துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அல்லது சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது.[1]. சிதிலமடைந்த இக்கோயில் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதால், யுனெஸ்கோவின் 2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதுக்கு தேர்வாகியது.[2] சிவபெருமானுக்கு அமைக்கப்பட்ட இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், துக்காச்சி ஊராட்சியில் உள்ள கூகூர் கிராமத்தில் பாயும் அரசலாறு கரையில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு கிழக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயிலை தென் திருக்காளத்தியப்பர் கோயில் என்றும் அழைப்பர்.[3]
துக்காச்சி ஆபத்சகாயஸ்வரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவு: | கூகூர் கிராமம், துக்காச்சி ஊராட்சி, அரசலாறு கரை, கும்பகோணம் வட்டம் |
கோயில் தகவல்கள் |
வரலாறு
தொகுஇக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனால் (ஆட்சிக் காலம்:1001-1044) நிறுவப்பட்டது. விக்கிரம சோழன் (ஆட்சிக் காலம் 1118-1135)[4] தோல் நிறமி இழத்தல் நோயால் அவதியுற்ற போது, துக்காச்சி ஆபத்சகாயஸ்வரர் கோயிலில் 48 நாட்கள் தங்கியிருந்து சிவபெருமானை வேண்டியதால் நோயிலிருந்து மீண்டான். இதனால் இக்கோயில் வளாகத்தை விரிவுபடுத்தினார்.
கோயில் அமைப்பு
தொகுசோழர் காலக் கட்டிடக்கலையில் அமைந்த இக்கோயிலின் மூலவர் பெயர் ஆபத்சகாயஸ்வரர், அம்பாள் பெயர் துர்கை எனும் சௌந்திரநாயகி. இக்கோயிலில் சரபேஸ்வரர், வராகி, ஜேஸ்டா தேவி, சப்தகன்னியர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், மற்றும் குபேரன் ஆகியோரின் தெய்வத் திருமேனிகள் இக்கோயிலில் உள்ளது. வடக்கு நோக்கிய சந்திரசேகரருக்கு சிறு தனிச்சன்னதி உண்டு.[5][3][6] இக்கோயில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் 7 பிரகாரங்கள் கொண்டிருந்த இக்கோயிலில், தற்போது 3 பிரகாரங்கள் மட்டுமே உள்ளது. கும்பகோணக் கோயில்களில் மூன்று சரபேஸ்வரர் சன்னதிகள் உள்ளது. அதில் முதலாவது சரபேஸ்வரர் சன்னதி இக்கோயிலில் நிறுவப்பட்டதாகும்.[6][7]ஐராவதேசுவரர் கோயில் விமானம் போன்றே இக்கோயில் விமானம் அமைந்துள்ளது.[6]
மறு சீரமைப்பு
தொகுதமிழ்நாடு அரசின் ஆலோசனையின்படி, இக்கோயிலின் தொன்மை மாறாது 2015ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பணி துவங்கியது. சீரமைப்பு பணி முடிந்து 2023ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோயில் பழைமை மாறாது சீரமைப்பு செய்தபடியால் இக்கோயிலுக்கு யுனேஸ்கோவின் பண்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டது.[8][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், துக்காச்சி, நாச்சியார் கோயில் - 612602, தஞ்சாவூர் மாவட்டம்
- ↑ "1,300 ஆண்டுகள் பழமையான துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனஸ்கோ விருது". temple.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-06.
- ↑ 3.0 3.1 Thukkachi also known as South Kalahasti, (வார்ப்புரு:Langx), Dinamani, Tamil daily, 16 December 2016 பரணிடப்பட்டது 19 திசம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Nilakanta Sastri, K. A. (1935). The Cōḷas., University of Madras, Madras (Reprinted 1984).p62-63.
- ↑ "Chola shrine getting a facelift" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/chola-shrine-getting-a-facelift/article7355136.ece.
- ↑ 6.0 6.1 6.2 Cleaning works in Thukatchi Abatsahayesvarar Temple, (வார்ப்புரு:Langx), Dinamalar, Tamil daily, 19 July 2011
- ↑ Siva's Sarabeshwarar avatar to contain Narasimha, (வார்ப்புரு:Langx), Chennaitodaynews, in Tamil, 7 January 2016
- ↑ தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்கு கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!
- ↑ துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது
- ↑ துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது