டேனிஷ்பேட்டை

சேலம் மாவட்ட சிற்றூர்

டேனிஷ்பேட்டை (Danishpet ) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் டேனிஷ்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது.

டேனிஷ்பேட்டை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
636 354

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்தில் இருந்து வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும், காடையாம்பட்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2449 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 9618 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4666 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4952 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 60.0 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

டேனிஷ்பேட்டை பெரிய ஏரி

தொகு

இந்த ஏரிப் பகுதியில் வெண்பிடரி பட்டாணி குருவி, சிவப்புச் சில்லை, கருங்குருகு, அல்லிச் சிறகி, செந்தலை வல்லூறு, வெண்முதுகு வல்லூறு, வெண்முதுகு பூனைப்பருந்து, சாம்பல் தலை மைனா உள்ளிட்ட மொத்தம் 124 அரிய பறவைகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஏரியைச் சுற்றி வேளாண் நிலங்களும், சேர்வராயன் மலைப்பகுதியும் இருப்பதால் பலவகையான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. கிளர்காலத்தில் பல வெளிநாட்டு வலசை பறவைகள இங்கு காண முடியும்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Danishpet Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
  2. "இயற்கைப் புகலிடங்களின் வரிசையில் சேருமா சேலம்?". Hindu Tamil Thisai. 2023-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனிஷ்பேட்டை&oldid=3745022" இலிருந்து மீள்விக்கப்பட்டது