தில்ஷன் முனவீரா

துடுப்பாட்டக்காரர்

எல்தீன மேதகேதரா தில்ஷன் யாசிகா முனவீரா(Eldenia Medagedara Dilshan yasika Munaweera பிறப்பு 24 ஏப்ரல் 1989 ) பொதுவாக தில்ஷான் முனவீரா என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி உலக இருபது20 உலகத் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் இலங்கை அணி சார்பாக விளையாடினார்.[1] வலதுகை துடுப்பாட்டாளரான இவர் அதிரடியாக ஓட்டங்களை எடுப்பதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மேலும் இவர் வலதுகை சுழற் பந்துவீச்ச்சாளராகவும் செயல்படுகிறார்.[2]

தில்ஷன் முனவீரா
ඩිල්ශාන් මුණවීර
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எல்தீன மேதகேதரா தில்ஷன் யாசிகா முனவீரா
பிறப்பு24 ஏப்ரல் 1989 (1989-04-24) (அகவை 31)
கொழும்பு, இலங்கை
உயரம்5 ft 7 in (1.70 m)
மட்டையாட்ட நடைவலது கை
பங்குதுவக்க மட்டையாளர், சகலத் துறையர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 182)30 ஆகஸ்ட் 2016 எ வங்காளதேசம்
கடைசி ஒநாப7 நவ 2017 எ இந்தியா
இ20ப அறிமுகம் (தொப்பி 46)18 செப்டம்பர் 2012 எ சிம்பாப்வே
கடைசி இ20ப29 அக்டோபர் 2017 எ பாக்கித்தான்
இ20ப சட்டை எண்24
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போது வரைசியல்கோட் சூப்பர் ஸ்டார்ஸ்
2016பரிசல் புல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது ப இ20 ப அ இ20
ஆட்டங்கள் 2 13 109 115
ஓட்டங்கள் 15 215 2723 2,290
மட்டையாட்ட சராசரி 7.50 17.91 25.93 21.60
100கள்/50கள் 0/0 0/1 2/18 0/8
அதியுயர் ஓட்டம் 11 53 142 82
வீசிய பந்துகள் 60 1,714 845
வீழ்த்தல்கள் 1 60 55
பந்துவீச்சு சராசரி 92.00 30.21 37.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/26 6/09 3/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 1/– 29/– 15/–
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ, 30 அக்டோபர் 2017

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் உள்ளூர் போட்டிகள்தொகு

இவர் துடுப்பாட்டக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.இவரின் பெற்றோரும் இலங்கை முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவரின் தந்தை சுதாத் முனவீரா மற்றும் தாய் மஞ்சுளா முனவீரா ஆகிய இருவருமே முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவரின் தாய் பெண்கள் அணிக்காக விளையாடியுள்ளார். தில்ஷான் முனவீரா 2016 ஆம் ஆண்டில் சஞ்சீவனி பலிஹக்காரா எனும் ஒப்பனை வடிவமைப்பாளரை திருமணம் செய்தார்.[3]

அவர் கொழும்பின் நாலந்தா கல்லூரியில் கல்வி பயின்றார் மற்றும் 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கல்லூரியில் இருந்த லெவன் அணிக்காக துடுப்பாட்டம் விளையாடினார்.[4]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார். அந்த ஆண்டில் நடைபெற்ற போட்டிகளில் இவர் கொழும்பு துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.[5]

சர்வதேச போட்டிகள்தொகு

முனவீரா ப்ளூம்ஃபீல்ட் துடுப்பாட்டம் மற்றும் தடகள சங்கத்திற்காக முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இலங்கைக்காக நான்கு இருபது -20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.[6][7]

2008 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தொடரிலும் , 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

முனவீரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் 2017 ஆம் ஆண்டில் ஓர் அனுபவம் வாய்ந்த மட்டையாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் காயம் காரணமாக அந்தத் தொடரில் விளையாட இயலாமல் போனது. சில காலஃ இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2017 ஆம் ஆண்டில் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்த இருபது20 போட்டியில் இவர் 29 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அந்தப் போட்ட்டியில் ஆத்திரேலிய அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது.[8] ஆகஸ்ட் 2017 இல், அவர் இந்தியாவுக்கு எதிரான நான்காவது போட்டிக்கு முன்னதாக இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் சேர்க்கப்பட்டார்.[9] 31 ஆகஸ்ட் 2017 அன்று இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்தப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணி 168 ஓட்டங்களில் தோல்வியடைந்தது.[10]

மே 2018 இல், 2018–19 சீசனுக்கு முன்னதாக இலங்கை துடுப்பாட்ட வாரியத்தினால் தேசிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட 33 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார்.[11][12]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்ஷன்_முனவீரா&oldid=2936501" இருந்து மீள்விக்கப்பட்டது