ஜோனி பேர்ஸ்டோ

Arnab Goswami
(ஜொனாதன் பேர்ஸ்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ (Jonathan Bairstow, பிறப்பு: செப்டம்பர் 26 1989) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யார்க்சையர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.[1]

ஜோனி பேர்ஸ்டோ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோனதான் மார்க் பேர்ஸ்டோ
பிறப்பு26 செப்டம்பர் 1989 (1989-09-26) (அகவை 35)
பிராட்ஃபோர்ட், மேற்கு யோர்க்ஷைர், இங்கிலாந்து
பட்டப்பெயர்YJB
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலது-கை
பங்குஇழப்புக் கவனிப்பாளர்-மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 652)17 மே 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு4 மார்ச் 2021 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 223)16 செப்டம்பர் 2011 எ. இந்தியா
கடைசி ஒநாப16 செப்டம்பர் 2020 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்51
இ20ப அறிமுகம் (தொப்பி 56)23 செப்டம்பர் 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப16 மார்ச் 2021 எ. இந்தியா
இ20ப சட்டை எண்51
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–தற்போதுயோர்க்ஷைர் (squad no. 21)
2016-2018பெஷாவர் சல்மி (squad no. 29)
2019–presentசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 51)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒப இ20ப முத
ஆட்டங்கள் 74 83 49 187
ஓட்டங்கள் 4,197 3,207 1,018 11,845
மட்டையாட்ட சராசரி 34.12 47.16 29.94 42.91
100கள்/50கள் 6/21 10/13 0/6 24/63
அதியுயர் ஓட்டம் 167* 141* 86* 246
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
186/13 39/2 35/0 456/22
மூலம்: ESPNcricinfo, 17 மார்ச் 2021

வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். ஒரு நாட்காட்டி ஆண்டில் இழப்புக் கவனிப்பாளராக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியும் அதிக ஓட்டங்களை எடுத்தும் சாதனை படைத்தார். இவர் பென் ஸ்டோக்சுடன் இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.

வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளருமாவார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளரான இவர் இங்கிலாந்து தேசியத் துடுப்பாட்ட அணி தவிர இங்கிலாந்து லயன்ஸ், இங்கிலாந்து பெர்பார்மன்ஸ்புரோகிராம் பெசாவர் சல்மி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்து,யார்க்சயர்போன்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

முதல்தரத் துடுப்பாட்டம்

தொகு

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக யார்க்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 11,லீட்சு மைதானத்தில் சாமர்சட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 49 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்து முன்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 149 பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் சாமர்செட் அணி நான்கு இழக்குகளால் வெற்றி பெற்றது.[2] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி உலக தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார். செப்டம்பர் 12 , ஓவல் மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 55 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 24 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[3]

பட்டியல் அ

தொகு

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரோ40 மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் யார்க்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூலை 15, வோர்செஸ்டர் மைதானத்தில் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். அலி வீசிய ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணி 12 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூலை 14, இலார்ட்சு மைதானத்தில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் 55 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்து பெர்கூசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[5]

சர்வதேசப் போட்டிகள்

தொகு

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

2012 ஆம் ஆண்டில் மேற்கிந்திந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மே 17, இலார்ட்சு துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 27 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து கீமர் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் மூன்று பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது.[6] செப்டம்பர் 12 , ஓவல் மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தெர்வுத் துடுப்பட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 55 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 24 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சான்றுகள்

தொகு


  1. "England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.
  2. "Full Scorecard of Yorkshire vs Somerset, County Championship Division One, 2nd Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  3. "Full Scorecard of England vs Australia, ICC World Test Championship, 5th Test - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  4. "Full Scorecard of Worcestershire vs Yorkshire, Pro40 League (Sunday League / National League), Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  5. "Full Scorecard of England vs New Zealand, World Cup, Final - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  6. "Full Scorecard of England vs West Indies 1st Test 2012 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.

வெளி இணைப்பு

தொகு

ஜொனாதன் பேர்ஸ்டோ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 1 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனி_பேர்ஸ்டோ&oldid=3120363" இலிருந்து மீள்விக்கப்பட்டது