டைமெத்தில்யூரியா
டைமெத்தில்யூரியா (Dimethylurea) என்பது C3H8N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் 1,3-டைமெத்தில்யூரியா என்ற பெயரால் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. யூரியாவிலிருந்து வழிப்பெறுதியாக உருவாக்கப்படும் இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளில் இடைநிலைச் சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற படிகத் தூளாகக் காணப்படும் இச்சேர்மம் சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,3-டைமெத்தியூரியா[1]
| |
இனங்காட்டிகள் | |
96-31-1 | |
ChEBI | CHEBI:80472 |
ChemSpider | 7021 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C16364 |
ம.பா.த | 1,3-டைமெத்தில்யூரியா |
பப்கெம் | 7293 |
வே.ந.வி.ப எண் | YS9868000 |
| |
பண்புகள் | |
C3H8N2O | |
வாய்ப்பாட்டு எடை | 88.11 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற மெழுகு படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 1.142 கிராம் மில்லி−1 |
உருகுநிலை | 104.4 °C; 219.8 °F; 377.5 K |
கொதிநிலை | 269.1 °C; 516.3 °F; 542.2 K |
765 கிராம் லிட்டர்−1 | |
-55.1·10−6 செ.மீ3/மோல் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−312.1–−312.1 கிலோயூல் மோல் −1 |
Std enthalpy of combustion ΔcH |
−2.0145–−2.0089 மெகாயூல் மோல்−1 |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | H373[1] R22, R24/25 |
S-சொற்றொடர்கள் | P260, P314, P501H373[1] |
தீப்பற்றும் வெப்பநிலை | 157 °C (315 °F; 430 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4 கிலோ கிராம்−1 (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுகாஃவீன், தியோப்பைலின், மருந்துவகை வேதிப்பொருட்கள், நெசவுத் தொழில் துணைப்பொருட்கள், களைக்கொல்லிகள் மற்றும் பல வேதிப்பொருள்களை தொகுப்பதற்கு டைமெத்தில்யூரியா பயன்படுகிறது [2]. நெசவுத் தொழிற்சாலைகளில் பார்மால்டிகைடு இல்லாத இறுதிசெய்யும் முகவரை தயாரிப்பதில் இடைநிலைப் பொருளாக 1,3-டைமெத்தில்யூரியா பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் டைமெத்தில்யூரியா 25000 டன்களுக்குக் குறைவாக தயாரிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "1,3-dimethylurea - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012.
- ↑ http://www.inchem.org/documents/sids/sids/96311.pdf SIDS Initial Assessment Report