தோப்பூர் சீதாபதி சதாசிவன்

இந்திய தாவர நோயியல் நிபுணர்

தோப்பூர் சீதாபதி சதாசிவன் (Toppur Seethapathy Sadasivan) (1913-2001) ஒரு இந்திய தாவர நோயியல் நிபுணர், சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை மற்றும் தாவரவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஆவார்.[1] அவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தாவர நோயியல் மற்றும் அறிவியல் பிரிவை துவக்கியதற்காக மிக உயர்ந்த இந்திய விருதான, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.[2] அவர் இந்திய தேசிய விஞ்ஞான கழகம் மற்றும் இந்திய தாவரவியல் சங்கம் மற்றும் அறிவியல் லியோபோல்டினா கழகத்தின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். 1974 ஆம் ஆண்டில், அவருக்கு அறிவியல் அறிஞர்களுக்கான இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயர்ந்த கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[3]

தோப்பூர் சீதாபதி சதாசிவன்
பிறப்பு(1913-05-22)22 மே 1913
சைதாப்பேட்டை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு18 ஆகத்து 2001(2001-08-18) (அகவை 88)
மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதாவர நோயியல் அறிஞர்
அறியப்படுவதுபூஞ்சையியல் தாவர நோயியல் ஆராய்ச்சிக்காக
விருதுகள்பத்ம பூசண்
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
இந்திய தாவரவியல் கழக பீர்பால் சகானி பதக்கம்

இந்திய தேசிய அறிவியல் கழகம் வழங்கிய சுந்தர் லால் ஹோரா பதக்கம்
பீர்பால் சகானி நினைவுப் பதக்கம்

சுயசரிதை

தொகு
 
மாநிலக் கல்லூரி, சென்னை

தோப்பூர் சதாசிவன் 1913 மே 22 அன்று சென்னை மாகாணத்தில் சைதாப்பேட்டையில் பிறந்தார். கனகம்மாள் என்பவருக்கும்,அவரது சேதுபதி என்பருக்கும் மகனாகப் பிறந்தார். சேதுபதி "கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்" முதல் இயக்குநராக பொறுப்பு வகித்தவர் ஆவார்.[4] பி.எஸ். முதுநிலை மேல்நிலைப் பள்ளியில் அவரது பள்ளிப்படிப்பு இருந்தது,1934 ஆம் ஆண்டுஅவர் பின்னர் சென்னை, மாநிலக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டமும் இலக்னோ பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், இவர் பீர்பால் சகானியின் அறிவுறுத்தலின்படி பல்லோபொட்டானிஸ்ட் பயிற்சியினை படித்து, எஸ். என். தாஸ் குப்தாவின் கீழ் அவரது முனைவர் ஆராய்ச்சியை தொடங்கினார்.[5] மேலும், 1940 ஆம் ஆண்டில் எஃப். சி. பாவ்டன் மற்றும் எஸ்.டி. கெரட் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1941 ஆம் ஆண்டில், ஒரு நுண்ணுயிரியலாளராக தனது தொழிலை தொடங்க லாய்பூர் (தற்போதைய வேளாண்மை பல்கலைக்கழகம், பைசலாபாத் ) பஞ்சாப் விவசாயக் கல்லூரியில் சேர்ந்தார்.[6] . பின்னர், அவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் ஆய்வுக்கூடத்திற்கு மாறியதுடன், 1944 இல் அதன் இயக்குனராக இருந்த எம். ஓ. பி. ஐயங்காருக்கு அடுத்து இவர் அதன் பொறுபேற்றார்.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Deceased Fellow". Indian National Science Academy. 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  2. "Brief Profile of the Awardee". Council of Scientific and Industrial Research. 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  4. "He promoted experimental botany in an inter-disciplinary manner". Madras Musings. 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  5. 5.0 5.1 "Elected Fellow" (PDF). Indian National Science Academy. 2016. Archived from the original (PDF) on 27 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "T. S. Sadasivan – a centennial remembrance" (PDF). Current Science. 1972. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.