திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்

திருப்பூர் மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இதில் மொத்தம் 13 ஊராட்சி ஒன்றியங்கள் (வருவாய் வட்டங்கள்) உள்ளன.[1] இது அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர் [2], அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்களையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய வட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது[3]. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும்

ஊராட்சி ஒன்றியங்கள்

தொகு

இம்மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[4] இந்த 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 265 ஊராட்சிகள் உள்ளன.[5]

  1. திருப்பூர் ஒன்றியம்
  2. அவினாசி ஒன்றியம்
  3. பல்லடம் ஒன்றியம்
  4. உடுமலைப்பேட்டை ஒன்றியம்
  5. தாராபுரம் ஒன்றியம்
  6. காங்கேயம் ஒன்றியம்
  7. மடத்துக்குளம் ஒன்றியம்
  8. குடிமங்கலம் ஒன்றியம்
  9. ஊத்துக்குளி ஒன்றியம்
  10. குண்டடம் ஒன்றியம்
  11. வெள்ளக்கோயில் ஒன்றியம்
  12. மூலனூர் ஒன்றியம்
  13. பொங்கலூர் ஒன்றியம்

மேற்கோள்கள்

தொகு
  1. திருப்பூர் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளம்
  2. திருப்பூர் மாவட்ட சிறப்பு தினமலர்
  3. "New Tirupur district formed". Archived from the original on 2008-10-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
  4. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
  5. "Village Panchayats | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.