Events, Updates , margazhi isai festival" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-01-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னைக்_கலாச்சாரம்&oldid=3925047" இலிருந்து மீள்விக்கப்பட்டது