செல்ஜா குமாரி
செல்ஜா குமாரி (Selja Kumari; பிறப்பு 24 செப்டம்பர் 1962) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார் .இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்திய அரசாங்கத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார்.
செல்ஜா குமாரி | |
---|---|
2006 இல் செல்ஜா | |
அரியானா பிரதேச காங்கிரசு கமிட்டியின் தலைவர் | |
பதவியில் 4 செப்டெம்பர் 2019 – 27 ஏப்பிரல் 2022 | |
முன்னையவர் | அசோக் தன்வார் |
பின்னவர் | உதய் பன் |
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 28 சனவரி 2014 | |
முன்னையவர் | முகுல் வாஸ்னிக் |
பின்னவர் | மல்லிகார்ச்சுன் கர்கெ |
சுற்றுலாத் துறை அமைச்சர் | |
பதவியில் 28 மே 2009 – 19 சனவரி 2011 | |
முன்னையவர் | அம்பிகா சோனி |
பின்னவர் | சுபோத் காந்த் சஹாய் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 10 ஏப்பிரல் 2014 – 2 ஏப்பிரல் 2020 | |
முன்னையவர் | ராம் பிரகாஷ், இ.தே.கா. |
பின்னவர் | தீபேந்தர் சிங் ஹூடா, இ.தே.கா. |
தொகுதி | அரியானா |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 17 மே 2004 – 16 மே 2014 | |
முன்னையவர் | ரத்தன் லால் கட்டாரியா, பா.ஜ.க. |
பின்னவர் | ரத்தன் லால் கட்டாரியா, பா.ஜ.க. |
தொகுதி | அம்பாலா |
பதவியில் 13 மார்ச்சு 1991 – 1998 | |
முன்னையவர் | ஹெட் ராம், லோக்தளம் |
பின்னவர் | சுஷில் குமார் இந்தோரா இ.தே.லோ.த. |
தொகுதி | சிர்சா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 செப்டம்பர் 1962 பர்புவாலா, பஞ்சாப், இந்தியா (தற்போது அரியானா, இந்தியா) |
அரசியல் கட்சி | இ.தே.கா. |
வாழிடம்(s) | ஹிசார், அரியானா |
கல்வி | M.A., M.Phil. |
தொழில் | விவசாயி & சமூக சேவகர் |
மூலம்: [1] |
செல்ஜா முதன்முதலில் 1991 ல் மக்களவைக்கு சிர்சா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் 1996 தேர்தலில் வெற்றி பெற்றார். அம்பாலாவில் இருந்து 15 வது மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில்தான் செல்ஜா இந்தியாவில் பெண்களின் உரிமைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் பணியாற்றினார்.
செல்ஜா 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாலா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார், அதைத் தொடர்ந்து மாநில அரசியலுக்கு திரும்பினார், அந்த ஆண்டின் பிற்பகுதியில் காங்கிரசுக் கட்சியின் அரியானா பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2014 முதல் 2020 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசெல்ஜா குமாரி இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியாக இருந்த சவுத்ரி தல்பீர் சிங்கிற்கு 24 செப்டம்பர் 1962 அன்று பர்புவலா ஹிசாரில் பிறந்தார். புது தில்லியில் உள்ள ஜீசஸ் அண்ட் மேரி மாடப்பள்ளியில் படித்த இவர் பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு இவர் பட்டம் மற்றும் தத்துவவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் .[1]
அரசியல் வாழ்க்கை
தொகுஆரம்பகால தொழில் மற்றும் தேர்தல் அறிமுகம் (1990-2003)
தொகுசெல்ஜா தனது அரசியல் வாழ்க்கையை மகிளா காங்கிரசில் அதன் தலைவராக 1990 இல் தொடங்கினார். பத்தாவது மக்களைக்கு 1991 ஆம் ஆண்டில் சிர்சா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசில் மத்திய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்தார். 1996 அரியானாவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போதிலும், இவர் 11 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
செல்ஜா 2004 ஆம் ஆண்டில் 14 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். இவர் 2005 இல் காமன்வெல்த் உள்ளூர் அரசாங்க மன்றத்தின் நிர்வாக வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கம் போன்ற பிற அமைப்புகளுடன் இவர் தொடர்ந்து ஈடுபட்டார் மற்றும் மனித குடியேற்றங்கள் குறித்த காமன்வெல்த் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[1]
இந்திய தேசிய காங்கிரசு கட்சி (2004-2013)
தொகு2004 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கான மத்திய இணை அமைச்சராக செல்ஜா பதவியேற்றார்.[1] அம்பாலாவில் இருந்து 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, செல்ஜா மன்மோகன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியில் இருந்த காலத்தில் சர்வதேச உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இத்தாலி மற்றும் சைப்பிரசு போன்ற நாடுகளுக்குச் சென்றார்.[2]
மார்ச் 2011 இல், பஞ்சா மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தால் செல்ஜாவுக்கு "போலி, குற்றவியல் மிரட்டல், புனைவு மற்றும் குற்றச் சதி செய்தல்" என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு மனு மீது அறிக்கை வழங்கப்பட்டது. மனுதாரர், வழக்கறிஞரான பிஎஸ் சகார், "மிர்ச்ச்பூர் வழக்கில் ஜாட் தலைவர்களுக்கு எதிராக பாம்மீகி சமூகத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகித்த செல்ஜா, வழக்கு விசாரணைக்கு அழுத்தம் கொடுத்து கையெழுத்திட கட்டாயப்படுத்தினார்" என்று குற்றம் சாட்டினார்.[3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Detailed profile: Kumari Selja". இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 12 October 2019."Detailed profile: Kumari Selja". Government of India. Retrieved 12 October 2019.
- ↑ "Annual Report 2010-11" (PDF). Ministry of External Affairs. பார்க்கப்பட்ட நாள் 12 October 2019.
- ↑ "HC notice to Kumari Selja for 'threatening' Mirchpur accused". The Indian Express. 11 March 2011. http://www.indianexpress.com/news/hc-notice-to-kumari-selja-for-threatening/760712/.