தாமசு பிளண்டெல்

தாமசு ஆக்லந்து பிளண்டெல் (Thomas Ackland Blundell பிறப்பு 1 செப்டம்பர் 1990) ஒரு நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் . இவர் சனவரி 2017 இல் நியூசிலாந்து துடுப்பாட்டஅணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் வெலிங்டனுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார்.[1] ஏப்ரல் 2019 இல், 2019 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றார்.[2]

டாம் பிளண்டல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தாமசு ஆக்லாந்து பிளண்டல்
பிறப்பு1 செப்டம்பர் 1990 (1990-09-01) (அகவை 34)
வெலிங்டன், நியூசிலாந்து, நியூசிலாந்து
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை எதிர்ச்சுழல்
பங்குஇலக்குக் கவனிப்பாளர், மட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 273)1 திசம்பர் 2017 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு10 சூன் 2021 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 196)5 பெப்ரவரி 2020 எ. இந்தியா
கடைசி ஒநாப8 பெப்ரவரி 2020 எ. இந்தியா
இ20ப அறிமுகம் (தொப்பி 73)8 சனவரி 2017 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப8 செப்டம்பர் 2021 எ. வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013–தற்போதுவரைவெலிங்டன் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒபது முதது பஅது
ஆட்டங்கள் 11 2 72 52
ஓட்டங்கள் 572 31 3,856 1,222
மட்டையாட்ட சராசரி 38.13 15.50 36.37 28.41
100கள்/50கள் 2/2 0/0 10/16 1/5
அதியுயர் ஓட்டம் 121 22 153 151
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/– 1/– 154/6 46/5
மூலம்: Cricinfo, செப்டெம்பர் 8, 2021

உள்நாட்டு போட்டிகள்

தொகு

2010 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியில் விளையாடினார்.[3] 2013 இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[3]

சர்வதேச போட்டிகள்

தொகு

ஜனவரி 2017 இல் , லூக் ரோஞ்சி காயமடைந்த பிறகு, வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான பன்னாட்டு இருபது20 போட்டியில் இலக்குக் கவனிப்பாளராக அணியில் இடம்பெற்றார்.[4] 8 சனவரி 2017 அன்று இவர் வங்காளதேசத்திற்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[5]

சனவரி 2017 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் அணியில் இலக்குக் கவனிப்பாளராக சேர்க்கப்பட்டார், ஆனால் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.[6] நவம்பர் 2017 இல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடுவதற்காக அணியில் சேர்க்கப்பட்டார். இவர் 1 டிசம்பர் 2017 அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமானார்.[7] இவர் காயமடைந்த பி. ஜே. வாட்லிங்கிற்கு மாற்றாக களம் இறங்கி [8] இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்கள் எடுத்தார் இதன் மூலம் அறிமுகப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து இலக்குக் கவனிப்பாளர் எனும் சாதனை படைத்தார்.[9] 2007 ஆம் ஆண்டில் மாட் பிரியருக்குப் பிறகு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு ஓட்டங்கள் எடுத்த வீரர்ஆனார்.[10]

ஏப்ரல் 2019 இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான அணியில் இடம் பெற்றார் .[11][12] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை போட்டிக்கான ஐந்து ஆச்சரியத் தேர்வுகளில் ஒன்றாக பெயரிட்டது.[13] இருப்பினும், தொடரின் போது எந்தப் போட்டியிலும் இவர் விளையாடவில்லை. நியூசிலாந்துத் துடுப்பாட்ட வாரியத்தினால் 2019-20 பருவத்திற்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட இருபது வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[14]

சான்றுகள்

தொகு
  1. "Tom Blundell". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2015.
  2. "Uncapped in ODIs, who is Tom Blundell?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  3. 3.0 3.1 "Get to know: Tom Blundell, New Zealand's surprise CWC19 call-up". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  4. "Uncapped Blundell replaces injured Ronchi". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  5. "Bangladesh tour of New Zealand, 3rd T20I: New Zealand v Bangladesh at Mount Maunganui, Jan 8, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.
  6. "New Zealand call up Blundell for Chappell-Hadlee ODIs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
  7. "1st Test, West Indies tour of New Zealand at Wellington, Dec 1–5, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  8. "Blundell replaces injured Watling for Windies Tests". Cricbuzz. 27 November 2017. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  9. "NZ declare with massive lead after Blundell's debut ton". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  10. "Basin Reserve a field of dreams for Tom Blundell after New Zealand century on test debut". Stuff. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  11. "Sodhi and Blundell named in New Zealand World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  12. "Uncapped Blundell named in New Zealand World Cup squad, Sodhi preferred to Astle". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  13. "Cricket World Cup 2019: Five surprise picks". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
  14. "Jimmy Neesham, Tom Blundell and Will Young handed New Zealand contracts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 May 2019.

 

வெளி இணைப்புகள்

தொகு
  • Tom Blundell at ESPNcricinfo
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_பிளண்டெல்&oldid=3968796" இலிருந்து மீள்விக்கப்பட்டது