டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம்
டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் அல்லது டத்தோ கெராமாட் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Dato' Keramat LRT Station; மலாய்: Stesen Dato' Keramat; சீனம்: 拿督克拉末) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.[2][3]
டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் (2023) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Dato' Keramat 拿督克拉末 | ||||||||||
அமைவிடம் | டத்தோ கெராமாட் சாலை, கம்போங் டத்தோ கெராமாட் 54000 கோலாலம்பூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°09′54″N 101°43′54″E / 3.16500°N 101.73167°E | ||||||||||
உரிமம் | பிரசரானா மலேசியா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் பேருந்து: T224 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலையம் | ||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இலவசம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ7 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1 சூன் 1999 (எல்ஆர்டி) | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையத்திற்கு, ஜாலான் டத்தோ கெராமாட் என்ற சாலையின் பெயரில் இருந்து பெயரிடப்பட்டது. மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.[2]
பொது
தொகுகம்போங் டத்தோ கெராமட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேவை செய்வது இந்த நிலையத்தின் நோக்கமாகும். கம்போங் டத்தோ கெராமட், தித்திவாங்சா மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு பெரிய மண்டலமாகும்.[4]
பொதுவாக மலேசியாவில் கிராமம் என்பதை கம்போங் (Kampung) என்று அழைப்பது வழக்கமாகும். அந்த வகையில் கெராமாட் கிராமம் என்பது கம்போங் டத்தோ கெராமாட் (Kampung Datuk Keramat) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையத்தின் தெற்கே அம்பாங்-கோலாலம்பூர் உயர்மட்ட விரைவுச்சாலை (Ampang–Kuala Lumpur Elevated Highway - AKLEH); மற்றும் கிள்ளான் ஆறு ஆகியவை உள்ளன.
அமைவு
தொகுஇந்த நிலையம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நிலையமாகும். தொடருந்துகள் வழியாக ஏறி இறங்கும் இடம் தரையிலிருந்து மேலே உள்ளது. இந்த நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைகளுக்கான மையத் தளமும் உள்ளது.[5]
ஓர் உயரமான நிலைய அமைப்பைக் கொண்ட டத்தோ கெராமாட் நிலையம் இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளது; அதாவது இரண்டு அடுக்குத் தளங்களைக் கொண்டது. கீழ் அடுக்கில், சாலை மட்டத்தில் பயணிகளின் அணுகல் தளம் உள்ளது; மற்றும் மேல் உயர் அடுக்கு நிலைகளில் கடப்புச் சீட்டு, சிற்றுண்ண்டிச் சாலைகள் உள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை
தொகுஅனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது.
நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து எண் | வழி | பேருந்து இணைப்புகள் |
---|---|---|
KJ6 KJ7 தாமான் மெலாவத்தி | T100 T103 T104 T107 T120 T121 T152 T180 190 191 200 202 250 T300 T303 | |
KJ7 டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் | 253 T300 T301 T302 T303 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
- ↑ 2.0 2.1 "Dato Keramat LRT Station is an elevated rapid transit station in northern Kuala Lumpur, Malaysia, forming part of the Kelana Jaya Line. The Station was opened on 1 June 1999, as part of the line's second segment encompassing 13 stations between Masjid Jamek Station and Gombak Station and an underground line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 5 November 2024.
- ↑ "Dato' Keramat LRT station serving Kampung Datuk Keramat and Titiwangsa constituency". klia2.info. 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2024.
- ↑ "Dato Keramat LRT Station". Kuala Lumpur Mass Rapid Transit. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 3 November 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Jelatek LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.