தமிழ்க் கணிமைக் காலக்கோடு
2011
தொகுசனவரி
தொகுகணியம் -கணியம் (இணைய இதழ்) கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய மாத மின் இதழ் வெளியிடு கணியம்
2009
தொகுசெப்டெம்பர்
தொகு- பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடத்தினர் முனைவர் ஏ. ஜீ. ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழ் உரையைப் படித்துக்காட்டும் செயலி (TTS) ஒன்றினை உருவாக்கி சோதனைக்கு விடுகிறார்கள்.[1]
2007
தொகுடிசம்பர்
தொகு- டிசம்பர் 25, சென்னையைச் சேர்ந்த நியூ ஹொரைசன் ஊடக நிறுவனத்தால் என் எச் எம் ரைட்டர் என்ற தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுதுவதற்கான மென்பொருள் வெளியிடப்பட்டது.
2005
தொகுசனவரி
தொகு- நூலகம் திட்டம் மு. மயூரன், தி. கோபிநாத் ஆகியோரால் தொடங்கப்பட்டு வலையேற்றப்பட்டது
- நகர்பேசிகளில் தமிழ்க் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு உதவும் செல்லினம் மென்பொருளை முத்து நெடுமாறன் வெளியிடுகிறார்.
ஏப்ரல்
தொகு- ஏப்ரல் 20ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முதன்முறையாக தனது இயக்குதளம் ஒன்றிற்கான இடைமுகப்பினை தமிழ்ப்படுத்தும் வின்டோசு மொழி இடைமுகப் பொதியினை வெளியிடுகிறது.
- ஏப்ரல் 29, ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஒஎசு X v10.4 (புலி) இயங்குதளம், ஆப்பிள் இயங்குதளங்களில் முதன்முறையாக தமிழ் ஒருங்குறி ஆதரவினையும் விசைப்பலகை இயக்கி, எழுத்துரு (இணைமதி) என்பனவற்றையும் இயல்பிருப்பாகக்கொண்டு வெளிவந்தது.
2004
தொகுபெப்ரவரி
தொகுமே
தொகு- மே 15ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தமிழ் சமுதாயக் கலைச்சொல்லகராதித் திட்டம் ஆரம்பிக்கிறது. மாலன் இதற்கு மட்டுறுத்துநராக பணியாற்றுகிறார்.[2] பரணிடப்பட்டது 2008-03-26 at the வந்தவழி இயந்திரம்
2003
தொகுசனவரி
தொகு- தமிழில் வலைப்பதிவுகள் முதன்முதலாக எழுதப்படுகின்றன. முதல் வலைப்பதிவினை கார்த்திகேயன் இராமசுவாமி சனவரி 1ம் நாள் எழுதுகிறார்) [3] பரணிடப்பட்டது 2007-11-08 at the வந்தவழி இயந்திரம்
பெப்ரவரி
தொகு- பெப்ரவரி 21 இல் மரத்தடி யாகூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது.
மே
தொகு- மே 27ம் நாள் சுரதா யாழ்வாணன் தமிழின் எந்தவொரு எழுத்துருவையும் இணையத்தில் இணைப்பிலிருந்தபடியே ஒருங்குறிக்கு மாற்றித்தரத்தக்க பொங்குதமிழ் செயலி யினை வலையேற்றுகிறார்.
செப்டெம்பர்
தொகு- செப்டெம்பர் 30ம் நாள் தமிழ் விக்கிபீடியா தொடக்கப்படுகிறது.
2002
தொகு- வெங்கட்ரமணன் அவர்களால் Tamil Linux Howto எனும் கையேடு எழுதப்படுகிறது [4]
- மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட குனூ/லினக்ஸ் இயங்குதளமாக வெளிவருகிறது.
ஏப்ரல்
தொகு- ஏப்ரல் 20 ராயர் காப்பி கிளப் யாஹூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது
சூன்
தொகு- பொன்விழி தமிழ் ஒளிசார் எழுத்துணரி உத்தியோகபூர்வமாக தமிழ் நாடு முதலமைச்சரால் வெளியிட்டு வைக்கப்படுகிறது.
