ஞானச்செல்வன்

தமிழ் எழுத்தாளர்

கோ. திருஞானசம்பந்தம் என்ற இயற்பெயர் கொண்ட "கவிக்கோ" ஞானச்செல்வன் (பிறப்பு: 28 நவம்பர் 1939) ஓர் தமிழ்நாட்டு மரபுக் கவிஞரும், தமிழறிஞரும், எழுத்தாளரும், பேச்சாளரும், ஊடகவியலாளரும் ஆவார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டக் கிளையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில்[தெளிவுபடுத்துக] தங்கம், வெள்ளி, கேடயம், சிறப்பு விருதுகள் எனப் பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றவர்.

கவிக்கோ
ஞானச்செல்வன்
திருவாரூர் மாவட்டக்
கிளைத் தலைவர்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
பதவியில்
1961(?)–?
முன்னையவர்?
பின்னவர்?
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
திருஞானசம்பந்தம்

28 நவம்பர் 1939 (1939-11-28) (அகவை 84) .
மதுக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம் (முதுகலை பட்டம், முதுநிலை கல்வியியல்)
வேலைகவிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர்
தொழில்தமிழாசிரியர் (ஓய்வு)

தொடக்க வாழ்க்கை

தொகு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூரில் 28 நவம்பர் 1939 அன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.க. கோவிந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஞானச்செல்வன்.[1] இவருக்கு முதலில் இடப்பட்ட பெயர் திருஞானசம்பந்தம்.

தொடக்கக் கல்வியை மதுக்கூரிலும் ஒரத்தநாடு உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் புலவர் பட்டம் பெற்றார். புதுக்கோட்டை அரசு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், முதுநிலைக் கல்வியியல் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

தொகு

திருவாரூர் கழக மேனிலைப் பள்ளியில் (Board High School; தற்போது வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) 1997 வரை முதுகலைப் பட்டதாரித் தமிழாசிரியாராக பணியாற்றினார் இக் காலகட்டத்தில் இவர் மாணவர்களுள் ஒருவராக ஆரூர் தமிழ்நாடன் இருந்தார்.

1998 முதல் சென்னையில் வாழ்ந்து வருகிறார் ஞானச்செல்வன்.

தமிழ்ப்பணி

தொகு

இதழியல்

தொகு

பல ஏடுகளுக்கும், இதழ்களுக்கும் பங்களித்துள்ளார்.

ஊடகம்

தொகு

தூர்தர்சன் தொலைக்காட்சியின் சென்னை கிளையில் (தற்போது பொதிகை தொலைக்காட்சி) 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் நேயர்களுக்குத் தமிழ் கற்பித்த பேராசிரியர் மா. நன்னனின் தாக்கத்தில் தவறின்றித் தமிழ் பேசுவோம் எனும் தொடர் நிகழ்ச்சியில் மூன்றாண்டுகள் கற்பித்தார் ஞானச்செல்வன்.[2]

பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்களித்துள்ளார்.

உரைகள்

தொகு

தனியுரை. தொடருரை, பேருரை ஆகிய வடிவங்களில் உரையாற்றியுள்ளார். தில்லித் தமிழ்ச் சங்கம், கோலாலம்பூர்த் தமிழ்ச் சங்கம், மும்பை பாண்டூப் தமிழ்ச் சங்கம் முதலியவற்றில் சிறப்புரையாற்றியுள்ளார். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் மூன்று முறையும் தாய்லாந்தில் ஒருமுறையும் தமிழ்ப்பேருலா நிகழ்த்தியுள்ளார்.

பயிற்றுவித்தல்

தொகு

நல்ல தமிழ் அறிவோம் என்ற தலைப்பில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய வகுப்பறையில் காணொலிக் காட்சி மூலமாகப் பாடங்களை நடத்தி வருகிறார்.[3]


தன் 55 ஆண்டுகாலத் தமிழ்ப்பணியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார்.

படைப்புகள்

தொகு
ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
1968 பாடி வந்த நிலா கவிதைத் தொகுப்பு அறிவு நிலையம்
1985 கதை சொல்லும் மங்கலங்கள் பண்புப் பதிப்பகம், திருவாரூர்
1986 அர்த்தமுள்ள அரங்குகள்
1987 (?) ஓ...இளமையே!
1988 வானில் தவழ்ந்த வார்த்தைகள் வானொலி உரைகள் பண்புப் பதிப்பகம், திருவாரூர்
2000 சாதனைச் சரித்திர நாயகர் ம.பொ.சி நயந்தோய்வு மதி நிலையம்
2001 தமிழ் அறிவோம் மொழி ஆய்வு மணிவாசகர் பதிப்பகம்
2004 சொல்லறிவோம் சொல்லாய்வு உஷா பிரசுரம்
2005 தேடரியக் கருவூலம்
2006 முத்தமிழுக்கு மேல் ஒரு தமிழா? கட்டுரைத் தொகுப்பு தென்றல் நிலையம்
2007 கல்வெட்டுகளில் கன்னித் தமிழ் தென்றல் நிலையம்[4]
2009 ஞானச்செல்வன் கவிதைகள் (முழுத் தொகுப்பு) சாந்தா பதிப்பகம்
2010 தமிழில் மரியாதைச் சொற்கள் மொழி ஆய்வு மணிவாசகர் பதிப்பகம் (?);

