ஜேம்ஸ் சி. ஸ்காட்

அமெரிக்க அரசியல் அறிவயலாளர், மானுடவியலாளர்

ஜேம்ஸ் காம்ப்பெல் ஸ்காட் (James Campbell Scott, 2, திசம்பர், 1936- 19, யூலை, 2024) என்பவர் ஒரு அமெரிக்க அரசறிவியலாளரும், ஒப்பிட்டு அரசியலில் நிபுணத்துவம் கொண்ட மானுடவியலாளர் ஆவார். இவர் வேளாண் மற்றும் அரசு சாரா சமுகங்கங்கள், துணை அரசியல், அரசின்மை, உயர் நவீனத்துவம் ஆகியவற்றின் ஒப்பீட்டு அறிஞராக இருந்தார். இவரது முதன்மையான ஆய்வு தென்கிழக்காசியாவின் வேளாண் மக்களையும் பல்வேறு வகையான ஆதிக்கங்களை எதிர்க்கும் உத்திகளை மையமாக கொண்டது.[1] த நியூயார்க் டைம்ஸ் இவரது ஆராய்ச்சிகளை "மிகவும் செல்வாக்கு மிக்கதும் தனித்துவமானதும்"என்று விவரிக்கிறது.[2]

ஜேம்ஸ் சி. ஸ்காட்
2016 இல் ஸ்காட்
பிறப்புஜேம்ஸ் காம்ப்பெல் ஸ்காட்
(1936-12-02)திசம்பர் 2, 1936
மவுன்ட் கொல்லி நகரியம், அமெரிக்கா
இறப்புசூலை 19, 2024(2024-07-19) (அகவை 87)
டர்ஹாம், கனெக்டிகட், அமெரிக்கா
துறைஅரசறிவியல், மானிடவியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பென் கெர்க்வ்லியட்
மெலிசா நோபல்ஸ்
எரிக் ரிங்மர்
ஜான் சைடல்
எரிக் டாக்லியாகோசோ
எலிசபெத் எஃப். கோஹன்
துணைவர்
Louise Glover Goehring
(தி. 1961; இற. 1997)
துணைவர்அன்னா சிங் (1999–2024; இவரது இறப்பு)
பிள்ளைகள்3

இவர் வில்லியம்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், யேல் பல்கலைக்கழத்தில் அரசறிவியலில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்ட ஆய்வும் முடித்தார். இவர் விஸ்கொன்சின்–மேடிசன் பல்கலைக்கழகத்தில் 1976 வரை கற்பித்தார். பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் பேராசிரியராக இருந்தார். 1991 இல், இவர் விவசாய ஆய்வுகள் குறித்த யேலின் திட்ட இயக்குநரானார்.[3] இவர் இறந்த போது, தி நியூயார்க் டைம்ஸ் ஸ்காட்டை மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட சமூக விஞ்ஞானிகளில் ஒருவர் என்று விவரித்தது. தன் அரசியல் சித்தாந்தத்தை Two Cheers for Anarchism (அதிகார மையங்களுக்கு எதிரான அரசியல் கோட்பாட்டை வாழ்த்துதல்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அடிபணியாமல் இருப்பதே பற்காலத்தில் எதிருப்பு இயக்கங்களில் ஈடுபட மக்களைத் தயார் படுத்தும் என்று நம்பினார்.[4]

பின்னணி

தொகு

துவக்ககால வாழ்க்கை

தொகு

ஸ்காட் 1936, திசம்பர், 2, அன்று நியூ செர்சியின், மவுண்ட் கொலியில் பிறந்தார்.[5] நியூ செர்சியின் பெவெர்லியில் வளர்ந்தார். ஸ்காட் மூர்ஸ்டவுன் நண்பர்கள் பள்ளியில், அ நண்பர்கள் சமய சமூகப் பள்ளியில் பயின்றார். மேலும் 1953 இல் மாசசூசெட்சில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் பயின்றார். இந்தோனேசியா அறிஞர் வில்லியம் ஹோலிங்கரின் ஆலோசனையின் பேரில், இவர் பர்மாவின் பொருளாதார மேம்பாடு குறித்து ஒரு ஆய்வறிக்கை எழுதினார். ஸ்காட் 1958 இல் வில்லியம்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், 1967 இல் யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். பல்கலைக்கழக வளாகத்தில் போர் எதிர்பாளராக அறியப்பட்டார்.

