சைல் இராணுவப் பள்ளி
சைல் இராணுவப் பள்ளி (Chail Military School) இந்தியாவின் 5 இராணுவப் பள்ளிகளில் ஒன்றான இது இமாச்சலப் பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில் உள்ள சைல் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த உண்டு உறைவிடப்பள்ளியை 1922-இல் நிறுவ நிதியுதவி வழங்கியவர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் ஆவார்.
இராஷ்டிரிய இராணுவப் பள்ளி, சைல் | |
---|---|
அமைவிடம் | |
சைல், சோலான் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம் இந்தியா | |
அமைவிடம் | Latitude: 30° 58' 60 N, longitude: 77° 10' 60 E |
தகவல் | |
வகை | இராணுவப் பள்ளி |
குறிக்கோள் | சீலம் பரம் பூஷணம் (Character is the Greatest Virtue) |
தொடக்கம் | 1922 |
பள்ளி மாவட்டம் | சோலான், இமாச்சலப் பிரதேசம் |
அதிகாரி | மேஜர் யஷ்வந்த் சிங் ஜதௌன் |
அதிபர் | லெப். கர்ணல் எஸ் பி எஸ் சௌகான் |
பள்ளித் தலைவர் | இராணுவப் பயிற்சிகளுக்கான தலைமை இயக்குநர் |
பணிக்குழாம் | 100 |
பீடம் | 20 |
தரங்கள் | வகுப்புகள் 6-12 |
மாணவர்கள் | 300 |
Campus size | 1,550-ஏக்கர் (6.3 km2) |
Campus type | உண்டு உறைவிடப் பள்ளி (Boarding school) |
நிறங்கள் | வெளி நீலம் மற்றும் அடர் நீலம் |
இணைப்பு | சிபிஎஸ்சி |
நிறுவனர் | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் |
விடுதிகள் | நாளந்தா, தக்சசீலம், உஜ்ஜைன் |
நாளந்தா | சிவப்பு |
தக்சசீலம் | பச்சை |
உஜ்ஜைன் | நீலம் |
இணையம் | chailmilitaryschool |
சிபிஎஸ்சி பாடத்திட்ட முறையைக் கொண்ட இந்த உண்டு உறைவிட இராணுவப் பள்ளியில் 10 முதல் 11 வயதிற்குட்பட்ட 300 ஆண் மாணவர்களை 6-ஆம் வகுப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் டிசமபர் மாதத்தில் நுழைத்தேர்வு நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடல் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் பள்ளிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். [1] + 2 வகுப்பில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.[2]இப்பள்ளியின் மாணவர் சேர்க்கையில் இந்திய இராணுவத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் போரில்/எல்லை மோதல்களில் இறந்த இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியானது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறைகள் கொண்டது. இப்பள்ளியில் கல்வி, விளையாட்டுகளுடன், தேசிய மாணவர் படையிலும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rashtriya Military Schools". 2 November 2009. பார்க்கப்பட்ட நாள் 22 June 2016.
- ↑ "Archived copy". Archived from the original on 7 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-23.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
வெளி இணைப்புகள்
தொகு- https://web.archive.org/web/20081108041206/http://www.chailmilitaryschool.com/
- http://www.indicareer.com/India-Residential-Schools/Himachal-Pradesh/Chail-Military-School.html பரணிடப்பட்டது 2020-10-08 at the வந்தவழி இயந்திரம்
- http://www.georgians.in
- https://web.archive.org/web/20100520100315/http://georgians.in/article_detail.asp?aid=274