காஸ்பிரோம்

காஸ்பிரோம் (Gazprom), ருசியா அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். சைபீரியா பிரதேசத்தில் பாறை எண்ணெய், இயற்கை எரிவளி மற்றும் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்ட இதன் தலைமையிடம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ளது. [1] இதன் பங்குகளில் 50.23% உருசியா அரசின் கையில் உள்ளது.[2][3]2022ல் இதன் ஆண்டு வருமாணம் 8 டிரில்லியன் உருசிய ரூபிள் ஆகும்.[4]இது 8 ஆகஸ்டு 1989 அன்று நிறுவப்பட்டது. இதன் பங்குகள் மாஸ்கோ பங்கு பரிவர்த்தனை மையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[5]

காஸ்பிரோம் PJSC
வகைஅரசு பொதுத்துறை நிறுவனம்]
நிறுவுகை8 ஆகஸ்டு 1989
தலைமையகம்செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ]], ருசியா லக்தா மையம்
முதன்மை நபர்கள்விக்டர் சுப்கோவ், தலைவர்
அலெக்சி மில்லர், தலமை நிர்வாக அதிகாரி
தொழில்துறைபாறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழிற்சாலை
உற்பத்திகள்பெட்ரோலியம்
இயற்கை எரிவாயு
பெட்ரோலியப் பொருட்கள்
சேவைகள்குழாய்கள் மூலம் இயற்கை எரியவாயு விநியோகம்
உரிமையாளர்கள்உருசிய அரசு (50.23%)
இணையத்தளம்gazprom.com
உருசியாவில் இயற்கை எரிவாயு வடிநிலங்கள், ஆண்டு 2000

இந்நிறுவனம் இயற்கை எரிவாயு, பாறை எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்கிறது.[6] 2018ஆம் ஆண்டில் உலகின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் இந்நிறுவனம் 12% விழுக்காடான 497.6 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய எரிவாயு மற்றும் 15.9 மில்லியன் டன் அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயும் உற்பத்தி செய்தது. [7]

பெருந்திட்டங்கள்

தொகு

உருசியாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை, குழாய்கள் வழியாக நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் மூலம் மேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு காஸ்பிரோம் நிறுவனம் விநியோகம் செய்கிறது. [8][9]

குழாய்கள் உடைப்பு

தொகு

2022ல் 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு காரணமாக நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் விஷமிகளால் சிதைக்கப்பட்டது. இதனால் மேற்கு ஐரோபியா நாடுகளுக்கு இயற்கை எரிவாயு செல்வது தடைபட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Grant, Peter (6 June 2017). "Gazprom's New Headquarters Towers Over All Others in Europe" (in en-US). The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 21 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200521183945/https://www.wsj.com/articles/gazproms-new-headquarters-towers-over-all-others-in-europe-1496765654. 
  2. "Equity capital structure". Gazprom. 2018. Archived from the original on 15 September 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2018.
  3. "Сбербанк сдал строчку лидера "Газпрому"". expert.ru. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  4. "ПАО "Газпром"". www.rusprofile.ru (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
  5. Carpenter, J. William. "The Top Natural Gas Companies in the World". Investopedia (in ஆங்கிலம்). Archived from the original on 11 April 2020. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
  6. "Gazprom". Forbes (in ஆங்கிலம்). Archived from the original on 24 April 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
  7. "Operations at Gazprom". gazprom.com (in ஆங்கிலம்). Archived from the original on 4 March 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
  8. "Transmission". gazprom.com (in ஆங்கிலம்). Archived from the original on 8 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
  9. "Transmission". gazprom.com (in ஆங்கிலம்). Archived from the original on 8 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்பிரோம்&oldid=4094625" இலிருந்து மீள்விக்கப்பட்டது