தானிஷ் கனேரியா
தானிஷ் பிரபா சங்கர் கனேரியா (Danish Prabha Shanker Kaneria, உருது: دانش پربھا شنکر کنیریا, ஹிந்தி: दिनेश प्रभा शंकर कनेरिया, பிறப்பு: டிசம்பர் 16 1980), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தன் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1] 2000 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர். வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளரான இவர் சிறப்பாக கூக்ளி விசுவதன் மூலமாக பரவலாக அறியப்பட்டார். அதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானிய தரவரிசையில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார்.முதல் மூன்று இடங்களில் விரைவு வீச்சாளர்களான வசீம் அக்ரம், வக்கார் யூனிசு மற்றும் இம்ரான் கான் ஆகியோர் உள்ளனர்.[2] பாக்கித்தான் அணிக்காக விளையாடிய இரண்டாவது இந்து சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதற்கு முன் அனில் தல்பத் பாக்கித்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.[3][4]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தனேஸ் பிரபா சங்கர் கனேரியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 1 அங் (1.85 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 163) | நவம்பர் 29 2000 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 3 2010 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 140) | அக்டோபர் 31 2001 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மார்ச்சு 21 2007 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 24 2010 |
இவர் பாக்கித்தான் அணிக்காக 61 தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடி 261 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.இவரின் பந்துவீச்சு சராசரி 34.79 ஆகும். மேலும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 15 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சரசரி 45 ஆகும். வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 77 ஓட்டங்கள் கொடுத்து 7 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மற்றொரு போட்டியில் 94 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 12 இலக்குகளைக் கைபப்ற்றினார். இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. இவர் தேர்வுப் போட்டிகளில் 15 முறை 5 இலக்குகளைக் கைப்பற்றியுளார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 34 ஓவர்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் எச்செக்ஸ் அணிக்காக இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[1]
தேர்வுப் போட்டிகள்
தொகு2000 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 3, இல் பைசலாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 8 பந்துகளில் 8 ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 34 ஓவர்கள் வீசி 9 ஓவரை மெய்டனாக வீசி 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 2 இலகுகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 30 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டி சமனில் முடிந்தது.
2001-02 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார். வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் ஓர் ஆட்டப் பகுதியில் இவர் ஆரு இலக்குகளைக் கைப்பற்றினார்.அந்தப் போட்டியில் 94 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 9 இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றிபெற்றது. இவர் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.[5][6] இதுவே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.[7] அதற்கு அடுத்த ஆண்டு பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டாக்கா, பங்கபந்து தேசியத் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் 77 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளைக் கைப்பற்றினார். [8]
2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டாக்கா, கடாபி துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் 111 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளைக் கைப்பற்றினார். அதில் ஒரு ஆட்டப் பகுதியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றிபெற்றது. இவர் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.[9]
2004 ஆம் ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. கராச்சி துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 118 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து எட்டு இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அனி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த போட்டியில் 190 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து பத்து இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.[10] அந்தப் போட்டியில் இவர் 60 ஓவர்களை வீசினார். மேலும் ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.[11]
2005 ஆம் ஆண்டு பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சிட்னி துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் 188 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப்போட்டியில் பாக்கித்தான் அணி தோல்வி அடைந்தது. மேலும் அதே தொடரில் ஏழு இலக்குகளைக் கைப்பற்றினார். இவாரு ஏழு இலக்குகளைக் கைப்பற்றுவது இது ஏழாவது முறையாகும். இவரின் சிறப்பான செயல்பாட்டினை ஆத்திரேலிய வீரர் ஷேன் வார்னே பாராட்டினார்.[12] 2005ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டா வீரர் விருதுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார்.[13] ஆட்டத்தினை வெற்றி பெறச் செய்யும் சுழற் பந்து வீச்சாளர் என இவரை பிபிசி கூறியது.[14]
2006 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில்சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முல்தான் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.
இறுதிப் போட்டி
தொகு2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூலை 29, நாட்டின்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்[1]. இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 21 ஓவர்கள் வீசி 100 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப்பகுதியில்20 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 12 ஓவர்கள் வீசி 71 ஓட்டங்களை எடுத்தார். 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Danish Kaneria", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
- ↑ "Pakistan / Records / Test matches / Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 July 2013.
- ↑ "No country for Pakistan Hindus: On 66th Independence Day, Mail Today gives a ground report on those stuck in No Man's Land".
- ↑ Varma, Devarchit (27 March 2014). "7 Non-Muslim cricketers who played for Pakistan".
- ↑ Hasan, Samiul. "Wisden – Pakistan v Bangladesh 2000–2001". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
- ↑ "Asian Test Championship, 2001/02 – 1st match". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
- ↑ "Danish Kaneria". Espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 11 July 2013.
- ↑ "Pakistan in Bangladesh Test Series – 1st Test". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
- ↑ "South Africa in Pakistan 2003/04 (1st Test)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
- ↑ "Sri Lanka in Pakistan Test Series – 2nd Test". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
- ↑ Murgatroyd, Brian. "Wisden – second Test – Sri Lanka in Pakistan". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
- ↑ Dean, Geoffrey. "Wisden – third Test – Australia in Pakistan". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
- ↑ AFP (14 September 2005). "Player of the Year nominees announced". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
- ↑ "Pakistan profiles: Danish Kaneria". பிபிசி. 14 October 2005. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
வெளியிணைப்புகள்
தொகு- http://தனிஷ்[தொடர்பிழந்த இணைப்பு] கனேரியா ஈஎஸ்பிஎன் விளையாட்டு வீரர் குறிப்புகள்
- த்னிஷ் கனேரியா -நேர்காணல்