தலகுந்தா
தலகுந்தா (Talagunda) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள சிமோகா மாவட்டத்தின் சிகாரிபுரம் வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இங்கு காணப்படும் பல கல்வெட்டுகள் கதம்ப வம்சத்தின் எழுச்சி குறித்த முடிவுகளை வழங்கியுள்ளன.[1]
தலகுந்தா | |
---|---|
கிராமம் | |
நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரணவேசுவர் கோயில், தலகுந்தா | |
ஆள்கூறுகள்: 14°25′N 75°16′E / 14.42°N 75.26°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிமோகா |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 577 450 |
தொலைபேசி இணைப்பு எண் | 08187 |
வாகனப் பதிவு | கேஏ-14 |
வரலாறு
தொகுதலகுந்தா இதற்கு முன்னர், ஸ்தானகுந்தூர் என அழைப்பட்டது. மேலும், இது ஒரு அக்கிரகாரமாக (கற்றல் மைய) இருந்தது.[2] இது கர்நாடகாவில் காணப்படும் ஆரம்பகால கற்றல் மையமாகும்.[3] இங்கு காணப்படும் ஒரு கல்வெட்டு, 32 பிராமணர்கள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அகிச்சத்ரா என்ற இடத்திலிருந்து முக்கண்ணா என்பவரால் (அல்லது திரினேத்ரா) ஸ்தானகுந்தூருக்கு மாற்றப்பட்டதைக் குறிக்கிறது. இதனால் ஒரு அக்கிரகாரம் உருவாகியிருக்க வேண்டும். முக்கண்ணா கதம்ப வம்சத்தின் நிறுவனர் மயூரசர்மாவின் மூதாதையர் ஆவார். வடக்குப் பஞ்சாலத்தின் தலைநகரான அகிச்சத்ராவின் விரிவான எச்சங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள அன்லா வட்டம் ராம்சகர் கிராமத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எட்டு நூற்றாண்டுகளாக தலகுந்தாவில் கல்வி வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் கற்பிக்கப்பட்ட பாடங்களில் வேதங்கள், வேதாந்தம், இலக்கணம் மற்றும் தத்துவம் ஆகியவை அடங்கும். கன்னட மொழி முதன்மை மட்டத்தில் கற்பிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆடையும் உணவும் வழங்கப்பட்டது.[3]
கல்வெட்டுகள்
தொகுதலகுந்தாவில் பிராணவேசுவரருக்கு ( இந்துக் கடவுள் சிவன் ) அர்ப்பணிக்கப்பட்ட கோயில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்ததாக கல்வெட்டுகள் அடங்கிய கல் பலகை அமைந்துள்ளது. அதற்கு முன்னால் சமசுகிருதத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் அடங்கிய தூண் ஒன்று உள்ளது. தூண் கல்வெட்டுகள் பொ.ச. 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சண்டிவர்மன் (மயூரசர்மாவின் வழித்தோன்றல்) காலத்தைக் குறிக்கிறது.[4] இந்த கல்வெட்டை சண்டிவர்மனின் அரசவைக் கவிஞர் குப்ஜா என்பவர் எழுதியுள்ளார்.[5] இங்கு காணப்படும் கல் கல்வெட்டு கன்னட மொழியில் செதுக்கப்பட்ட முதல் கல்வெட்டு என்று இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.[6]
கல்வெட்டின்படி, தலகுந்தாவைச் சேர்ந்த [7] மயூரசர்மா பல்லவர்களின் தலைநகரான காஞ்சிக்குச் சென்று தனது குருவும் தாத்தாவுமான வீரசர்மாவுடன் தனது வேத படிப்பைத் தொடர்ந்தார். காஞ்சி அந்த நேரத்தில் ஒரு முக்கியமான கற்றல் மையமாக இருந்தது. அங்கு, ஒரு பல்லவ காவலரால் (குதிரைவீரன்) அவமானப்படுத்தப்பட்டதால், கோபத்தில் மயூரசர்மா தனது படிப்பைக் கைவிட்டு, அவமானத்திற்கு பழிவாங்குவதற்காக வாளை எடுத்தார்.[8] கல்வெட்டு இந்த நிகழ்வை தெளிவாக விவரிக்கிறது:
மேற்கோள்கள்
தொகு- ↑ Dr. Jyotsna Kamat (2007-12-21). "The Kadambas of Banavasi". Retrieved 2008-05-01.
- ↑ B. L. Rice, p482
- ↑ 3.0 3.1 Dr. Jyotsna Kamat (2007-12-20). "The History of Agraharas". Retrieved 2008-05-01.
- ↑ F. Kielhorn, ‘Talagunda Pillar Inscription of Kakusthavarman’, EI 8 (1905-06): 31-33 (inscr); Sheldon Pollock, [incomplete reference], p. 116.
- ↑ D. C. Sircar, p. 86
- ↑ KANNADA A CENTURY OLDER THAN BELIEVED, Bangalore Mirror Bureau | Jan 13, 2017
- ↑ Kamath (2001), pp. 30–31
- ↑ Ramesh (1984), p6
குறிப்புகள்
தொகு- Rice, B. Lewis (2001). Gazetteer of Mysore. Asian Educational Services. ISBN 81-206-0977-8.
- Pollock, Sheldon I. (2006). The Language of the Gods in the World of Men: Sanskrit, Culture, and Power in Premodern India. University of California Press. ISBN 0-520-24500-8.
- Sircar, D. C. (1996). Indian epigraphy. Motilal Banarsidass Publications. ISBN 81-208-1166-6.
- Moraes, George M. (1996) [1931]. The Kadamba Kula, A History of Ancient and Medieval Karnataka. Asian Educational Services. ISBN 81-206-0595-0.
- Ramesh, K.V. (1984). Chalukyas of Vatapi. Agam Kala Prakashan. கணினி நூலகம் 13869730.
- Squarcini, Federico (2005). Boundaries, Dynamics and Construction of Traditions in South Asia. Firenze University Press. ISBN 88-8453-262-0.
- Kamat, Suryanath (2001) [1980]. A Concise history of Karnataka from pre-historic times to the present. Jupiter. கணினி நூலகம் 7796041.