துருக்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்த் திட்டம்

துருக்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு திட்டம் (Turkmenistan–Afghanistan–Pakistan–India (TAPI) Gas Pipeline) துருக்மெங்காஸ் அரசு நிறுவனம், துருக்மெனிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இயற்கை எரிவாயுவை குழாய் வழித்தடங்கள் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாகக் கொண்டு வரும் திட்டம் ஆகும். ஆண்டிற்கு 33 பில்லியன் கன மீட்டர் எரிவாயு இத்திட்டம் மூலம் கொண்டு செல்வதற்கு ஆப்கான் தாலிபான் அரசு செப்டம்பர் 2024ல் ஒப்புதல் வழங்கியுள்ளது.[1][2]

துருக்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்த் திட்டம் (TAPI)
Map of துருக்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்த் திட்டம் (TAPI)
Location
நாடு துருக்மெனிஸ்தான்
 ஆப்கானித்தான்
 பாக்கித்தான்
 இந்தியா
General directionவடக்கு-தெற்கு
தொடக்கம்கல்கினிஷ் இயற்கை எரிவாயு வயல், துருக்மெனிஸ்தான்
Passes throughஹெராத்
கந்தகார்
குவெட்டா
முல்தான்
முடிவுபசில்கா, பஞ்சா, இந்தியா
Runs alongsideகந்தகார்-ஹெராத் நெடுஞ்சாலை
General information
வகைஇயற்கை எரிவாயு
பங்குதாரர்துருக்மெங்காஸ் இயற்கை எரிவாயு நிறுவனம்
Construction started2015
Technical information
நீளம்1,814 km (1,127 mi)
Maximum discharge33×10^9 m3/a (1.2×10^12 cu ft/a)

இத்திட்டத்தினை ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் துருக்மெங்காஸ் அரசு நிறுவனம், துருக்மெனிஸ்தானில் உள்ள கல்கினிஷ் இயற்கை வாயு வயலிருந்து[3], ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக குழாய் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை துர்க்மெங்காஸ் இயற்கை எரிவாயு நிறுவனம்[4] செயல்படுத்த உள்ளது. [5][6] [7][8][9][10]

தொழில்-நுட்ப சிறப்பம்சங்கள்

தொகு

இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் குழாய்களின் விட்டம் 1,420 mm (56 அங்) ஆக இருக்கும். இக்குழாய்கள் 100 atm (10,000 kPa) அழுத்தம் தாங்கக் கூடியதாக அமையும்[11]இத்திட்டத்தில் ஆண்டிற்கு 33×10^9 m3 (1.2×10^12 cu ft) கொள்ளவு இயற்கை எரிவாயு ஆப்கானிஸ்தானிற்கும், 14×10^9 m3 (490×10^9 cu ft) கொள்ளவு எரிவாயு பாகிஸ்தானுக்கும் மற்றும் 14×10^9 m3 (490×10^9 cu ft) இந்தியாவிற்கும் வழங்கப்படும்.[12]இத்திட்டத்தின் குழாய்களின் நெடுக 6 இடங்களில் இயற்கை எரிவாயு அமுக்கி நிலையங்கள் இருக்கும். இத்திட்டத்தின் துவக்க மதிப்பீடு $7.6  பில்லியன் அமெரிக்க டாலர் செய்யப்பட்டது. தற்போதைய மதிப்பீடு $10 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[13] இத்திட்டத்தின் பிரதான பங்களிப்பாளர் துருக்மெனிஸ்தானின் துருக்மெங்காஸ் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகும்.

வழித்தடங்கள்

தொகு

துருக்மெனிஸ்தானின் துருக்மெங்காஸ் அரசு நிறுவனம் கல்கினிஷ் இயற்கை வாயு வயலிலிருந்து துவங்கி, ஆப்கானிஸ்தானின் ஹெராத் மற்றும் கந்தகார் நகரங்கள் வழியாக பாகிஸ்தானின் வழியாக குவெட்டா மற்றும் முல்தான் நகரங்கள் வழியாக.[14] இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பசில்கா நகரத்தில் முடிவடைகிறது. இந்த இயற்கை எரிவாயு குழாய் தடத்தின் மொத்த நீளம் 1,814 km (1,127 mi) ஆகும். இத்திட்டம் முடிவடையும் போது, இதுவே உலகின் இரண்டாவது இயற்கை எரிவாயு குழாய்த் திட்டமாக விளங்கும்.[14]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Afghanistan set to begin work on TAPI pipeline
  2. "Baradar: Turkmenistan FM Pledged Readiness for TAPI Project". TOLO News. August 9, 2024. https://tolonews.com/business-190149. 
  3. https://en.wikipedia.org/wiki/Galkynysh_Gas_Field
  4. Türkmengaz
  5. "The office of consortium "Galkynysh – TAPI Pipeline Company Limited" will be opened in Dubai". 18 January 2016. Archived from the original on 13 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "TAPI CJSC office to appear in Dubai". 20 January 2016.
  7. BR Web Desk (2023-06-08). "TAPI Pipeline: Pakistan and Turkmenistan sign implementation plan". Brecorder (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-08.
  8. "Is Turkmenistan's gas line a pipe dream?". BBC. 2015-07-16. https://www.bbc.com/news/world-asia-32981469. 
  9. Mehdudia, Sujay (2010-12-11). "TAPI project will be the new Silk Route, says Deora". The Hindu. http://www.thehindu.com/business/Economy/article946191.ece. 
  10. Bhadrakumar, M. K. (2010-12-24). "U.S. brings Silk Road to India". The Hindu (Kasturi & Sons Ltd. / The Hindu Group). http://www.thehindu.com/opinion/lead/article972541.ece. 
  11. "Gas pipeline project Turkmenistan-Afghanistan-Pakistan-India approved". Alexander's Gas & Oil Connections. 2006-11-21 இம் மூலத்தில் இருந்து 2021-07-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210710204001/http://www.gasandoil.com/news/central_asia/c945d096920b47dd8cfa1c9be30c5389. 
  12. Tanchum, Micha'el (2015-12-03). "A Fillip for the TAPI Pipeline". The Diplomat. https://thediplomat.com/2015/12/a-fillip-for-the-tapi-pipeline/. 
  13. Graeber, Daniel J. (2014-12-03). "Kazakhstan keen on TAPI gas pipeline". United Press International. http://www.upi.com/Business_News/Energy-Resources/2014/12/03/Kazakhstan-keen-on-TAPI-gas-pipeline/1741417604335/. 
  14. 14.0 14.1 Mustafa, Khalid (2003-02-22). "Alternate route for pipeline to be discussed today". Daily Times. http://www.dailytimes.com.pk/default.asp?page=story_22-2-2003_pg1_5.