ஜகதாம்பி பிரசாத் யாதவ்

இந்திய அரசியல்வாதி

ஜகதாம்பி பிரசாத் யாதவ் (Jagadambi Prasad Yadav)(01 சனவரி 1925-20 சூலை 2002) என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், 1977 முதல் 1979 வரை பீகார் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும், பின்னர் மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தில் மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார். இவர் சார்க்கண்டு கோடா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 1996ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ல் இறக்கும் போது, யாதவ், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 1981 முதல் 1984 வரை பீகாரில் பாரதீய ஜனசங்கம் மற்றும் பீகார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார்.

ஜகதாம்பி பிரசாத் யாதவ்
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்
பதவியில்
26 சனவரி 1979 – 28 சூலை 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டசு
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர்
பதவியில்
14 ஆகத்து 1977 – 26 சனவரி 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
அமைச்சர்ராஜ் நாராயணன்
மொரார்ஜி தேசாய்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–2002
முன்னையவர்சூரஜ் மண்டல்
பின்னவர்பிரதீப் யாதவ்
தொகுதிகோடா
பதவியில்
1977–1980
முன்னையவர்ஜதீசு மண்டல்
பின்னவர்மவுலானா சமினுதீன்
தொகுதிகோடா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
3 ஏப்ரல் 1982 – 2 ஏப்ரல் 1988
தொகுதிமாநிலங்களவை உறுப்பினர் பீகார்
பதவியில்
3 ஏப்ரல் 1968 – 2 ஏப்ரல் 1974
தொகுதிமாநிலங்களவை உறுப்பினர் பீகார்
தலைவர், பாரதிய ஜனதா கட்சி, பீகார்
பதவியில்
1981–1984
முன்னையவர்கைலாசுபதி மிசுரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-01-01)1 சனவரி 1925
முங்கேர், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு20 சூலை 2002(2002-07-20) (அகவை 77)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜானகி தேவி
பிள்ளைகள்8
கல்விஇளங்கலை.
மூலம்: [1]

இறப்பு

தொகு

யாதவ் கட்சி தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகருக்கு வந்தபோது திடிரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் சூலை 20, 2002 அன்று காலமானார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "rediff.com: Senior BJP leader Jagdambi Prasad Yadav dead". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதாம்பி_பிரசாத்_யாதவ்&oldid=3734798" இலிருந்து மீள்விக்கப்பட்டது