தௌந்து தாலுகா

(தௌந்து தாலுக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தௌந்து தாலுக்கா (Daund taluka) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் 15 தாலுக்காக்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் தௌந்து நகரம் ஆகும். புனே நகரத்திற்கு கிழக்கே 80 கிமீ (50 மைல்) தொலைவில் தௌந்து நகரம் உள்ளது.

தௌந்து தாலுகா
दौंड तालुका
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்ட வரைபடத்தில் தௌந்து தாலுக்காவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்ட வரைபடத்தில் தௌந்து தாலுக்காவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°27′47″N 74°34′44″E / 18.4631°N 74.5789°E / 18.4631; 74.5789
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
தலைமையிடம்தௌந்து
அரசு
 • மக்களவை உறுப்பினர்சுப்ரியா சுலே
 • சட்டமன்ற உறுப்பினர்ராகுல் சுபாஷ் குல்
பரப்பளவு
 • தாலுக்கா1,290 km2 (500 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • தாலுக்கா3,80,496
 • அடர்த்தி290/km2 (760/sq mi)
 • நகர்ப்புறம்
56,436
புனே மாவட்டத்தின் 15 வருவாய் வட்டங்கள்

4 நடைமேடைகளைக் கொண்ட தௌந்து தொடருந்து நிலையம் மேற்கே புனே, மும்பை நகரங்களையும், தெற்கே சென்னை, பெங்களூர், மதுரை போன்ற நகரங்களையும், வடகிழக்கே போபால் நகரத்தையும் இணைக்கிறது. மேலும் புனே புறநகர் தொடருந்துகள் தௌந்து நகரத்தின் வழியாக பாராமதி வரை செல்கிறது.[2] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1290 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தௌந்து வருவாய் வட்டம், 3,80,496 மக்கள்தொகை கொண்டுள்ளது. தௌந்து நகரத்திற்கு 14 கி. மீ தொலைவில் புகழ்பெற்ற சித்தாடெக் சித்தி விநாயகர் கோயில் உள்ளது.

குளிர்காலத்தில் தௌந்து வட்டத்தின் வெப்ப நிலை 19 முதல் 20℃ வரை இருக்கும். இவ்வருவாய் வட்டத்தின் முக்கியப் பணப்பயிர் கரும்பு ஆகும். இவ்வட்டடத்தில் 3 கரும்பாலைகள் உள்ளது. இவ்வட்டத்திற்கு பீமா ஆறு மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜானி நீர்த்தேக்கம் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தௌந்து வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,80,496 ஆகும். அதில் ஆண்கள் 1,96,283 மற்றும் 184,213 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 939 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 46,713 (12%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.09% ஆக உள்ளது. இவ்வருவாய் வட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 57,273 மற்றும் 9,673 ஆக உள்ளனர்.

மக்கள்தொகையில் இந்துக்கள் 3,46,459 (91.05%), பௌத்தர்கள் 4,101 (1.08%), இசுலாமியர் 20,909 (5.5%), சமணர்கள் 2,251 (0.59%), கிறித்தவர்கள் 5,158 (1.36%) மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு


வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌந்து_தாலுகா&oldid=3718354" இலிருந்து மீள்விக்கப்பட்டது