துருக்கிய புலம்பெயர்வு

துருக்கிய புலம்பெயர்வு என்பது 6 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐரோவாசியா முழுவதும் துருக்கிய பழங்குடியினங்கள் மற்றும் துருக்கிய மொழிகள் பரவியதை குறிப்பதாகும்.[1] 6ஆம் நூற்றாண்டில் தற்போதைய மங்கோலியாவில் அக்காலத்தில் இருந்த உரூரன் ககானரசை கோக் துருக்கியர்கள் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர். அனைத்து திசைகளிலும் விரிவடைந்தனர். ஐரோவாசிய புல்வெளிகள் முழுவதும் துருக்கிய கலாச்சாரத்தை பரப்பினர். 8ஆம் நூற்றாண்டில் கோக் துருக்கிய பேரரசானது முடிவுக்கு வந்த போதும், அவர்களுக்கு பின்னர் உய்குர் ககானரசு, காரா கானிடு கானரசு, கசர்கள் மற்றும் குமன்கள் போன்ற ஏராளமான துருக்கிய பேரரசுகள் ஆட்சிக்கு வந்தன. சில துருக்கியர்கள் இறுதியாக நிலையான வாழ்க்கை நடத்திய சமூகங்களான கோச்சோக்கள் மற்றும் கன்சோவு உய்குர்களுடன் இணைந்து குடியமர்ந்தனர். 11ஆம் நூற்றாண்டில் தொடங்கி அனத்தோலியாவில் செல்யூக் அரசமரபானது குடியமர்ந்தது. இதனால் அங்கு நிலையான துருக்கிய குடியிருப்புகளும், இருப்பும் ஏற்பட்டது. கிர்கிசுத்தான், துருக்மெனித்தான், துருக்கி, அசர்பைஜான், உசுப்பெக்கிசுத்தான், மற்றும் கசக்கஸ்தான் உள்ளிட்ட தற்கால நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான துருக்கிய மக்கள் வாழ்கின்றனர். சுவாசியா, பஸ்கோர்தோஸ்த்தான், தத்தார்ஸ்தான், கிரிமிய தாதர்கள், மங்கோலியாவில் உள்ள கசக்குகள், சீனாவிலுள்ள உய்குர்கள், ஈரானில் உள்ள அசேரி, சைபீரியாவில் உள்ள சகா குடியரசு போன்ற இடங்களில் மற்ற நாட்டு மக்களுடன் துருக்கிய இனத்தவர் இணைந்து வாழ்கின்றனர்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Turkic peoples | History & Facts | Britannica". Archived from the original on 2015-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்கிய_புலம்பெயர்வு&oldid=3774080" இலிருந்து மீள்விக்கப்பட்டது