தொழில்

தொகு

பட்டம் பெற்றதும், ஸ்காட் பர்மாவில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ரோட்டரி நிதிநல்கையைப் பெற்றார். அங்கு இவர் ரங்கூன் தேசிய மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் நடுவண் ஒற்று முகமை>க்கு (சிஐஏ) பொதுவுடமை எதிர்ப்பு அமைப்பாளாராக ஆனார். ஸ்காட் முகமைக்கு அறிக்கையளிக்க ஒப்புக்கொண்டார். மேலும் தனக்கான நிதிநல்கை முடிந்த பிறகு, தேசிய மாணவர் சங்கத்தின் பாரிஸ் அலுவலகத்தில் ஒரு பதவியைப் பெற்றார். இது அடுத்த சில ஆண்டுகளில் கம்யூனிச- கட்டுப்பாட்டில் உள்ள உலகளாவிய மாணவர் இயக்கங்களுக்கு எதிராக செயபடுவதற்கு நிதியுதவியையும், வழிநடத்தலையும் சிஐஏ ஏற்றுக்கொண்டது.

ஸ்காட் 1961 இல் யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் மேற்படிப்பைப் படிக்கத் தொடங்கினார். மலேசியாவில் அரசியல் சித்தாந்தம் குறித்து ராபர்ட் ஈ. லேனின் மேற்பார்வையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையானது மலேசிய அரசு ஊழியர்களுடனான நேர்காணல்களை பகுப்பாய்வு செய்தது. 1967 ஆம் ஆண்டில், விஸ்கான்சின்–மோடிசன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் உதவி பேராசிரியராக பதவி ஏற்றார். இவரது ஆரம்பகால பணிகள் ஊழல், அரசியல் இயந்திரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக இருந்தது.[6]

வியட்நாம் போரின் போது தென்கிழக்காசியவியல் நிபுணராக கற்பித்தல், போர் மற்றும் விவசாய புரட்சிகள் குறித்த பிரபலமான ஆய்வுகளைச் செய்தார்.[7] 1976 இல், மேடிசனில் பணிபுரிந்த பிறகு, ஸ்காட் யேலுக்குத் திரும்பி, கனெக்டிகட்டில் உள்ள டர்ஹாமில் தனது மனைவியுடன் ஒரு பண்ணையில் குடியேறினார். இவர்கள் ஒரு சிறிய பண்ணையைத் தொடங்கினர், பின்னர் 1980 களின் முற்பகுதியில் அருகிலுள்ள ஒரு பெரிய பண்ணையை வாங்கி கம்பளிக்காக ஆடுகளை வளர்க்கத் தொடங்கினர்.[7] 2011 முதல், பண்ணையில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் பைஃப் மற்றும் டண்டீ எனப்படும் உயர்நில மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

ஸ்காட்டின் முதல் புத்தகங்கள் ஆவண ஆய்வை அடிப்படையாகக் கொண்டவை. இவர் இனவியல் களப்பணியில் செல்வாக்கு மிக்க அறிஞராவார்.[8] இவர் தன் பணிக்காலத்தில் இனவரைவியல் களப்பணிகளை அசாதாரணமாக மேற்கொண்டவர். 1978 மற்றும் 1980 க்கு இடையில் மலேசியாவின், கெடாவில் உள்ள ஒரு சிற்றூரில் தங்கி ஆய்வு நடத்தி பலவீனர்களின் ஆயுதம் (Weapons of the Weak) என்ற நூலை எழுதினார். இவர் தன் நூலின் வரைவை எழுதி முடித்ததும், இரண்டு மாதங்களுக்குத் திரும்பி வந்து தனது சித்தரிப்பு குறித்த கிராமவாசிகளின் அபிப்பிராயத்தைக் கோரினார். பின்னர் அவர்களின் விமர்சனங்கள் அடிப்படையில் புத்தகத்தை கணிசமான அளவில் திருத்தினார்.

