தௌலி கங்கை ஆறு
தௌலி கங்கை ஆறு (Dhauliganga) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள இமயமலையில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், கங்கை ஆற்றின் 6 துணை ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். ஜோஷி மடத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, ரிஷி கங்கை ஆறு, தௌலி ககை ஆற்றுடன் கலக்கிறது. விஷ்ணுபிரயாகையில் தௌலி கங்கை ஆறு, அலக்நந்தா ஆறுடன் கலக்கிறது. தௌலி கங்கை ஆற்றின் கரையில் தபோவனம் எனும் சிற்றூர் உள்ளது.[1]
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ [https://www.euttaranchal.com/uttarakhand/dhauliganga-river-garhwal Dauli Ganga River - Garwal}
ஆள்கூறுகள்: 30°33′N 79°35′E / 30.550°N 79.583°E