மீனவர்
This article has no lead section. (சூலை 2018) |
தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.) [1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
தமிழ்நாடு
தொகுதமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007–2008, கணக்கெடுப்பின்படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும்.
தமிழ்நாட்டின் கடலோர நீளம்:[2]
கடலோரம் | இடம் | நீளம் கி.மீ |
---|---|---|
கோரமண்டல் கடற்கரை | சென்னை முதல் கோடியக்கரை வரை | 357.2 |
பாக் சலசந்தி | கோடியக்கரை முதல் பாம்பன் வரை | 293.9 |
மன்னார் வளைகுடா | பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை | 364.9 |
மேற்கு கடற்கரை | கன்னியாகுமரி முதல் நீரோடி | 60.0 |
வரலாறு
தொகுகடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.[3]
சமூக அமைப்பு
தொகுதமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள்
தொகுதமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.[4]
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "TN Fisheries Dept". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
- ↑ "tn fisheries dept". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
- ↑ கப்பல் சாஸ்திரம் - இணைய நூல்
- ↑ BBC-ல் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து ஜெ.ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம், 17 மார்ச், 2012
வெளி இணைப்புகள்
தொகு- Marine Small-Scale Fisheries of Tamil Nadu : A General Description (A Factual Document)
- Fishing Communities of Northeast and Ethnic Factor பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- http://www.tn.gov.in/department/ahf.htm
- http://www.tn.gov.in/deptst/fisheries.htm
- Central Marine Fisheries Research Institute
- Tamil fishing village, Tamil Nadu - நிழல்படத் துண்டு