ஜெய பிரகாசு பல்கலைக்கழகம்

ஜெய பிரகாசு பல்கலைக்கழகம் (Jai Prakash University) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சப்ராவில் அமைந்துள்ள மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும்.[1][2] தொடக்கத்தில் சரண் மாவட்ட மக்களின் உயர் மற்றும் தரமான கல்வியின் தேவைகளுக்கு உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் 33 ஆண்டுகளாக உயர் கல்வி சேவையாற்றி வருகின்றது. 21 தொகுதிக் கல்லூரிகள், 11 இணைப்புக் கல்லூரிகள் மற்றும் 10 தொழில்முறைக் கல்லூரிகள் உட்பட 23 முன்மொழியப்பட்ட கல்லூரிகளுடன், பெரும்பாலான பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை மட்டத்தில் படிப்புகளை வழங்குகிறது.

ஜெய பிரகாசு பல்கலைக்கழகம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1990 (35 ஆண்டுகளுக்கு முன்னர்) (1990)
வேந்தர்பீகார் ஆளுநர்
துணை வேந்தர்கிருஷ்ண சந்திர சிங்
அமைவிடம், ,
இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்jpv.ac.in

இது சரண் மாவட்ட மக்களின் கல்வி தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பீகார் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலப் பல்கலைக்கழகமாகச் செயல்படுகிறது. சரண், சீவான் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய சரண் பிரிவின் அதிகார வரம்பைக் கொண்ட இப்பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உறுப்பினராக உள்ளது.

வளாகம்

தொகு

புதிய வளாகத்திற்காக 250 ஏக்கர் (1.0 கிமீ2) நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த புதிய பல்கலைக்கழக வளாகம் பிரதான நகரத்திலிருந்து சுமார் இரண்டு கிமீ தொலைவில் உள்ளது.[3] ஜெய பிரகாசு பல்கலைக்கழகம் 22 நவம்பர் 1990 அன்று பீகார் மாநில பல்கலைக்கழகங்கள் சட்டம், 1976-இன் பிரிவு 3(b) சட்டத்தின் மூலம் சாப்ராவில் இதன் தலைமையகத்துடன் நிறுவப்பட்டது.

புலங்கள்

தொகு

பல்கலைக்கழகம் நான்கு முக்கிய கல்விப் புலங்களைக் கொண்டுள்ளது:

சமூக அறிவியல் புலம்

அறிவியல் புலம்

வணிகவியல் புலம்

  • வணிகவியல் துறை

மானுடவியல் புலம்

உறுப்புக் கல்லூரிகள்

தொகு

இணைவுபெற்றக் கல்லூரிகள்

தொகு

ஜெய பிரகாசு பல்கலைக்கழகத்தின் கீழ் 11 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.

  • பி. ஆர். கல்லூரி, சோன்பூர், சரண் (பற்றாக்குறை மானியம்)
  • இசட். ஏ. இசுலாமியா கல்லூரி, சிவன் (பற்றாக்குறை மானியம் மற்றும் சிறுபான்மை கல்லூரி)
  • டாக்டர்.பி. என். சிங் பட்டக் கல்லூரி, சாப்ரா
  • பி. டி. எசு. எம். மகளிர் கல்லூரி, சேலம்பூர், சாப்ரா
  • லோக் மகாவித்யாலயா, அபீசுபூர் பனியாபூர் (சரன்)
  • தியோராகா பாபா சிறீதர் தாசு பட்டக் கல்லூரி, கத்னா கர்கா (சரன்)
  • தரோகா பிரசாத் ராய் கல்லூரி, சிவன் .
  • மஜ்ருல் அக் பட்டக் கல்லூரி, தார்வாரா (சிவான்)
  • தேஷ் ரத்தன் ராஜேந்திர பிரசாத் பட்டக் கல்லூரி, ஜிராடை (சிவான்)
  • சிறீ மகேந்திர தாசு பட்டக் கல்லூரி, மத்தியா நெச்சுவா, ஜலால்பூர் (கோபால்கஞ்ச்)
  • சிறீகாந்த் பாபு பட்டக் கல்லூரி, பெல்பன்வா குச்சாய்கோட் (கோபால்கஞ்ச்)
  • மாதா ரோஜினி தேவி சாத்து ராம் பட்டக் கல்லூரி, மைர்வா (சிவான்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Jai Prakash University, Chapra". Collegedunia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  2. "Jai Prakash Vishwavidyalaya (jpv) Exam Results 2020 Name Wise". Result91 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  3. "Jai Prakash University Admission 2020 - Application Form, Admit Card". AglaSem Admission (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-14. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.

வெளி இணைப்புகள்

தொகு