டார்ச்லைட் (2018 திரைப்படம்)

இந்தியத் திரைப்படம்

டார்ச்லைட் (Torchlight) என்பது 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்த பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை அப்துல் மஜித் என்பவர் தயாரித்து எழுதி இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் சதா, ரித்விகா, திருமுருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கான்ஃபிடன்ட் பிலிம் கபே என்ற தயாரிப்பு பதாகையின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது. இந்த படம் 1970களில் வெளியான சேத்னா என்ற பாலிவுட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும், 1990களில் தமிழக-ஆந்திர நெடுஞ்சாலைகளில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.[2] படம் பிப்ரவரி 2017இல் தொடங்கப்பட்டது. படத்தின் முதன்மை புகைப்படம் 2017 பிப்ரவரி 23 அன்று தொடங்கியது.[3] இந்த படம் 2018 செப்டம்பர் 7 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் தெலுங்கு பதிப்பில் சிறீமதி 21 எஃப் என்றும் பெயரிடப்பட்டது.[4]

டார்ச்லைட்
இயக்கம்அப்துல் மஜித்
தயாரிப்புஅப்துல் மஜித்
கதைஅப்துல் மஜித்
நடிப்புசதா
ரித்விகா
திருமுருகன்
கலையகம்கான்ஃபிடன்ட் பிலிம் கபே
வெளியீடுசெப்டம்பர் 7, 2018 (2018-09-07)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

கதை தொகு

பாலியல் தொழிலாளியாக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு பெண்ணைச் சுற்றி கதை சுழல்கிறது.

தயாரிப்பு தொகு

திரைப்பட தயாரிப்பாளர்கள் பிப்ரவரி 2017 இல் இந்த திட்டத்தை அறிவித்து, விபச்சாரம் குறித்தும், தெருக்களில் பணிபுரியும் போது மோசமாக துன்பப்படும் பெண்களின் வாழ்க்கை குறித்தும் இந்த படம் அமையும் என்பதை வெளிப்படுத்தினார்கள். இந்த படம் 1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் நடப்பதாக அமைக்கப்பட்டது. நடிகை சதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2015 ஆம் ஆண்டு எலி படத்திற்குப் பிறகு தமிழகத் திறையுலகில்மீண்டும் வந்தார்.[5][6]

படத்தின் முதல் சுவரொட்டியை இயக்குனர் 2017 திசம்பர் 1 அன்று வெளியிட்டார்.[7]

தணிக்கை தொகு

இந்திய தணிக்கை வாரியம் விதித்த தணிக்கைத் தடைகள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது. இதன் விளைவாக ஏறக்குறைய 87 வெட்டுக்கள் மற்றும் 'மோசமான உள்ளடக்கம்' இருப்பதாகக் கூறி படத்திற்கு சான்றிதழ் வழங்க ஆரம்பத்தில் தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது.[8] இயக்குனர் மும்பைக்குச் சென்று தணிக்கை சிக்கலைத் தீர்த்துக் கொண்டார். மேலும் படம் தணிக்கை திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து ஒரு சான்றிதழைப் பெற்று வெளியிட அனுமதிக்கப்பட்டது.[9]

வரவேற்பு தொகு

மாலை மலர் இந்த படத்திற்கு 100க்கு 83 என மதிப்பிட்டது. சமயம் தமிழ் 5 நட்சத்திரங்களுக்கு 2.5 என மதிப்பிட்டது.[10]

குறிப்புகள் தொகு

  1. Torch Light Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, பார்க்கப்பட்ட நாள் 30 October 2019
  2. "Torchlight to finally see the light of the day". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. K, Manaswini (18 October 2019). "Once Popular Actress Sadha in Vulgar Trailer Shrimati 21F". mirchi9.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  5. "The Sadha interview | 'I censored 'Torchlight' myself; did not want film to look sleazy'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  6. "Sadaa back in the spotlight". https://www.thehindu.com/entertainment/remember-sadaa-from-anniyan-and-unnale-unnale-shes-back-on-the-big-screen-now/article24871864.ece. 
  7. "Torchlight first look: Watch a provocative Sadha in Abdul Majith's new film". Hindustan Times (in ஆங்கிலம்). 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  8. "Torchlight: This film about prostitutes to finally see the light of day after battle with censor board". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  9. "Sadha's Torchlight finally cleared by CBFC with A certificate". India Today. 18 July 2018. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  10. "Torch Light Review: டாா்ச் லைட் -Samayam Tamil". Tamil Samayam. 7 September 2018. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.