நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம்

நார்ட் இயற்கை எரிவாயு வழித்தடம் எண் 1 (Nord Stream) , ருசியாவின் வடமேற்கில் உள்ள வைபோர்க் கடற்கரை நகரத்திலிருந்து[1], ஜெர்மனி நாட்டின் லுப்மின் கடற்கரை நகரம் முடிய பால்டிக் கடலடி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் வழித்தடத் திட்டம் 2011ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[2][3]. இந்த கடலடி எரிவாயு குழாய் வழிதடங்களை நிர்வகிக்கும் நார்ட் ஸ்ட்ரீம் நிறுவனத்த ருசியாவின் காஸ்பிரோம்[4] உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் ஏற்று நடத்துகிறது.

Map
நார்ட் ஸ்ட்ரீம் 1 & 2 கடலடி எரிவாயு குழாய்கள் வழித்தடத்தின் வரைபடம்
முன்மொழியப்பட்ட நார்ட் இயற்கை எரிவாயு குழாய்களின் வரைபடம்

இந்த கடலடி இயற்கை எரிவாயு குழாய் வழித்தடம் எண் ஒன்றின் 1,222 கிலோ மீட்டர் (759 மைல்) கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அதிகபட்சமாக கொண்டு செல்லும் இயற்கை எரிவாயு 55 பில்லியன் m3/a (1.9 டிரில்லியன் cu ft/a) மற்றும் குழாயின் விட்டம் 1,220 மில்லி மீட்டர் (48 அங்குலம் ஆகும்.

இதன் முதற்கட்டமாக, தரைப்பகுதியில் செல்லும் இயற்கை எரிவாயு குழாய்கள் ருசியாவிலிருந்து உக்ரைன் மற்றும் போலந்து வழியாக கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஐரோப்பா] நாடுகளுக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டது..

2022 நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வழித்தடம் அழிப்பு

தொகு
 
சிதைக்கப்பட்ட நார்ட் இயற்கை எரிவாயு குழாய் ஒரு பகுதி, பின்லாந்து கடற்கரையில்

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு காரணமாக 26 செப்டம்பர் 2022 அன்று நார்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய் வழித்தடங்களின் எண் 1 மற்றும் 2 அழிக்கப்பட்டது. இதனால் இயற்கை எரிவாயு பால்டிக் கடல்|பால்டிக் கடலில்]] கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்த அழிப்பிற்கு பொறுப்பானவர்கள் குறித்து பிப்ரவரி 2024 முதல் ஜெர்மனி, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் விசாரனை மேற்கொண்டு வருகிறது.[5][6]சூன் 2024ல் இக்குழாய் வழித்தடத்தின் அழிவுக்கு காரணமவர் எனச்சந்தேகப்படும் ஒரு உக்ரைன் நாட்டவர் மீது குற்றம்சாட்டப்பட்டு ஜெர்மனி விசாரணை நடத்துகிறது. [7]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு