சென்னை மாகாண வரலாறு
மதராஸ் ராஜதானி ( மதராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது மற்றும் அதிகாரப்பூர்வமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை ராஜதானி என்றும் அழைக்கப்பட்டது), இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவு (ராஜதானி)]] ஆகும். சென்னை ராஜதானியானது இன்றைய தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக அதாவது இன்றைய இந்திய மாநிலப் பகுதிகளான தமிழ்நாடு, வட கேரளப் பகுதியான மலபார் பிராந்தியம், இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை பகுதிகள், ஒரிசாவின் பெர்காம்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடம் மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டங்கள் போன்றவை உள்ளடக்கியதாக இருந்தது. ராஜதானியியன் தலைநகராக மதராஸ் (இப்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது) இருந்தது.
உருவாக்கம்
தொகு1684 ஆம் ஆண்டில், மதராஸ் மீண்டும் ராஜதானியாக தரம் உயர்த்தப்பட்டது, வில்லியம் கிஃபோர்ட் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] 1690 ல், கிழக்கு இந்திய கம்பெனியானது தஞ்சாவூர் மராத்திய மன்னரான முதலாம் சாகுஜியிடம் கடலூருக்கு அருகில் கடலோர நிலப்பகுதியை வாங்கி அவர்கள் அங்கே புனித டேவிட் கோட்டையைக் கட்டினர். 1700 வாக்கில், பரங்கிப்பேட்டை, மடபொல்லம், விசாகப்பட்டினம், அஞ்செங்கோ, தலச்சேரி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் ஆங்கிலேயரின் தொழிற்சாலைகள் இருந்தன.
கிழக்கிந்திய கம்பெனியால் துவக்கத்தில் தீபகற்ப இந்தியாவின் அரசியலில் இடைவெளியை பராமரிக்க முடிந்தது என்றாலும், தென்னிந்தியாவில் பிரெஞ்சு முக்கியத்துவத்தை நிறுவுவதற்கான தூப்ளேயின் சூழ்ச்சிகளின் விளைவாக முகலாயர்கள், மராத்தாக்கள், ஐதராபாத் நிஜாம்கள் மற்றும் ஆற்காடு நவாப்கள், மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் [2] சம்பந்தப்பட்ட போராக, 1740 வரை , ஆஸ்திரிய வாரிசு போரின் தாக்கத்தால் இந்தியாவில் உருவாகத் தொடங்கியது. 1746 செப்டம்பரில், செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரெஞ்சுக்காரர்களால், லா போர்டோனாய்ஸின் தைலைமையில் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு 1749 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு இந்தியாவின் ஒரு பகுதியாக இது ஆட்சி செய்யப்பட்டது. ஐக்ஸ்-லா-சேப்பல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி மதராஸ் ஆங்கிலேயர்களிடன் மீண்டுவந்தது.[3]
1755 ஆம் ஆண்டு பாளையக்காரர்களை கட்டுப்படுத்தி அவர்களை வழிக்கு கொண்டுவரும்விதமாக ஆற்காடு நவாப்புக்கு உதவும் விதத்தில் மதராசிலிருந்து திருநெல்வேலி சீமைக்கு கம்பெனியினால் படையெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பாளையக்கார்கள் தோற்கடிக்கப்பட்டாலும், நவாபின் பெயரில் அவரது பிரதிநிதிகளால் அவர்களை எந்தவகையிலும் கட்டுப்பாடுத்த இயலவில்லை. இதுவே அந்தப் பகுதியை நவாப் ஆங்கிலேயருக்கு குத்தகைக்கு விட காரணமாக அமைந்தது. இதன்பிறகு, 1763 ஆம் ஆண்டில், இந்தியாவில் பிரித்தானிய துருப்புக்களின் தளபதியாக இருந்த உள்நாட்டைச் சேர்ந்த ஒரே தளபதியான யூசுப் கான் (மருதநாயகம்) திருநெல்வேலியின் பொறுப்பாளராக இருந்தார். இவர் கிளர்ச்சி செய்து பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக கொடியை உயர்த்தியபோது, அவரைத் கட்டுப்படுத்த மற்றொரு படையெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு இப்பகுதியில் இருந்த துருப்புக்களுக்கு பிரித்தானிய அதிகாரிகளால் கட்டளையிட்டப்பட்டது. மேலும் நவாப் சார்பாக உள்ளூர் அதிகாரிகளால் இப்பகுதி நிர்வகிக்கப்பட்டது.
1757 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் மீண்டும் போர் வெடித்தது. இப்போரானது மதராஸ் ராஜதானியின் ஊடாக, வடக்கு வட்டத்தில் உள்ள விசாகப்பட்டம் முதல், செயின்ட் டேவிட் கோட்டை வரையும், தஞ்சை மராத்திய இராச்சியத்தின் எல்லையில் இரு நிறுவனங்களின் படைகளுக்கிடையில் தொடர்போர்கள் நடந்தன. தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான பிரெஞ்சு படைகளுக்கும் சர் அயர் கூட்டின் தலைமையிலான ஆங்கிலேய படைகளுக்கும் இடையில் நடந்த புகழ்பெற்ற வந்தவாசிப் போரில் பிரஞ்சுப்படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பிரெஞ்சு இந்தியாவின் தலைநகரான பாண்டிச்சேரியில் உள்ள செயின்ட் டெனிஸ் கோட்டை 1761 சனவரியில் ஆங்கிலேயரிடம் சரணடைந்தது. 1763 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி பிரெஞ்சு உடைமைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டன, ஆனால் அதன்பிறகு பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் வலுவற்ற சக்தியாக இருந்தனர் .
சிறிது காலத்திற்குப் பிறகுதான், வடக்கு வட்டாரங்கள் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து மதராஸ் ராஜதானிக்கு மாற்றப்பட்டன, அதற்கு முன்புவரை அதை முசுலீம் பேரரசர்ர்கள் வைத்திருந்தனர். 1760 களில் தான் ஐதர் அலியின் தலைமையிலான மைசூர் இராச்சியத்துக்கும் மதராஸ் ராஜதானிக்கும் இடையே போர் முதலில் வெடித்தது, ஆனால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களானது பரஸ்பரம் மறுசீரமைப்பு மூலம் இணக்கமாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.
செப்டம்பர் 1774 இல், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமான பிரதேசங்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைந்த அதிகாரத்தை உருவாக்குவதற்காக பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிட்சின் இந்திய சட்டத்தின்படி, மதராசு ராஜதானியின் தலைவரானவர் கல்கத்தாவை மையமாக கொண்ட கவர்னர் ஜெனரலுக்கு கட்டுப்பட்டவராக ஆக்கப்பட்டார்.[4]
குறிப்புகள்
தொகு- ↑ India Office List 1905, Pg 121
- ↑ Imperial Gazetteer of India, 1908, Vol 16, Pg 251
- ↑ Imperial Gazetteer of India, 1908, Vol 16, Pg 252
- ↑ A History of India, Pg 245