ஜமுனா (நடிகை)

இந்திய நடிகை

ஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[1]

ஜமுனா
Jamuna Telugu Actress.jpg
பிறப்புஜனா பாய்
30 ஆகத்து 1936 (1936-08-30) (அகவை 85)[1]
ஹம்பி, கருநாடகம், இந்து
தேசியம்இந்தியா
பணிநடிகர் மற்றும் அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1952 - 1990
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
ஜிலூரி ரமணா ராவ்
(m. 1965 - 2014; dead)
பிள்ளைகள்மகன் : வம்சிகிருஷ்ணா (பி 1966)
மகள் : சரவந்தி (பி 1968)

எல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.[2]

இளமைக்காலம்தொகு

ஜனா பாய் என்ற இயற்பெயர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார்.[1] நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.

தொழில்தொகு

ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்துள்ளார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார்.[1] தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விருதுதொகு

திரைப்படங்கள்தொகு

தமிழ்தொகு

 1. தங்கமலை ரகசியம் (1957)
 2. நிச்சய தாம்பூலம் (1962)
 3. குழந்தையும் தெய்வமும் (1965)
 4. நல்ல தீர்ப்பு
 5. மருத நாட்டு வீரன்
 6. தாய் மகளுக்கு கட்டிய தாலி7
 7. மனிதன் மாறவில்லை (1962)
 8. தூங்காதே தம்பி தூங்காதே (1983)
 9. பூமி கல்யாணம்
 10. மிஸ்ஸம்மா (1955)

ஆதாரங்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 Narasimham, M. L. (1 September 2013). "PUTTILLU (1953)". The Hindu. 30 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
 2. Madhavan, Pradeep (23 January 2015). "அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம்". The Hindu (in Tamil). 11 June 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |trans_title= ignored (உதவி); Invalid |dead-url=live (உதவி)CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனா_(நடிகை)&oldid=3213552" இருந்து மீள்விக்கப்பட்டது