தௌந்து
தௌந்து (Daund) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், தௌந்து தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் மற்றும் நகராட்சி ஆகும். சென்னையிலிருந்து புனே செல்வதற்கு முன் அமைந்த தௌந்து தொடருந்து நிலையம் பெரியதாகும். தௌந்து நகரம் பீமா ஆற்றின் கரையில் உள்ளது. புனே நகரத்திற்கு கிழக்கில் 82 கிலோ மீட்டர் தொலைவில் தௌந்து நகரம் உள்ளது.
தௌந்து | |
---|---|
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் தௌந்து நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°27′47″N 74°34′44″E / 18.46306°N 74.57889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே |
ஏற்றம் | 514 m (1,686 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,02,566 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 413801 , 413802 |
தொலைபேசி குறியீடு | 02117 |
வாகனப் பதிவு | MH12,42 |
இணையதளம் | www |
புவியியல்
தொகுதௌந்து நகரம் 18°28′N 74°36′E / 18.47°N 74.6°E பாகையில், தக்காண பீடபூமியின் மேற்கில், கடல் மட்டத்திலிருந்து 514 மீட்டர் உயரத்தில், பீமா ஆற்றுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 80 கிமீ தொலைவில் உள்ளது. தௌந்து நகரத்திற்கு தென்கிழக்கில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உஜ்ஜானி நீர்த்தேக்கம் உள்ளது.
பொருளாதாரம்
தொகுதௌந்து நகரத்திற்கு வெளியே கோதுமை, கரும்பு, ஆரஞ்சு, இனிப்பு எலுமிச்சைப் பழம் பயிரிடப்படுகிறது. மேலும் சர்க்கரைத் தொழிற்சாலைகளும் உள்ளது. தௌந்து நகரத்தில் சிப்லா, போன்ற மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.
போக்குவரத்து
தொகுதொடருந்து நிலையம்
தொகுமத்திய இந்தியா மற்றும் சென்னை, பெங்களூரு, புனே வழியாக மும்பை செல்லும் அனைத்து தொடருந்துகளும் தௌந்து சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[1] மேலும் புனேவிலிருந்து அகமத்நகர் செல்லும் தொடருந்துகள் தௌந்து வழியாகச் செல்கிறது.
புனே புறநகர் ரயில்வேயின் மின்சார தொடருந்துகள், புனேவிலிருந்து தௌந்து வழியாக பாராமதி வரை செல்கிறது
சாலைகள்
தொகுதௌந்து நகரத்திற்கு 9 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 9 கடந்து செல்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தௌந்து நகராட்சியின் மொத்த மக்கள்தொகை ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் , இசுலாமியர் , பௌத்தர்கள் , சமணர்கள் , கிறித்தவர்கள் மற்றும் பிறர் ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு