செருமேனியம்(II) அயோடைடு
செருமேனியம்(II) அயோடைடு (Germanium(II) iodide) என்பது GeI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செருமேனியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
13573-08-5 | |
ChemSpider | 4885744 |
EC number | 236-998-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6327215 |
| |
பண்புகள் | |
GeI2 | |
வாய்ப்பாட்டு எடை | 326.44 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம்[1] |
அடர்த்தி | 5.37 கி•செ.மீ−3 (25 °C)[2] |
உருகுநிலை | 428 °செல்சியசு[3] |
கொதிநிலை | 550 °செல்சியசு (சிதைவடையும்)[3] |
கட்டமைப்பு | |
புறவெளித் தொகுதி | P3m1 (No. 164)[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் இருபுளோரைடு செருமேனியம் இருகுளோரைடு செருமேனியம் இருபுரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | வெள்ளீய அயோடைடு ஈயம்(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெருமேனியம்(IV) அயோடைடுடன் ஐதரோ அயோடிக் அமிலம், ஐதரோ பாசுபரசு அமிலம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் செருமேனியம்(II) அயோடைடு உருவாகும்:[1]
- GeI4 + H2O + H3PO2 → GeI2 + H3PO3 + 2 HI
செருமேனியம் மோனோசல்பைடு அல்லது செருமேனியம் மோனாக்சைடுடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகும்.[1]
- GeO + 2 HI → GeI2 + H2O
- GeS + 2 HI → GeI2 + H2S}
200 – 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் செருமேனியமும் அயோடினும் நேரடியாக வினையில் ஈடுபட்டாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகிறது.:[1]
- Ge + I2 → GeI2
HGeI3சேர்மம் சிதைவுக்கு உட்பட்டாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகிறது. HGeCl3உடன் ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினை புரியச்செய்தால் HGeI3 சேர்மத்தை தயாரிக்கமுடியும்:[5]
- HGeCl3 + 3 HI → HGeI3 + HCl
- HGeI3 → GeI2 + HI
பண்புகள்
தொகுசெருமேனியம்(II) அயோடைடு மஞ்சள் நிறப் படிகமாகும். இது ஈரப்பதத்தின் முன்னிலையில் செருமேனியம்(II) ஐதராக்சைடாக மெதுவாக நீராற்பகுப்பு அடைகிறது. ஐதரோ கார்பன்களில் இது கரையாது. குளோரோஃபார்மிலும் கார்பன் டெட்ராகுளோரைடிலும் சிறிது கரைகிறது. a = 413 பைக்கோ மீட்டர் மற்றும் c = 679 பைக்கோமீட்டர்[1]என்ற அளபுருக்களுடன் செருமேனியம்(II) அயோடைடு சேர்மம் காட்மியம் அயோடைடு கட்டமைப்பை ஏற்றுகொள்கிறது. 550 பாகை செல்சியசு வெப்பநிலையில் செருமேனியம் மற்றும் செருமேனியம் டெட்ரா அயோடைடாக விகிதாசாரமின்றி இது சிதைகிறது.[6]
பண்புகள்
தொகுசெருமேனியம்(II) அயோடைடு கார்பீனுடன் வினைபுரிந்து நிலையான சேர்மங்களை உருவாக்க்குகிறது.[2] மின்னணுவியல் துறையில் செருமேனியம் அடுக்குகளை விகிதாசாரமற்ற வினைகள் மூலம் உருவாக்கப் பயன்படுகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Georg Brauer (Hrsg.), unterMitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der PräparativenAnorganischenChemie. 3., umgearbeiteteAuflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 727.
- ↑ 2.0 2.1 Sigma-Aldrich Co., product no. {{{id}}}.
- ↑ 3.0 3.1 William M. Haynes (2012), CRC Handbook of Chemistry and Physics, 93rd Edition, CRC Press, pp. 4–65, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-143988049-4
- ↑ Jean d’Ans, Ellen Lax, Roger Blachnik (1998), TaschenbuchfürChemiker und Physiker, Springer DE, p. 472, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 364258842-5
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Wolfgang Kirmse (2013), Carbene Chemistry 2e, Elsevier, p. 540, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-032316145-9
- ↑ Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 959, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ A.G. Milnes (1972), Heterojunctions and Metal Semiconductor Junctions, Elsevier, p. 104, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 032314136-6