திருப்பாற்கடல் கிருஷ்ணசுவாமி கோயில்

திருப்பாற்கடல் கிருஷ்ணர் கோயில் (திருப்பாற்கடல் கிருஷ்ணசுவாமி கோயில்) இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்பேரூர் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கான (கிருஷ்ணனாக வணங்கப்படும்) கோயிலாகும். இது பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும். [1]

மூலவர்

தொகு

இங்குள்ள மூலவர் விஷ்ணு நான்கு கைகளுடன் உள்ளார். கைகளில் சங்கு, சுதர்சன சக்கரம், துளசி மாலையுடன் கூடிய தாமரை ஆகியவற்றுடன் உள்ளார்.

வரலாறு

தொகு

மூலவரான கிருஷ்ணன் (திருப்பல்கடல் பட்டாரகர்) சங்க காலத்தில் இந்த இடத்தை ஆண்டுவந்த ஆய் குடும்பத்தின் குல தெய்வம் ஆவார். இராஜ்ஜியமும் அந்தக் குடும்பத்தாரும் வேணாடு கீழ்பேரூர் ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களின் வரிசையில் ஏழாவது ஆழ்வாராகக் கருதப்படுகின்ற குலசேகர ஆழ்வார் இக்கோயிலைப் புதுப்பித்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும்108 திவ்ய தேசங்களில் இத்தலமானது குறிப்பிடப்படவில்லை. இந்த கோயில் தொடர்பான புராணக்கதைகள் தமிழகம் மற்றும் தற்போது கேரளா என்று அழைக்கப்படும் மாநிலத்தை ஆண்ட பேரரசுகள் மற்றும் சாம்ராஜ்யங்களுடன் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்துள்ளன. மேலும், இந்தக் கோயிலின் வரலாறு சேர, சோழப் பேரரசுகளுடனும், வேணாடு மற்றும் திருவிதாங்கூர் சாம்ராஜ்யங்களுடனும் நெருக்கமாகத் தொடர்புடையது.

கட்டிடக்கலை

தொகு

இக்கோயில் பழங்கால திராவிட பாணியில் கட்டப்பட்டதாகும். பரபிரம்மத்தின் இருப்பைக் குறிக்கும் வட்ட வடிவ கருவறையின் வெளிப்புறத்தில் கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவரில் பிரம்மாவும் சிவனும் உள்ளனர். 12 ராசிகளைக் குறிக்கும் வகையில் அமைந்து அது 3 ஆல் (திரிமூர்த்தி) பெருக்கப்படும் நிலையைச் சுட்ட , கருவறையின் மேற்கூரை 12 மரத்துண்டுகளில் செதுக்கப்பட்ட 36 ராஃப்டர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் இது ஆதி பராசக்தியின் பீடங்களின் எண்ணிக்கையான 108ஐக் குறிக்கிறது. க்கோயிலின் மறுசீரமைப்புடன் கொல்லம் சகாப்தம் தொடங்கியதாகவும் நம்பப்படுகிறது.

கட்டிடக்கலை

தொகு

கோயில் வளாகத்தில் கருங்கல் சுவர்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக உள்ளே வரும்போது நீண்ட கருங்கள் அடித்தளம் உள்ளது. மூலவரின் வலது புறத்திலும், முன் புறத்திலும், சற்று உயரத்தில் கூத்தம்பலம் சரியான அளவீட்டுடன் உள்ளது. அருகில் ஆணைக்கொட்டில் உள்ளது. வழக்கமான அமைப்பில் பெல்லிக்காலு, முதன்மை நுழைவாயிலுக்கு முன்பாக உள்ளது. இதன் வழியாக உள் பகுதிகளுக்குச் செல்ல முடியும். நமஸ்கார மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் மரத் தூண்கள் உள்ளன, மேலும் நான்கு கல் தூண்கள் சோபானத்தை எதிர்கொள்ளும் இரண்டு கல் வேலைப்பாடுகளுடன் உள்ளன. சதுர வடிவ செப்பு ஓடுகளால் வேயப்பட்ட கூரை உள்ளது. பார்வதி மடியில் அமர்ந்திருக்கும் சிவனின் சிற்பம்உள்ளது. தொடர்ந்து சிறிய விநாயகர், முருகன் நந்தி ஆகியவை உள்ளன. எதிரில் நான்கு கைகளுடன் விஷ்ணுவின் சிற்பம் சக்கரம், சங்கு, தாமரை ஆகியவற்றுடன் உள்ளது. அவருக்கு ஒருபுறம் ஸ்ரீதேவியும் மறுபுறம் பூதேவியும் உள்ளனர். கருவறை வட்ட வடிவில் உள்ளது. சுவர் முழுக்க கிருஷ்ணலீலை சிற்பங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு