செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை

மலேசிய கூட்டரசு சாலை 14

மலேசிய கூட்டரசு சாலை 14 அல்லது செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 14 அல்லது Jerangau–Jabor Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 14 அல்லது Lebuhraya Jerangau-Jabor) என்பது தீபகற்ப மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டம், கோலா திராங்கானு நகரத்தையும்; [பகாங்]], குவாந்தான் நகரத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும்.[3]

மலேசிய கூட்டரசு சாலை 14
Malaysia Federal Route 14
Laluan Persekutuan Malaysia 14

செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை
Jerangau–Jabor Highway
Lebuhraya Jerangau-Jabor
வழித்தட தகவல்கள்
நீளம்:179.63 km (111.62 mi)
பயன்பாட்டு
காலம்:
1977[1]
வரலாறு:கட்டுமானம் முடிவு 1979[2]
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கோலா திராங்கானு, திராங்கானு
 3 AH18 குவாந்தான் மாற்றுவழி
101 AH141 கெபேங் மாற்றுவழி
3486 செமாம்பு சாலை
E8 கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
126 கூட்டரசு சாலை 126
237 ஆயர் பூத்தே சாலை
124 கூட்டரசு சாலை 124
122 கெதெங்கா நெடுஞ்சாலை
128 கூட்டரசு சாலை 128
132 புக்கிட் பீசி நெடுஞ்சாலை
249 மெங்காவாங்-புக்கிட் திமான்
106 கூட்டரசு சாலை 106
புக்கிட் பாயோங்-தெலிமுங்
3 AH18 கூட்டரசு சாலை 3
தெற்கு முடிவு:குவாந்தான் மாற்றுவழி, குவாந்தான், பகாங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோலா பெராங்; அஜில்; ஜெரங்காவ்; புக்கிட் பீசி; பண்டார் அல்-முக்தாபி பில்லா சா; பண்டார் செனி பாரு
நெடுஞ்சாலை அமைப்பு

179.63 கி.மீ (111.62 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை மலேசியாவின் இரு முக்கிய நகரஙகளான கோலா திராங்கானு நகரம்; மற்றும் குவாந்தான் நகரம்; ஆகிய இரு மாநிலத் தலைநகரங்களையும் இணைக்கும் மிக முக்கியமான சாலையாக அறியப்படுகிறது.

அமைவு

தொகு

மலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3-யுடன் இணையாகச் செல்கிறது. இதில் மலேசிய கூட்டரசு சாலை 3 என்பது ஒரு கடலோர நெடுஞ்சாலையாகும்; செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை எனும் மலேசிய கூட்டரசு சாலை 14; உட்புறப் பகுதி வழியாகச் செல்கிறது.

மலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3; ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளும் ஒரே மாதிரியானவை (சுமார் 200 கி.மீ.) நீளம் கொண்டவை. எனினும் மலேசிய கூட்டரசு சாலை 3 எனும் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை தன் வழியில் குறைவான நகரங்களைக் கடந்து செல்கிறது. அந்த வகையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.

2001-ஆம் ஆண்டில் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை கட்டப்படும் வரையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலைதான், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.[4]

பொது

தொகு

மலேசிய கூட்டரசு சாலை 13-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது பகாங் மாநிலத்தின் [[குவாந்தான்] நகரத்தின் மாற்றுவழிச்சாலையில் (Kuantan Bypass) உள்ளது.

மலேசிய கூட்டரசு சாலை 13-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.

இடைமாற்று வழிகளின் பட்டியல்

தொகு
கிமீ வெளிவழி இணைமாற்றம் இலக்கு குறிப்புகள்
 
0
குவாந்தான்
குவாந்தான் மாற்றுவழி
  AH18 குவாந்தான் மாற்றுவழி

வடக்கு
  AH18 குவாந்தான் துறைமுகம்  
  AH18 சுக்காய் (கெமாமான்)
  AH18 கோலா திராங்கானு

தென் மேற்கு
  AH18 குவாந்தான்
  AH18 ஜொகூர் பாரு
  கோலாலம்பூர்
துரும்பேட் மாற்றுவழி
  AH18 குவாந்தான் மாற்றுவழி
  ஜெராங்காவ் நெடுஞ்சாலை
ஜாபோர் (கிழக்கு) இடைமாற்றம்   AH18 கெபேங் மாற்றுவழி

மேற்கு
   

AH141 கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
கோலா திராங்கானு
சுக்காய் (கெமாமான்)
கோலாலம்பூர்
கம்பாங்

வடகிழக்கு
  AH141 கெபேங்
  AH18 குவாந்தான் துறைமுகம்  
  AH18 சுக்காய் (கெமாமான்)
  AH18 செராத்திங்
சுல்தான் அகமது சா கடல்சார் கல்விக்கழகம் (AMSAS)
மலேசிய கடல்சார் காவல்துறை
(MMEA Academy)

தெற்கு
அஸ்பா தேசா சாலை ||

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Penyata Rasmi Parlimen, Dewan Rakyat, Parlimen Keempat, Penggal Kedua" (PDF) (in மலாய்). Parliament of Malaysia. 1976-12-06. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
  2. "Penyata Rasmi Parlimen, Dewan Rakyat, Parlimen Kedua Belas, Penggal Ketiga, Mesyuarat Kedua" (PDF) (in மலாய்). Parliament of Malaysia. 2010-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
  3. Senarai Jalan Persekutuan Utama பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம்
  4. "XPDC Teganu Kita 2015 Part 3: Lebuhraya Jerangau-Jabor FT14 dan sejarahnya" (in மலாய்). Blog Jalan Raya Malaysia. 2015-02-18. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.

வெளி இணைப்புகள்

தொகு