சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவுத் தொடருந்து
சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி (Chennai–Thiruvananthapuram Superfast Express) கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கும் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைக்கும் இடையில் பயணிக்கும் ஓர் அதிவிரைவு இரயில் ஆகும். 12695/12696 என்ற எண்களுடன் இந்த இரயில் இயங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இரயில் தினந்தோறும் சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்கிறது.[2]
சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவுத் தொடருந்து Chennai–Thiruvananthapuram Superfast Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவு |
நிகழ்நிலை | இயங்குகிறது |
நிகழ்வு இயலிடம் | கேரளம் மற்றும் தமிழ்நாடு |
முதல் சேவை | 30 மே 2006 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே |
வழி | |
தொடக்கம் | திருவனந்தபுரம் |
இடைநிறுத்தங்கள் | 19 |
முடிவு | சென்னை |
ஓடும் தூரம் | 918 km (570 mi) |
சராசரி பயண நேரம் | 16 மணி, 10 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | தினசரி |
தொடருந்தின் இலக்கம் | 12695 / 12696 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | 2 அடுக்கு குளிர்சாதனம், 3 அடுக்கு குளிர்சாதனம், படுக்கை வசதி,முன்பதிவற்றது |
இருக்கை வசதி | ஆம் |
படுக்கை வசதி | ஆம் |
காணும் வசதிகள் | பெரிய சன்னல்கள் |
சுமைதாங்கி வசதிகள் | இருக்கை அடியில் |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | இரண்டு |
பாதை | அகலப்பாதை |
வேகம் | மணிக்கு 55 கிலோமீட்டர் சராசரியாக |
பெட்டிகள்
தொகுசென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டியில் மணிக்கு 110 கிலோமீட்டர் (மணிக்கு 68 மைல்) அதிகபட்ச வேகம் செல்லக்கூடிய வகையில் நிலையான இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையின் பெட்டிகள் உள்ளன. மொத்தமாக இந்த இரயில் 22 பெட்டிகளைக் கொண்டுள்ளது:
- 1 இரண்டு அடுக்கு குளிரூட்டப் பெட்டி
- 6 மூன்று அடுக்கு குளிரூட்டப் பெட்டிகள்
- 10 படுக்கை வசதி பெட்டிகள்
- 1 உணவகம்
- 2 பதிவு செய்யப்படாத பயணிகள் பெட்டிகள்
- 2 பொருட்கள் வைப்பறை
இந்தியாவில் உள்ள பெரும்பாலான இரயில் சேவைகளைப் போலவே, தேவையைப் பொறுத்து இந்திய ரயில்வே விருப்பப்படி இரயில் பெட்டிகளின் அமைப்பு திருத்தப்படும் வசதியும் நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
நேரம்
தொகுசென்னை மத்திய தொடருந்து நிலையம் (15:25 பிற்பகல்) → திருவனந்தபுரம் சென்ட்ரல் (07:35 முற்பகல்)
திருவனந்தபுரம் சென்ட்ரல் (17:20 பிற்பகல்) → சென்னை மத்திய தொடருந்து நிலையம் (10:00 முற்பகல்)
முக்கிய நிறுத்தங்கள் :-
- திருவனந்தபுரம் சென்ட்ரல்
- வர்க்கலா தொடருந்து நிலையம்
- கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம்
- காயங்குளம்
- மாவேலிக்கரை
- செங்கன்னூர்
- திருவல்லா
- சங்கனாச்சேரி
- கோட்டயம் தொடருந்து நிலையம்
- எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம்
- திருச்சூர் தொடருந்து நிலையம்
- பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம்
- கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
- திருப்பூர் தொடருந்து நிலையம்
- ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்
- சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்
- ஜோலார்பேட்டை சந்திப்பு
- காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்
- அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம்
- சென்னை மத்திய தொடருந்து நிலையம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-03-21.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "12695/M.G.R Chennai Central - Thiruvananthapuram Central SF Express". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 14 June 2021.