ஆகத்து
தொகு- ஆகத்து 6 இல் நொப்பிக்ஸ் இனை தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வசீகரன் தமிழினிக்ஸ் குழுமத்துக்கு அறிவிக்கிறார் [5][தொடர்பிழந்த இணைப்பு]
டிசம்பர்
தொகு- டிசம்பர் 12 இல் சுரதா யாழ்வாணன் அவர்களால் இணையத்தில் எழுத்துரு தரவிறக்கமில்லாது இயங்கு எழுத்துருமூலம் தமிழில் எழுதப் புதுவை செயலி வெளியிடப்படுகிறது.
- புதுவை எழுதி
2001
தொகுபெப்ரவரி
தொகு- பெப்ரவரி 17ம் நாள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்குகிறது.
2000
தொகு- தமிழ் நாடு, இலங்கை அறிஞர்களின் கூட்டுழைப்பில் இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களம் தகவல் தொழில் நுட்ப கலைச்சொல் அகரமுதலியினை சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இணையம் 2000 மாநாட்டில் சமர்ப்பிக்கிறது.
- அழகி மென்பொருள் வெளியிடப்படுகிறது.
- மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 2000 இயங்குதளம் தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவளித்தும், தமிழைத் தேர்வு மொழியாகப்பயன்படுத்தக்கூடிய மிக அடிப்படையான வசதிகளுடனும் வெளிவருகிறது
சூலை
தொகு- உத்தமம் அமைப்பு ஜூலை 24ம் நாள் தொடங்குகிறது.
- சூலை 27, 2000 அன்று தமிழினிக்ஸ் மடலாடற்குழு ஆரம்பிக்கப்படுகிறது [6] பரணிடப்பட்டது 2006-11-16 at the வந்தவழி இயந்திரம்
அக்டோபர்
தொகு- அக்டோபர் 23 கே டீ ஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்).
1999
தொகு- சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தரப்படுத்தப்பட்ட தமிழ் 99 விசைப்பலகை வடிவம் அறிவிக்கப்படுகிறது
நவம்பர்
தொகு- மணவை முஸ்தபா கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதியை வெளியிடுகிறார்.
1998
தொகுசனவரி
தொகு- தைப்பொங்கல் நாளன்று (14-01-1998) மதுரைத் திட்டம் தொடங்குகிறது.
1997
தொகுசெப்டெம்பர்
தொகு- தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையின் (தகுதரம் / TSCII) முதல் வெளியீடு இடம்பெறுகிறது.
1995
தொகு- பாலா பிள்ளை tamil.net வலைத்தளத்தையும் மடற்குழுவையும் உருவாக்குகிறார்.
அக்டோபர்
தொகு- நா. கோவிந்தசாமி முதல் தமிழ் இணையத்தளத்தை வலையேற்றுகிறார்.[மேற்கோள் தேவை]
1994
தொகு- தமிழ் மென்பொருட்களை வணிக நோக்கில் உருவாக்கவென கம்பன் மென்னியம் நிறுவனம் தொடங்கப்படுகிறது.
1993
தொகு- கே. கல்யாணசுந்தரம் மயிலை எழுத்துருவினை உருவாக்குகிறார்.
1990
தொகு- சிவகுருநாதன் சின்னையா நளினம் மென்பொருளை வெளியிடுகிறார்.
1988
தொகு- இஸ்கி ISCII தரப்படுத்தல் நியமத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களுக்கான குறியேற்றம் உருவாகிறது.
1987
தொகு1985
தொகுஅக்டோபர்
தொகு- இணையத்தில் முதலாவது தமிழ் வலைப்பக்கம் நா. கோவிந்தசாமி அவர்களால் ஏற்றப்படுகிறது (சிங்கப்பூர் அதிபர் ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளம்)
1986
தொகு- முத்து நெடுமாறன் முரசு மென்பொருளை உருவாக்குகிறார்.
1984
தொகு- ஸ்ரீநிவாசன் ஆதமி மென்பொருளை உருவாக்குகிறார்.
இவற்றையும் பார்க்க
தொகு1988 முனைவர் மா. கணேசன், (இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்) முதன் முதலாக தமிழ் மற்றும் 5 இந்திய மொழிகளைக் கணினியில் TEXT MODE -இல் பயன்படும் அளவில் BHASHA - INDIAN SCRIPTS UTILITY and WORDPROCESSOR என்னும் மென்பொருளை உருவாக்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி". Archived from the original on 2014-01-01. பார்க்கப்பட்ட நாள் 2010-01-23.
- ↑ தினமலர் கணினி அச்சுக்கு மாறுகிறது