தென்னிந்திய உணவுக் கலாச்சாரம்

உணவுக் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.தென்னிந்திய உணவுக் கலாச்சாரத்தில் முதன்மை உணவு அரிசி.

தமிழக உணவுக் கலாச்சாரம் தொகு

தமிழக உணவுக் கலாச்சாரம் இடத்திற்கு இடம் சற்று மாறினாலும் முதன்மை அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சோறு மற்றும் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவு வகைகளே பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை உணவுக் கலாச்சாரம் தொகு

சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து மக்கள் வசிப்பதால் தனிக் கலாச்சாரமாக கூற இயலாது. இருப்பினும் மேலோட்டமாக பார்த்தால் பருப்பு அதிக அளவில் உணவில் பயன்படுத்த படுகிறது.வாழை பழங்களில் பச்சை வாழைப் பழம் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.

குமரி மாவட்ட உணவுக் கலாச்சாரம் தொகு

பெரும்பாலும் கேரள உணவுக் கலாச்சாரத்தோடு ஒத்துள்ளது.தேங்காய் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது. மீன் மற்றும் காய்கறிகள் அன்றாட உணவில் பயன்படுத்த படுகிறது.மரக்கறி(அவியல்),மீன் குழம்பு போன்றவை சிறப்பு மிக்கவை.சிற்றுண்டிகளில் ஏற்றங்காய் சிப்ஸ்,மோதகம் சிறப்பு மிக்கவை. நெய் மீன்,கிளாத்தி,நெத்தெலி,சாளை போன்ற பல்வேறு வகையான கடல் மீன்கள் உணவில் பயன்படுத்த படுகிறது.

கொங்கு நாட்டு உணவுக் கலாச்சாரம் தொகு

கொங்கு நாடு என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி.கொங்கு நாட்டு சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவது கம்பு, திணை, சாமை,சோளம் மற்றும் சம்பா கோதுமை இரவை.

கேரள உணவுக் கலாச்சாரம் தொகு

தேங்காய் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.

கர்நாடக உணவுக் கலாச்சாரம் தொகு

ஆந்திர உணவுக் கலாச்சாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு