தி. ந. சிறீகாந்தையா

ஆச்சார்ய தீர்த்தபுரா நஞ்சுண்டயா சிறீகாந்தையா ( Aacharya Tirthapura Nanjundaiah Shrikantaiah) (1906 நவம்பர் 26 - 1966 செப்டம்பர் 7), தி நாம் சிறீ என்றும் அழைக்கப்படும் இவர் கன்னடம் இலக்கிய கவிஞரும், மொழியியலாளரும், மற்றும் ஆசிரியரும் ஆவார்.

தி. ந. சிறீகாந்தையா
பிறப்பு(1906-11-26)26 நவம்பர் 1906
தீர்த்தபுரா, சிக்கனநாயக்கனஹள்ளி வட்டம், தும்கூர் மாவட்டம், கருநாடகம், இந்தியா
இறப்பு7 செப்டம்பர் 1966(1966-09-07) (அகவை 59)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
கல்விஇளங்கலை 1926, முதுகலை. 1929
பணிகவிஞர், எழுத்தாளர், பேராசிரியர்
அரசியல் இயக்கம்நவ்யா

1952ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் கன்னட பதிப்பைத் தயாரித்து வெளியிடுவதில் சிறீகாந்தையா முக்கிய பங்கு வகித்தார். [1] இந்தியக் குடியரசுத் தலைவருக்கு சமசுகிருதத்தில் சமமான 'இராஷ்டிரபதி' என்ற வார்த்தையை பரிந்துரைத்த பெருமையும் இவருக்கு உண்டு. இந்திய அரசியலமைப்பு அமைப்பின் உறுப்பினராக, இந்திய குடியரசின் குடியரசுத் தலைவருக்கு சமமான சொல் குறித்த கலந்துரையாடல் நடந்தபோது, இவர்தான் 'இராஷ்டிரபதி' என்ற பெயரை பரிந்துரைத்தார். இந்த சொல் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அது இன்னும் பயன்பாட்டில் உள்ளது.  

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

டி. என். சிறீகாந்தையா 1906 நவம்பர் 26 அன்று தும்கூர் மாவட்டம் தீர்த்தபுராவில் நஞ்சுண்டையா மற்றும் பாகீரதம்மா ஆகியோருக்குப் பிறந்தார். இவரது குடும்பம் அகலவாடி மன்னர்களின் சந்ததியினர் ஆவர். 1926இல் இளங்கலை மற்றும் 1929 இல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கன்னட மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். [2]

படைப்புகள் தொகு

இவரது மிகவும் பிரபலமான படைப்பு 'பாரதிய காவ்யா மீமாம்சே' என்பது இந்திய கவிதைகளைப் பற்றியதாகும். இந்த படைப்பு 11ஆம் நூற்றாண்டு அலங்கரா கவிதைக்கும் உரைநடை மற்றும் கவிதை வடிவங்களில் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் முழுமையான பகுப்பாய்வாகும். தி நாம் சிறீயின் புத்தகம் காவியலங்கராவின் பாரம்பரியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கபாரம்பரிய நூல்களை ஆராய்கிறது. மேலும் இராச-த்வனி கொள்கைகள் கவிதை பல்வேறு நீரோடைகளை ஒப்பிடுவதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று வலியுறுத்துகிறது. [2]

'ஒலூமி' என்ற இவரது கவிதைப் படைப்பு கன்னட மொழியில் முதன்முதலில் இயற்றப்பட்ட காதல் குறித்த கவிதைகளின் தொகுப்பாகும்.  

பிற்கால வாழ்வு தொகு

கர்நாடக பல்கலைக்கழகம் மற்றும் மைசூர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். இவர் 1952இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அமெரிக்காவில் மொழியியல் குறித்த மேம்பட்ட ஆய்வுகளைத் தொடர 1955ஆம் ஆண்டில் ராக்ஃபெல்லரின் உதவித்தொகையைப் பெற்றார். 1966இல் கொல்கத்தாவில் திடீரென மாரடைப்பால் இறக்கும் வரை இவர் கன்னட பேராசிரியராக தொடர்ந்து பணியாற்றினார். [2]

நினைவு தொகு

கன்னடத் திணைக்களமும், தி நாம் சிறீ பிறப்பு நூற்றாண்டு குழுவும் இவரது பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் 2006ஆம் ஆண்டில் சிறீகாந்தையாவின் வாழ்க்கையை ஆண்டு முழுவதும் கொண்டாடின. மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழி நிறுவனம், புனேவில் உள்ள டெக்கான் முதுகலைக் கல்லூரி, தில்லியில் உள்ள மத்திய சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களுடன் இது ஒருங்கிணைக்கப்பட்டது. [3]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ந._சிறீகாந்தையா&oldid=3305656" இலிருந்து மீள்விக்கப்பட்டது