2011 ஆம் ஆண்டில், ஸ்காட், மற்ற பர்மிய மற்றும் மேற்கத்திய அறிஞர்களுடன் சேர்ந்து, ஜர்னல் ஆப் தி பர்மா ரிசர்ச் சொசைட்டி இதழை மீண்டும் துவக்குவதை நோக்கமாக கொண்டு யேலில் கூடினர்.[9][10] இன்டிபென்டன்ட் ஜர்னல் ஆஃப் பர்மீஸ் ஸ்காலர்ஷிப் (IJBS) என்று பெயரிடப்பட்ட பத்திரிகையின், முதல் இதழ் 2016 ஆகத்தில் வெளியிட்டது.[9][10]

ஸ்காட் 2022 இல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும்

தொகு

1961 ஆம் ஆண்டில், ஸ்காட் லூயிஸ் குளோவர் கோஹ்ரிங்கை மணந்தார்; அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன, 1997 இல் அவர் இறக்கும் வரை திருமண வாழ்வு நீடித்தது. 1999 இல், இவர் மானுடவியலாளரான அன்னா சிங்குடன் வாழத் தொடங்கினார், அது இவர் இறக்கும் வரை நீடித்தது.

ஸ்காட் டர்ஹாம், கனெக்டிகட்டில் வசித்து வந்தார். இவர் 19, யூலை, 2024 அன்று தனது 87 வயதில் அவரது வீட்டில் காலமானார்.[11]

முக்கிய படைப்புகள்

தொகு

ஸ்காட்டின் பணியானது, ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒடுக்கபட்ட மக்களின் பாதையில் கவனம் செலுத்துவதாக இருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல்

தொகு

(குறிப்பு: திருத்தப்பட்ட தொகுதிகள் விலக்கபட்டுள்ளது.)

மேற்கோள்கள்

தொகு
  1. Schuessler, Jennifer (December 5, 2012). "James C. Scott: Farmer and Scholar of Anarchism". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து April 17, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417182732/https://www.nytimes.com/2012/12/05/books/james-c-scott-farmer-and-scholar-of-anarchism.html. 
  2. Schuessler, Jennifer (December 4, 2012). "James C. Scott, Farmer and Scholar of Anarchism". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து April 17, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417182732/https://www.nytimes.com/2012/12/05/books/james-c-scott-farmer-and-scholar-of-anarchism.html. 
  3. "Academic Prize 2010, Award Citation". Fukuoka Prize. 2010. Archived from the original on August 20, 2018. பார்க்கப்பட்ட நாள் February 24, 2015.
  4. "அஞ்சலி: ஜேம்ஸ் சி.ஸ்காட் (1936-2024)". 2024-08-11. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help); Text "எதிர்ப்புவாதத்தை ஆராய்ந்த சமூக விஞ்ஞானி" ignored (help)
  5. "James C. SCOTT". Secretariat of the Fukuoka Prize Committee. Archived from the original on August 20, 2018. பார்க்கப்பட்ட நாள் August 10, 2017.
  6. Scott, James C. (2024). "Intellectual Diary of an Iconoclast" (in en). Annual Review of Political Science 27 (1): 1–7. doi:10.1146/annurev-polisci-032823-090908. பன்னாட்டுத் தர தொடர் எண்:1094-2939. https://www.annualreviews.org/doi/10.1146/annurev-polisci-032823-090908. 
  7. 7.0 7.1 Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified
  8. Wedeen, Lisa (May 1, 2010). "Reflections on Ethnographic Work in Political Science". Annual Review of Political Science 13 (1): 255–272. doi:10.1146/annurev.polisci.11.052706.123951. பன்னாட்டுத் தர தொடர் எண்:1094-2939. 
  9. 9.0 9.1 "About အကြောင်း". Independent Journal of Burmese Scholarship. Archived from the original on March 25, 2023. பார்க்கப்பட்ட நாள் March 25, 2023.
  10. 10.0 10.1 "Professor's mission to launch scholarly journal in Burma now a reality". YaleNews (in ஆங்கிலம்). November 8, 2016. Archived from the original on March 25, 2023. பார்க்கப்பட்ட நாள் March 25, 2023.
  11. "James C. Scott passed peacefully in his home in Durham, CT on July 19, 2024. | Department of Political Science". யேல் பல்கலைக்கழகம். July 23, 2024. Archived from the original on July 23, 2024. பார்க்கப்பட்ட நாள் July 24, 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_சி._ஸ்காட்&oldid=4069335" இலிருந்து மீள்விக்கப்பட்டது