டிசி என்டர்டெயின்மென்டு

டிசி என்டர்டெயின்மென்டு (ஆங்கில மொழி: DC Entertainment) என்பது செப்டம்பர் 2009 இல் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பர்பாங்க், கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு வார்னர் புரோஸ். என்டர்டெயின்மென்ட்டின் துணை நிறுவனமாக இயங்கிவருகிறது. இது டிசி காமிக்ஸின் அறிவுசார் சொத்துக்களை (எழுத்துகள்) நிர்வகிக்கிறது.

டிசி என்டர்டெயின்மென்டு
வகைகிளை நிறுவனம்
வகைமீநாயகன் புனைகதை
தலைமையகம்பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்பாம் லிபோர்ட் (தலைவர்)
அன்னே லியுங் டிபீஸ் (துணைத் தலைவர் & பொது மேலாளர்)
ஜிம் லீ (தலைமை படைப்பாற்றல் அதிகாரி)
அமித் தேசாய் (நிர்வாக துணைத் தலைவர்)
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்
சேவைகள்உரிமம்
தாய் நிறுவனம்வார்னர் புரோஸ்.
பிரிவுகள்
உள்ளடக்கிய மாவட்டங்கள்

வரலாறு

தொகு

உருவாக்கம்

தொகு

செப்டம்பர் 9, 2009 இல்[1][2] டிசி காமிக்ஸ் நிறுவனம் டிசி என்டர்டெயின்மென்டின் துணை நிறுவனமாக மாறும் என்று வார்னர் புரோஸ். நிறுவனம் அறிவித்தது. பின்னர் வார்னர் பிரீமியரின் தலைவரான டயான் நெல்சன், புதிதாக உருவாக்கப்பட்ட ஹோல்டிங் நிறுவனம் மற்றும் டிசி காமிக்ஸ் ஆகியவற்றின் தலைவரானார். தலைவரும் வெளியீட்டாளருமான பால் லெவிட்ஸ் அங்கு பங்களிக்கும் ஆசிரியர் மற்றும் ஒட்டுமொத்த ஆலோசகர் பதவிக்கு மாறினார்.[3] வார்னர் புரோஸ். மற்றும் டிசி காமிக்ஸ் ஆகியவை 1969 முதல் ஒரே நிறுவனத்திற்குச் சொந்தமானவை.

டைம் வார்னர்/வார்னர் மீடியா (2010–2022)

தொகு

பிப்ரவரி 18, 2010 அன்று, டிசி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் ஜிம் லீ மற்றும் டான் டிடியோவை டிசி காமிக்ஸின் இணை-வெளியீட்டாளர்களாகவும், ஜெஃப் ஜான்ஸ் தலைமை கிரியேட்டிவ் அதிகாரியாகவும், ஜான் ரூட் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டுக்கான துணைத் தலைவராகவும் மற்றும் பேட்ரிக் கால்டனை நிதி மற்றும் நிர்வாகத்தினராகவும் அறிவித்தது.[4]

டிஜிட்டல் விநியோகம்

தொகு

ஆகஸ்ட் 2020 இல் டிசி யுனிவர்சின் அனைத்து காணொளி உள்ளடக்கங்களும் எச்பிஓ மாக்சுக்கு[5] இடம்பெயர்ந்துவிடும் என்று டிசி வெளியீட்டாளர் ஜிம் லீ அறிவித்தார். அத்துடன் டிசி யுனிவர்சின் பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.[6] செப்டம்பர் 2020 இல் டிசி யுனிவர்சின் அசல் நிரலாக்கம் மற்றும் எதிர்கால தயாரிப்புகள் வார்னர் மீடியாவின் புதிய ஓடிடி சேவையான எச்பிஓ மாக்சு இல் பதிவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Wyatt, Edward (2009-09-09). "DC Comics Revamped Under a New President" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2009/09/10/business/media/10warner.html. 
  2. "WARNER BROS. CREATES DC ENTERTAINMENT". DC (in ஆங்கிலம்). 2009-09-09. Archived from the original on 2022-04-13. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
  3. "Warner Bros. Creates DC ENTERTAINMENT To Maximize DC Brands". Newsarama இம் மூலத்தில் இருந்து September 11, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090911131048/http://www.newsarama.com/comics/090909-DC-Restructuring.html. 
  4. "DC Names DiDio & Lee Co-Publisher, Johns Chief Creative Officer". Comic Book Resources. February 18, 2010. Archived from the original on October 26, 2008. பார்க்கப்பட்ட நாள் December 13, 2021.
  5. "DC's Jim Lee on the Company's Future: "We Are Still in the Business of Publishing Comics"". Hollywood Reporter. August 14, 2020. பார்க்கப்பட்ட நாள் August 25, 2020.
  6. "DC Comics, DC Universe Hit By Major Layoffs". Hollywood Reporter. August 10, 2020. பார்க்கப்பட்ட நாள் August 25, 2020.