முதன்மை பட்டியைத் திறக்கவும்

Opisthokonta

துருவ மான் அல்லது பனி மான் (Reindeer / Rangifer tarandus) எனப்படுவது ஒரு மான் இனமாகும். இவை வட அமெரிக்காவில் கரீபு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை துருவப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இவை வாழும் பகுதிகளைப் பொறுத்து இவற்றின் கூட்டத்திலுள்ள மான்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. உருசியாவின் தூந்திரப் பகுதியில் காணப்படும் தைமிர் எனப்படும் தூந்திர துருவ மான்களின் (R.t. sibiricus) கூட்டமே உலகின் மிகப்பெரிய காட்டு துருவ மான் கூட்டமாகும்.[3] இதில் உள்ள மான்களின் எண்ணிக்கை 4,00,000-10,00,000 ஆகும். மனிதர்கள் மத்திய பிளாய்டோசீன் காலம் முதல் துருவ மான்களைச் சார்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவை இறைச்சி, தோல், கொம்புகள், பால் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்காகப் பயன்படுகின்றன. ஆண், பெண் இரண்டிற்குமே கொம்புகள் வளர்கின்றன. பொதுவாக ஆண் துருவ மான்களின் கொம்புகள் பெரியவையாக உள்ளன. பிரபலமான கிறித்துமசு தாத்தாவின் வண்டியை இழுக்க இவை பயன்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

ரெயின்டீர்
புதைப்படிவ காலம்:பிளாய்டோசீன் 620,000 BP[1] முதல் இன்று வரை
Reinbukken på frisk grønt beite. - panoramio.jpg
நார்வேயில் ஒரு ரெயின்டீர்
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
குடும்பம்: மான்
து.குடும்பம்: புதிய உலக மான்
இனக்குழு: மான்
பேரினம்: ரெயின்டீர்
சி.எச்.ஸ்மித், 1827
இனம்: R. tarandus
இருசொற் பெயரீடு
Rangifer tarandus
(லின்னேயஸ், 1758)
Rangifer tarandus map.png
வட அமெரிக்க மற்றும் யூரேசியப் பகுதிகளாக ரெயின்டீர் வாழ்விடம் பிரிக்கப்பட்டுள்ளது.
வேறு பெயர்கள்

Cervus tarandus (லின்னேயஸ், 1758)

மேலும் படிக்கதொகு

உசாத்துணைதொகு

  1. Kurtén, Björn (1968). Pleistocene Mammals of Europe. Transaction Publishers. பக். 170–177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4128-4514-4. https://books.google.com/books?id=OsPBXSNL8ZkC&pg=PA170. பார்த்த நாள்: 6 August 2013. 
  2. Gunn, A. (2016). "Rangifer tarandus". IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T29742A22167140. http://www.iucnredlist.org/details/29742/0. பார்த்த நாள்: 24 July 2016. 
  3. Russell, D.E.; Gunn, A. (20 November 2013). Migratory Tundra Rangifer. 

நூல்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

கரீபு பற்றிய இணைப்புகள் (வட அமேரிக்கா)தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_மான்&oldid=2645139" இருந்து மீள்விக்கப்பட்டது