தேஜ்பூர் பல்கலைக்கழகம்
தேஜ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் (Tezpur University) இந்தியாவின் 54 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 262 ஏக்கர் பரப்பளவில், அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூர் நகரத்திற்கு கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது 21 சனவரி 1994 முதல் செயல்படுகிறது.[3]
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | சிறப்பு அறிவு படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது |
---|---|
வகை | மத்தியப் பல்கலக்கழகம் |
உருவாக்கம் | 21 சனவரி 1994 |
வேந்தர் | அசாம் ஆளுநர் [1] |
துணை வேந்தர் | வினோத் குமார் ஜெயின்[2] |
அமைவிடம் | , இந்தியா 26°41′47.544″N 92°50′6.09″E / 26.69654000°N 92.8350250°E |
நிறங்கள் | |
இணையதளம் | www |
மாணவர் சேர்க்கை
தொகு2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி 2022 - 2023 கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்கை நடத்தப்படுகிறது.[4]
வழங்கும் படிப்புகள்
தொகுதேஜ்பூர் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியலில் உள்ள நான்கு துறைகளில் 27 வகையான படிப்புகள் வழங்குகிறது.
துறைகள்
தொகு- அறிவியல் துறை
- மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை
- மேலாண்மை துறை
- பொறியியல் துறை
அறிவியல் துறை படிப்புகள்
தொகுஅறிவியல் துறையில் ஆறுவகையான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் கொண்டுள்ளது.
- வேதியல் படிப்புகள்
- கணிதவியல் படிப்புகள்
- உயிரியல் மற்றும் உயிர்தொழில்நுட்பப் படிப்புகள்
- மருந்தியல் படிப்புகள்
- இயற்பியல் படிப்புகள்
- சூழலியல் அறிவியல் படிப்புகள்
மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை படிப்புகள்
தொகுஇத்துறையில் பட்டய, இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்குகிறது.
- அசாமிய மொழி
- பண்பாட்டுப் படிப்புகள்
- ஆங்கில மொழி
- இந்தி மொழி
- வெளிநாட்டு மொழிகள்
- மக்கள் தொடர்பு மற்றும் இதழியல்
- சமூகவியல்
- சமூகப் பணி
- கல்வியியல்
- சட்டப் படிப்புகள்
- மேலாண்மைக் கல்வியில் வணிக நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் வணிகப் படிப்புகள்
பொறியியல் துறை படிப்புகள்
தொகுபொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்ப படிப்புகள் வழங்குகிறது. [5]
- கணினி அறிவியல் & பொறியியல்
- வடிவமைப்பு பொறியல்
- மின பொறியியல்
- மின்னணு & தகவல் தொடர்பு பொறியியல்
- இயந்திரப் பொறியியல்
- உணவுப் பொறியியல் & தொழில்நுட்பம்
- கட்டிடப் பொறியல்
- எரிசக்தி பொறியியல்
- பயன்பாட்டு அறிவியல் (Applied Sciences)
மையங்கள் மற்றும் நுண் குழுக்கள்
தொகு- மையங்கள்
- அழிவில் உள்ள மொழிகளை வளர்க்கும் மையம் (Centre for Endangered Languages)
- பன்னோக்கு ஆய்வு மையம்
- கற்பித்தல் & கற்றல் மையம்
- புதுமை வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மையம்
- மகளிர் படிப்புகள் மையம்
- உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மையம்
- நுண் குழுக்கள்
- ஆய்வு & வளர்ச்சிக் குழு (R & D)
- அறிவுசார் சொத்துரிமை குழு
- DBT நோடல் மையம் [6]
- ஒ என் ஜி சி க்கான பெட்ரேலிய உயிர்தொழில் நுட்ப மையம்
- உயிர் தகவலியல் உள்கட்டமைப்பு வசதி (Bioinformatics Infrastructure Facility)
- நிறுவன பயோடெக் முனையம் Institutional Biotech Hub)
- உள் தர உறுதிப் பிரிவு (Internal Quality Assurance Cell)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Chancellor, Tezpur University, INDIA". பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
- ↑ ex-professor Vinod Kumar Jain appointed as Tezpur University VC[தொடர்பிழந்த இணைப்பு] Retrieved on 16 February 2018.
- ↑ "Act. No. 45, 1: The Tezpur University Act, 1993". பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
- ↑ CUET in July for UG admissions to central universities, Class 12 marks won’t count
- ↑ "List of Participating Institutes" (PDF). Central Counselling Board. 9 June 2011. Archived from the original (PDF) on 26 June 2011. பார்க்கப்பட்ட நாள் 15 June 2011.
- ↑ DBT Nodal Centre
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Know More About Tezpur பரணிடப்பட்டது 2020-07-20 at the வந்தவழி இயந்திரம்