செருகாவு
செருகாவு (Cherukavu) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1]
செருகாவு
ஆயிக்காரப்பாடி | |
---|---|
கணக்கெடுப்பு ஊர் | |
ஆள்கூறுகள்: 11°11′17″N 75°55′02″E / 11.188140°N 75.917340°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 25,767 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 673637 |
வாகனப் பதிவு | KL-10,55,65 |
போக்குவரத்து
தொகுசெருகாவு ஊராட்சியின் சில பகுதிகள் தேசிய நெடுஞ்சாலை 966 இல் ராமநாட்டுக்கரைக்கும் கொண்டோட்டிக்கும் இடையே அமைந்துள்ளது. புலிக்கல் நகரின் பெரும்பாலான பகுதிகள் செருகாவு ஊராட்சிக்கு உட்பட்டவை. செருகாவு ஊராட்சியின் மற்ற முக்கிய ஊர்கள் பேரிங்காவே, கண்ணம்வெட்டிக்காவு ஆகியவை ஆகும். ராமநாட்டுக்கரை நகரத்திலிருந்து கே.வி.காவுக்கு பேருந்துகள் தொடர்ந்து செல்கின்றன, அவை வழியில் ஐந்து நிமிடங்கள் பேரிங்காவில் நிற்கின்றன. பேரிங்காவே செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 966 இல் கைதக்குண்டிலிருந்து தொடங்கி பூச்சல் கிராமம் வழியாக செல்கிறது.
புலிக்கல் ஊர்
தொகுசேருகாவு ஊராட்சியில் உள்ள பெரிய ஊர் புலிக்கல் என்பது ஆகும். பக்கத்தில் 'புளிக்கல்' என்ற மற்றொரு ஊராட்சி உள்ளது. இந்த இரண்டு இடப்பெயர்களும் உள்ளூர் மக்களால் தெளிவற்ற முறையில் பயன்படுத்தப்படுகின்றன. புலிகல் என்ற சொல் பேருந்து நிலையத்தையும் நகரத்தையும் குறிக்கும். 'செருகாவு' என்ற சொல் அதிகாரப்பூர்வமாக இந்த ஊரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
முன்மொழியப்பட்ட கரிப்பூர்-கொண்டோட்டி நகராட்சி
தொகுமுன்மொழியப்பட்ட கரிப்பூர்-கொண்டோட்டி நகராட்சியில் உள்ளடங்கியவை: [2]
மொத்த மக்கள் தொகை (1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு): 152,839
மக்கள்தொகையியல்
தொகு2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, செருகாவுவின் மொத்த மக்கள் தொகை 25767 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 12851 என்றும், பெண்களின் எண்ணிக்கை 12916 என்றும் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுசெருகாவு கிராமம் மேற்கில் ஃபெரோக் நகரம் மற்றும் கிழக்கில் நிலம்பூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 புலிக்கல் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் ஃபெரோக்கில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "Talks on Karipur airport development today". தி இந்து. 3 November 2004. http://www.thehindu.com/2004/11/04/stories/2004110404640500.htm. பார்த்த நாள்: 3 May 2015.[தொடர்பிழந்த இணைப்பு]