திருப்பூர் தொடருந்து நிலையம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டம், 'திருப்பூர் தொடருந்து நிலையம்'.

திருப்பூர் தொடருந்து நிலையம் (Tiruppur railway station, நிலையக் குறியீடு:TUP) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருப்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். 

திருப்பூர்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தொடருந்து நிலைய சாலை, திருப்பூர், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°06′31″N 77°20′23″E / 11.1086°N 77.3397°E / 11.1086; 77.3397
ஏற்றம்305 மீட்டர்கள் (1,001 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்ஜோலார்பேட்டை–சோரனூர் வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா நிலையம், வாடகையுந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுTUP
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
திருப்பூர் is located in தமிழ் நாடு
திருப்பூர்
திருப்பூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
திருப்பூர் is located in இந்தியா
திருப்பூர்
திருப்பூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
சேலம்–பாலக்காடு வழித்தடம்
கி.மீ.
39 
மேட்டூர் அணை
27 
மேச்சேரி சாலை
19 
தொளசம்பட்டி
11 
ஓமலூர் சந்திப்பு
3 
மேக்னசைட் சந்திப்பு
0
சேலம் சந்திப்பு
சேலம் எஃகு ஆலை
8
நெய்க்காரபட்டி
11
வீரபாண்டி சாலை
22
மகுடஞ்சாவாடி
34
மாவெலிபாளையம்
39
சங்கரி துர்க்கம்
47
ஆனங்கூர்
57
காவிரி
62
ஈரோடு சந்திப்பு
69
தொட்டியாபாளையம்
76
பெருந்துறை
81
ஈங்கூர்
89
விஜயமங்கலம்
99
ஊத்துக்குளி
102
திருப்பூர் கூலிபாளையம்
112
திருப்பூர்
திருப்பூர்-அவிநாசி சாலை
120
வஞ்சிபாளையம்
130
சோமனூர்
139
சூலூர் சாலை
145
இருகூர் சந்திப்பு
162
போத்தனூர் சந்திப்பு
14 
சிங்காநல்லூர்
9 
பீளமேடு
0 
கோயம்புத்தூர் சந்திப்பு
3 
கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு
17 
பெரியநாயக்கன்பாளையம்
28 
காரமடை
36 
மேட்டுப்பாளையம்
ஏசிசி லிமிடெட் தொழிற்சாலை
166
மதுக்கரை
171
எட்டிமடை
180
வாளையார்
184
சுள்ளிமடை
191
கஞ்சிக்கோடு
199
கொட்டேக்காடு
206
பாலக்காடு சந்திப்பு

இந்த தொடருந்து நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின், சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.

அமைவிடம்

தொகு

திருப்பூர் நகரமானது, ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குவதால் தொடருந்து போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த தொடருந்து நிலையமானது திருப்பூர் நகரத்திலேயே அமைந்துள்ளது மற்றும் இதன் அருகிலேயே திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளது. புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு 10-15 நிமிடம் வரை ஆகும்.[1]

இந்த தொடருந்து நிலையம் சென்னைபாலக்காடு அகலப்பாதை (1983 இல் அமைக்கப்பட்டது) முழுமையாக மின்மயமாக்கப்பட்டு இரண்டு தடங்களைக் கொண்டுள்ளது. திருவனந்தபுரம் மெயில் மற்றும் பெங்களூர் கொச்சுவேலி விரைவுத் தொடருந்து போன்ற சில வண்டிகளைத் தவிர கிட்டத்தட்ட பெரும்பாலன விரைவுத் தொடருந்துகள் இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.

ஒரு நாளைக்கு சுமார் 30,000 பயணிகள் திருப்பூருக்கு பயணம் செய்கிறார்கள்.[2] இதனால், திருப்பூர் தொடருந்து நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். பெரும்பாலான தொடருந்துகள் 2 நிமிடங்களுக்கு மட்டுமே நிற்கின்றன. இதனால் சரக்கு தொடருந்துகள் நிறுத்துவதற்கு சாத்தியமில்லை.[3]

இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7][8]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருப்பூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [9][10][11][12][13][14][15] தெற்கு பக்கமும் வடக்கு பக்கமும் பிரம்மாண்ட நுழைவாயில்கள் மற்றும் பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம் அமைக்கப்படவுள்ளது. [16]


மேற்கோள்கள்

தொகு
  1. "Bus" (PDF). பார்க்கப்பட்ட நாள் 13 July 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Kumar, R. Vimal (26 July 2010). "Inadequate infrastructure irks rail passengers in Tirupur". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article534236.ece. 
  3. "Participatory approach needed to improve facilities at Tirupur Railway Station: DRM". தி இந்து. 8 October 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/participatory-approach-needed-to-improve-facilities-at-tirupur-railway-station-drm/article9199947.ece. பார்த்த நாள்: 27 November 2016. 
  4. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  5. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  6. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  7. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  8. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  9. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  10. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  11. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/22/15-railway-stations-in-salem-division-to-be-upgraded-2549648.html
  12. https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16014&id=0,4,268
  13. https://www.pressreader.com/india/the-hindu-erode-9WW6/20240603/281578065800613
  14. https://www.thehindu.com/news/cities/Coimbatore/foundation-laid-for-redevelopment-of-eight-stations-in-salem-railway-division-under-amrit-bharat-station-scheme/article67887945.ece
  15. https://www.youtube.com/watch?v=_9JwQKh7iM0
  16. https://tamil.news18.com/tiruppur/is-tirupur-railway-station-being-built-under-amrit-bharat-scheme-with-so-many-special-features-1117695.html

வெளி இணைப்புகள்

தொகு