தானாலே குகைகள்

தானாலே குகைகள் அல்லது நத்சூர் குகைகள் (Thanale Caves or Nadsur Caves) (ठाणाळे लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தானேலே கிராமத்தின் மலையில் உள்ள 23 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும்.[1][2]

தானேலே குகைகள்
தானேலே குகைகளின் தூபிகள்

இக்குகைகளில் கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய பௌத்த சைத்தியங்கள் மற்றும் தூபிகள் மற்றும் விகாரைகள் உள்ளது.

இக்குகைத் தொகுப்பில் பெரிதான குகை எண் 7 அழகிய தோரண வாயில்கள், வளைவுகள், புத்தர், ஆண், பெண் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.

இக்குகைகளின் குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publ.. பக். 201-201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740. 
  2. "Thanale Cave Trek". 2012-01-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-16 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தானாலே_குகைகள்&oldid=3557809" இருந்து மீள்விக்கப்பட்டது