மெய்யப்பன் பதிப்பகம்

2011 பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் இலக்கண இலக்கியம் மணிவாசகர் பதிப்பகம்
2011 (?) அருளாளர்கள் ஆன்மிகம் மணிவாசகர் பதிப்பகம்
2011 (?) சிந்தனைச் சுடர் தொலைக்காட்சி உரைகள் மணிவாசகர் பதிப்பகம்
2011 (?) சிலப்பதிகாரச் சிறப்பு நயந்தோய்வு மணிவாசகர் பதிப்பகம்
2011 (?) நீங்களும் கவிஞராகலாம் யாப்பு இலக்கணம் மணிவாசகர் பதிப்பகம்
2015 எழுத்துத் திரட்டு கட்டுரைகள் மணிவாசகர் பதிப்பகம்
2015 (?) பாரதி வாழ்கிறார் கட்டுரைகள்
2017 அறிவோம் அன்னைமொழி வானதி பதிப்பகம்
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
2018 சொல் விளைந்த கழனி
2018 (?) இன்றும் இனிக்கிறது நேற்று வானதி பதிப்பகம்
? இனியவை எழுபது கவிதைத் தொகுப்பு
? எண்ணம் பதினாறு கட்டுரைத் தொகுப்பு மணிவாசகர் பதிப்பகம்
? கல்லெல்லாம் கலையாகுமா?

சொல்லெல்லாம் சுவையாகுமா?

வானதி பதிப்பகம்
? கவிதைப் பூக்காடு கவிதைத் தொகுப்பு
? சிலம்பின் பரல்கள் இலக்கிய விளக்கம்
? சிலம்புச் செல்வர் வாழ்க்கை வரலாறு
? சிலம்புச் செல்வர் கவிதாஞ்சலி கவிதைத் தொகுப்பு
? தமிழில் அறிவியல்புலம் கட்டுரைத் தொகுப்பு
? தமிழ் அறிவோம் (புதிய பதிப்பு -இணைப்புடன்)
? தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க கட்டுரைத் தொகுப்பு மணிவாசகர் பதிப்பகம்
? பாட்டரங்கப் பாடல்கள் மேடைக் கவிதைகள்
? பிழையின்றித் தமிழ் பேசுவோம் (முழுமைப் பதிப்பு) மணிவாசகர் பதிப்பகம்[5]
? பிறமொழி, தமிழ்மொழி அகரமுதலி அகரமுதலி ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
? பேசாத பேச்சு கவிதைத் தொகுப்பு

விருதுகள்

தொகு

1968- இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்றவர். மலேசியா, உலகத் திருக்குறள் மாநாடு, புதுவை அரசு, பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், மதுரை எழுத்தாளர் மன்றம், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலிய அமைப்புகளில் கவிதைப் போட்டிகளில் முதல், இரண்டாம் பரிசுகள் பதினாறு பெற்றவர்.நற்றமிழ்ப் பாவலர், கவிக்கோ, நற்கவித் திலகம், தமிழ்ச்செம்மல், நற்றமிழறிஞர், பாரதி இலக்கியச் செல்வர், தமிழ்மாமணி, பேருரை நம்பி உள்ளிட்ட சிறப்புப் பட்டங்கள் பதினெட்டும் ஆழ்வார்கள் ஆய்வு மையம், கம்பன் கழகம், த.எ. சங்கம், கண்ண ப்பன் வாசுகி அறக்கட்டளை போன்ற அமைப்புகள் வழங்கிய விருதுகளும் பெற்றவர்.

2019-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதும் அதனுடன் உரூபாய் 1,00,000 மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் ஞானச்செல்வனுக்கு வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Subramanian, Chandar, தொகுப்பாசிரியர். "நேர்காணல் : கவிக்கோ ஞானச்செல்வன்". இலக்கியவேல். https://books.google.co.in/books?id=OXLpDwAAQBAJ&printsec=frontcover&dq=Ilakkiyavel+-+Issue+No+63+-+Jan+2019:+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&hl=en&newbks=1&newbks_redir=0&sa=X&redir_esc=y#v=onepage&q=Ilakkiyavel%20-%20Issue%20No%2063%20-%20Jan%202019%3A%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&f=false. 
  2. "மா. நன்னன்: தனிநபர் தமிழியக்கம்!". இந்து தமிழ் (நாளிதழ்).
  3. https://www.vallamai.com/?p=59187. {{cite web}}: Missing or empty |title= (help)
  4. "கல்வெட்டுகளில் கன்னித்தமிழ்". Integrated Online Public Access Catalog (OPAC). பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21827&Itemid=139. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. https://www.dinamani.com/tamilnadu/2020/jan/14/tamil-development-department-awards-announced-3331884.html. {{cite web}}: Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானச்செல்வன்&oldid=3821759" இலிருந்து மீள்விக்கப்பட்டது