தமிழ்நாடு கிராம வங்கி

தமிழ்நாடு கிராம வங்கி (Tamil Nadu Grama Bank) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மண்டல ஊரக வங்கியாகும் .

தமிழ்நாடு கிராம வங்கி
வகைமண்டல ஊரக வங்கி
முந்தியதுபல்லவன் கிராம வங்கி
பாண்டியன் கிராம வங்கி
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு, சென்னை
முதன்மை நபர்கள்திரு. எஸ். செல்வராஜ்
(தலைவர்)
தொழில்துறைவங்கி
நிதிச் சேவைகள்
உற்பத்திகள்
நிகர வருமானம்Increase1,824.36 கோடி (US$230 மில்லியன்) (மார்ச் 2021)
உரிமையாளர்கள்
பணியாளர்2500+ (2021)
தாய் நிறுவனம்இந்திய நிதி அமைச்சகம், இந்திய அரசு

தோற்றம்

தொகு

தமிழ்நாடு கிராம வங்கி என்பது தமிழகத்தில் செயல்படும் ஊரக வங்கியாகும். இந்த வங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கூட்டாகச் சொந்தமானது மற்றும் இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுகின்றது. இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் சொத்துரிமையின் கீழ் உள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கி 1 ஏப்ரல் 2019 அன்று பழைய பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் அராசாங்க அறிவிக்கை எண். 363 தேதி 28 ஜனவரி 2019 மூலம் இது செயல்படுத்தப்பட்டது.[1][2][3]

செயல் எல்லை

தொகு

இணைப்பிற்கு முன்பு சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பல்லவன் கிராம வங்கி 16 மாவட்டங்களிலும், விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்ட பாண்டியன் கிராம வங்கி 16 மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்தது. இணைப்பிற்குப் பிறகு, சென்னையைத் தவிர, தமிழகத்தின் மற்ற 37 மாவட்டங்களிலும், சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு கிராம வங்கியாக வங்கி இது செயல்படுகிறது.

பங்கு மூலதனம்

தொகு

செலுத்தப்பட்ட மூலதனம் ரூ. 46.96 கோடிகளைப் பங்குதாரர்கள் கீழ்க்கண்டவாறு பகிர்ந்துள்ளனர்:

மேற்கோள்கள்

தொகு
  1. "Home | Tamil Nadu Grama Bank". www.tamilnadugramabank.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  2. "Tamil Nadu Grama Bank reports ₹185 cr profit in FY21". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  3. "Tamil Nadu Grama Bank - Loans Offered - IndiaFilings". IndiaFilings - Learning Centre (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_கிராம_வங்கி&oldid=3346438" இலிருந்து மீள்விக்கப்பட்டது