ஜி. கோவிந்தராயுலு
(ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜி. கோவிந்தராஜுலு நாயுடு (G. Govindarajulu Naidu) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோருக்கு முன்னவராக திரையிசையுலகில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்.
இவரின் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, சி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, ஏ. எம். ராஜா, கண்டசாலா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
இசையமைத்த சில பாடல்கள் தொகு
- காலமெனும் சிற்பி செய்யும் கவிதைத்தாய் கோயிலடா.. (மனிதனும் மிருகமும், பாடியவர்: சி. எஸ். ஜெயராமன்)
- ஓய்வில்லாத உலகத்திலே ஒரே கொண்டாட்டம் (பாடியோர்: ௭ம். ௭ம். மாரியப்பா, சி. ௭ஸ். ஜெயராமன்)
- இமயமலைச் சாரலிலே (எம். எல். வசந்தகுமாரி)
- சொக்குதே மனம் (பாக்தாத் திருடன்)
- கற்க கசடறக் கற்பவை (ராஜபக்தி, டி. ௭ஸ். பகவதி, ௭ம். ௭ல். வசந்தகுமாரி)
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் தொகு
கோவிந்தராஜுலு இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன: [1]
- சதி அனுசுயா (1937)
- ராஜபக்தி (1937)
- வேணுகானம் (1941)
- வேணுகானம் (1941)
- விஜயலட்சுமி (1946)
- நம் நாடு (1949)
- அந்தமான் கைதி (1951)
- மனிதனும் மிருகமும் (1953)
- கள்வனின் காதலி (1955 திரைப்படம்)
- மாய மனிதன் (1958)
- பத்தரைமாத்து தங்கம் (1959)
- பாக்தாத் திருடன் (1960)
- சிறீ கந்த லீலா
- சந்திரிகா
மேற்கோள்கள் தொகு
- ↑ "Music by Govindarajulu Naidu". www.indian-heritage.org. http://www.indian-heritage.org/flmmusic/govindarn.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016.