ஜகோய்
ஜகோய்' ( Jagoi ) என்பது மணிப்பூர் மக்களுடன் தொடர்புடைய திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் பலவித நடன வடிவங்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையாகும்.
பாரம்பரிய மெய்தே மதத்தைப் பின்பற்றுபவர்களின் (சனமாகியர்கள்) பல்வேறு வகையான நடன வடிவங்கள் | |
பூர்வீக பெயர் |
|
---|---|
கருவி(கள்) | பெனா (இசைக் கருவி)]] |
தோற்றம் | கெங்லிபாக் |
பொது விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
தொகுகண் தொடர்பு
தொகுபாரம்பரிய மணிப்புரி நடன நிகழ்ச்சிகளில், நடனக் கலைஞர்கள் பார்வையாளர்களுடன் எந்தவிதமான கண் தொடர்பும் கொண்டிருக்கக் கூடாது என்று கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளனர். அதைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றால், அது ஒரு அவமதிப்பாகக் கருதப்படுகிறது.[1]
சுக்பரோன் ஜகோய்
தொகு"சுக்பரோன் ஜகோய்" என்பது சனாமாகியச் சடங்கு நடன வடிவமாகும். இது இலாய் அரோபாவின் மத திருவிழாவில் நான்கு திசைகளின் அதிபதிகளான தாங்ஜிங், மார்ஜிங், வாங்ப்ரென் மற்றும் கவுப்ருவை மகிழ்விப்பதற்காக மைபிகள் ( பூசாரிகள் ) ஆடுவர்.[2] நிகழ்ச்சியின் போது, மைபி லைபுபாசிலிருந்து இரண்டு பானைகளை தனது இரண்டு கைகளிலும் பிடித்துக் கொள்கிறார்.[2] அண்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் நாங்தாங் லீமா தேவியின் நடனத்தை இந்த நடன நிகழ்ச்சி சித்தரிக்கிறது.[3]
கம்பா தோய்பி ஜகோய்
தொகுஇலாய்ச்சிங் ஜகோய்
தொகுஇலாய்ச்சிங் ஜகோய் (தெய்வத்தை அழைக்கும் நடனம்) [4]) என்பது மைபிகள் (பூசாரி) காட்டுமுள்ளங்கியின் இலையை விரல்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு ஆடும் ஒரு நடன வடிவமாகும்.[4][5] தெய்வத்தின் ஆன்மாவை ஒவ்வொரு மைபியின் உடலிலும் நுழைய அழைக்கப்படும் பலவிதமான வெளிப்பாட்டு இயக்கங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.[4] தெய்வத்தை அழைக்கும் இவ்வகை நடனத்தில் மைபிகள் தங்கள் கைகளால் பெண்களின் ஒற்றுமையைக் குறிக்கும் தோரணையில் நிற்பார்கள்.[6] இந்த நடன வடிவத்தில், மைபிகள், நீரிலிருந்து தெய்வங்களை அழைத்த பிறகு, லெய்தை நோங்டை ஜகோய் என்ற நிகழ்ச்சியை நடத்துவார்கள்.[7] இந்த நடன வடிவம் தெய்வங்களின் சன்னதியின் முன் நிகழ்த்தப்படுகிறது.[8]
இலாய்கோ ஜகோய்
தொகுஇலாய்கோ ஜாகோய் (“அழைப்பு நடனம்”[9] அல்லது “ஆரம்ப நடனம்”[10]) என்பது இலாய் அரோபாவின் திருவிழாவில்[11][10] குளம் அல்லது ஆற்றுக்குச் செல்லும்போது பூசாரிகள் நிகழ்த்தும் ஒரு நடன வடிவமாகும்.[10] நடனத்தின் போது, பெனா என்ற பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன.[9]
பூசாரிகளுடன், இரண்டு வரிசைகளில் வாள் ஏந்திய இளைஞர்கள், பித்தளைப் பாத்திரங்களுடன் கன்னிப்பெண்கள், பூக்களை எடுத்துவருபவர்கள், குடை பிடிப்பவர்கள் ஆகியோருடன் இரண்டு பானைகளைப் பிடித்தபடி ஆண்களும் உடன் செல்வார்கள்.[11][9]
லீசெம் ஜகோய்
தொகுலீசெம் ஜகோய் (பூமியை உருவாக்கும் நடனம்[12]) பூமியை உருவாக்கும் ஒன்பது கடவுள்கள் மற்றும் ஏழு தெய்வங்களின் அசைவுகளைப் பின்பற்றி இயற்றப்பட்ட ஒரு நடன வடிவமாகும். அதைத் தொடர்ந்து இலாய் ஜகோய், மனித உடலின் உருவாக்கம் மற்றும் ஆடை நெசவு போன்ற மனிதனின் பல்வேறு செயல்பாடுகளை சித்தரிக்கிறது.[13][14] இவ்வகை நடனத்தை இளம் பெண்கள் நிகழ்த்துகிறார்கள்.[15] பண்டைய மணிப்பூரின் ஆரம்பகால நடன வடிவங்களில் இதுவும் ஒன்று.[16]
பந்தோய்பி ஜகோய்
தொகுபந்தோய்பி ஜகோய் ( பந்தோய்பியின் நடனம் அல்லது 'தெய்வீக அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடனம்[17]) என்பது இருவர் இணைந்து நிகழ்த்தப்படும் ஒரு நடன வடிவம். இது மணிப்புரியின் பண்டைய தெய்வங்களான நோங்போக் நிங்தோவுக்கும் பந்தோய்பிக்கும் இடையேயான காதல் விவகாரங்களை சித்தரிக்கிறது.[18][19] உடல் அசைவுகளுடன் 14 கை அசைவுகளும் இதில் அடங்கும்.[20] இது நெசவு செயல்முறையை சித்தரிக்கும் மத திருவிழாவான இலாய் அரோபா அன்று நிகழ்த்தப்படுகிறது.[21]
இராச ஜகோய்
தொகுஇராச ஜகோய் என்பது மணிப்பூரின் பாரம்பரிய நடன வடிவம். இது மணிப்புரி ராஸ் லீலா என்றும் அழைக்கப்படுகிறது.[22][23][24]) மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உருவான எட்டு முக்கிய இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் இதுவும் ஒன்று.[25] பரதநாட்டியம், கதக், ஒடிசி, கதகளி, குச்சிப்புடி, சாவ், சத்ரியா நடனம், யக்சகானம் மற்றும் பாகவத மேளா மற்ற முக்கிய பாரம்பரிய இந்திய நடனங்கள்
