ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை

மலேசிய கூட்டரசு சாலை 38

ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 38 (ஆங்கிலம்: Malaysia Federal Route 38; அல்லது Johor Bahru Eastern Dispersal Link Expressway); மலாய்: Laluan Persekutuan Malaysia 38 அல்லது Lebuhraya Penyebaran Timur Johor Bahru) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் உருவாக்கப்பட்ட மிக நவீன நெடுஞ்சாலை ஆகும்.[1]

மலேசிய கூட்டரசு சாலை 38
Malaysia Federal Route 38
Laluan Persekutuan Malaysia 38

ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை
Johor Bahru Eastern Dispersal Link Expressway
Lebuhraya Penyebaran Timur Johor Bahru

வழித்தட தகவல்கள்
AH2- இன் பகுதி
பராமரிப்பு மலேசிய பொதுப்பணித் துறை
நீளம்:8.1 km (5.0 mi)
பயன்பாட்டு
காலம்:
2007 –
வரலாறு:கட்டுமானம் 2012
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:E2 மலேசிய தெற்கு வழித்தடம்; பாண்டான் ஜெயா, ஜொகூர்
 3 தெப்ராவ் நெடுஞ்சாலை

35 ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை

J5 ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை

188 ஜொகூர் பாரு உள்வட்டச் சாலை
தெற்கு முடிவு: புக்கிட் தீமா விரைவுச்சாலை மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பெர்மாஸ் ஜெயா, கம்போங் பாக்கார் பத்து, பாசிர் பெலாங்கி, இசுதுலாங்
நெடுஞ்சாலை அமைப்பு

ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை என்பது 8.1 கிலோமீட்டர் (5.0-மைல்) நீளம் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை என அறியப்படுகிறது.

இந்தச் சாலை, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்தின் இறுதிக் கட்டத்தில் பாண்டான் நகர மையத்தில் உள்ள மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்துடன் இணைகிறது.

பொது

தொகு

சிங்கப்பூருக்குள் எல்லை தாண்டிச் செல்லும் வாகனப் போக்குவரத்துகள், ஜொகூர் பாரு நகர மையத்தை எளிதாகக் கடந்து செல்லவும்; தெப்ராவ் நெடுஞ்சாலையில் (Johor Bahru–Kota Tinggi Highway) நெரிசலைக் குறைக்கவும் இந்த அதிவேக நெடுஞ்சாலை கட்டப்பட்டது.[2]

இந்த அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவு ரிங்கிட் RM 1 பில்லியன் ஆகும்.[3]

ஒன்பதாவது மலேசியா திட்டம்

தொகு

இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் சுல்தான் இசுகந்தர் கட்டிடத்திற்கு முன்; ஜொகூர் பாரு சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப் படுத்துதல் (Customs, Immigration and Quarantine (CIQ) Complex) வளாகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

2004-ஆம் ஆண்டில், ஒன்பதாவது மலேசியா திட்டத்தின் (Ninth Malaysia Plan) (2006-2010) கீழ், ஜொகூர் பாரு கிழக்குப் பரவல் இணைப்பின் (Johor Bahru Eastern Dispersal Link) கட்டுமானம் முன்மொழியப்பட்டது.

ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1 அக்டோபர் 2007-இல் தொடங்கி; 20 மார்ச் 2012-இல் நிறைவடைந்தது. 1 ஏப்ரல் 2012 அன்று, நெடுஞ்சாலை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[4]

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Govt takes over highway". thestar.com.my. 31 August 2012. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012.
  3. 12 projects in IDR this year பரணிடப்பட்டது 9 பெப்பிரவரி 2010 at the வந்தவழி இயந்திரம்
  4. "EDL OPENS WITH NO TOLL FOR NOW". Today. 2 April 2012. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/today20120402-1.2.24.4?qt=malaysian,%20highway,%20authority&q=malaysian%20highway%20authority. 

வெளி இணைப்புகள்

தொகு