பிரபலமான கலாச்சாரத்தில்
தொகு- 1941இல் வெளிவந்த ராஜ் நர்த்தகி என்ற இந்தி மொழித் திரைப்படத்தில் ஜகோய் நடனம் இடம் பெற்றது
- எல்கோ ஜகோய் என்ற மெய்டே ஆவணத் திரைப்படம் 1995 இல் வெளிவந்தது
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Baral, Kailash C. (2023-05-16). Cultural Forms and Practices in Northeast India (in ஆங்கிலம்). Springer Nature. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-19-9292-6.
- ↑ 2.0 2.1 Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.
- ↑ Session, North East India History Association (1995). Proceedings of North East India History Association (in ஆங்கிலம்). The Association.
- ↑ 4.0 4.1 4.2 Pathway (in ஆங்கிலம்).
- ↑ Doshi, Saryu (1989). Dances of Manipur: The Classical Tradition (in ஆங்கிலம்). Marg Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85026-09-1.
- ↑ Narayan, Shovana (2005). Indian Classical Dance (in ஆங்கிலம்). Shubhi Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8290-023-3.
- ↑ Singh, E. Ishwarjit (2005). Manipur, a Tourist Paradise (in ஆங்கிலம்). B.R. Publishing Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7646-506-9.
- ↑ Brara, N. Vijaylakshmi (1998). Politics, Society, and Cosmology in India's North East (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-564331-2.
- ↑ 9.0 9.1 9.2 Traditional Customs and Rituals of Northeast India: Arunachal Pradesh, meghalaya, Manipur, Assam (in ஆங்கிலம்). Vivekananda Kendra Institute of Culture. 2002.
- ↑ 10.0 10.1 10.2 Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.
- ↑ 11.0 11.1 Brara, N. Vijaylakshmi (1998). Politics, Society, and Cosmology in India's North East (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-564331-2.
- ↑ Pratibha India (in ஆங்கிலம்). A. Sitesh. 1987.
- ↑ Rasa: Music and dance (in ஆங்கிலம்). Anamika Kala Sangam. 1995.
- ↑ Kumar, Niraj; Driem, George van; Stobdan, Phunchok (2020-11-18). Himalayan Bridge (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-21549-6.
- ↑ Basanta, Ningombam (2008). Modernisation, Challenge and Response: A Study of the Chakpa Community of Manipur (in ஆங்கிலம்). Akansha Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8370-152-5.
- ↑ Ghose, Vijaya; Ramanathan, Jaya; Khandekar, Renuka N. (1992). Tirtha, the Treasury of Indian Expressions (in ஆங்கிலம்). CMC Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-900267-0-3.
- ↑ Chaki-Sircar, Manjusri (1984). Feminism in a Traditional Society: Women of the Manipur Valley (in ஆங்கிலம்). Shakti Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7069-1967-7.
- ↑ Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.
- ↑ Pathway (in ஆங்கிலம்). Marg Publications. 1988.
- ↑ Kumar, Niraj; Driem, George van; Stobdan, Phunchok (2020-11-18). Himalayan Bridge (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-21549-6.
- ↑ Singh, E. Bijoykumar; Singh, Ksh Jhaljit (2009). Challenges of Economic Policy in Manipur: Essays in Honour of Prof. M. Iboton Singh (in ஆங்கிலம்). Akansha Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8370-128-0.
- ↑ Banerjee, Utpal Kumar (2006). Indian Performing Arts: A Mosaic (in ஆங்கிலம்). Harman Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86622-75-9.
- ↑ Sruti (in ஆங்கிலம்). P.N. Sundaresan. 2006.
- ↑ Derek, O' Brien (2006). Knowledge Trek 7, 2/E (in ஆங்கிலம்). Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7758-055-6.
- ↑ Williams 2004, ப. 83-84.
வெளி இணைப்புகள்
தொகு